Wednesday, January 4, 2012

வை திஸ் கொலவெறி சமீரா? - பஸ்ல உட்கார்ந்து யோசிச்சது!புத்தாண்டில முதல் பஸ் பயணம் அமோகமா வெடியோட ஆரம்பிச்சுது! அதாவது பஸ்ல வெடி காவியத்தைப் பார்க்க நேர்ந்தது!

சமீரா ரெட்டி - விஷாலைவிட வாட்டசாட்டமா இருந்தாங்களா, அப்பத்தான் தோணிச்சு, உண்மையிலேயே விஷாலின் தங்கச்சி காரெக்டருக்கு சமீராதான் பொருத்தம்னு. ஹீரோயினா சமீரா...பேசாம விஷாலே நடிச்சிருக்கலாம்!

வாரணம் ஆயிரம் படத்தை தனித்தனியா சிறு சிறு காட்சிகளாக எனக்கு மிகப் பிடித்திருந்தது. அவ்வளவு அழகான காட்சியமைப்புகள் அதில் சமீராவும் அழகாக இருந்ததில் ஆச்சரியமில்லை. அதை நம்பி? 
அசல் படத்தின் பல சிறப்பம்சங்களில்(?!) சமீராவுக்கும் தனியிடம் உண்டு!

சமீராவை 2000 ஆண்டில் சிட்டிசன் படத்தில் நடிப்பதற்கு அழைத்து வருவதாகப் பேச்சிருந்தது. அது நடக்கவில்லை. ஆனால் இவ்வளவு வருஷம் கழிச்சு 'வாரணம் ஆயிரம்'  மூலமா தமிழ் நாட்டுக்கு வருவாரென்று அவரே நினைத்திருக்கமாட்டார். ஒருவேளை இதைத்தான் விதி வலியது என்று சொல்லுவாங்களோ? சில விஷயங்களை கொஞ்சம் தள்ளிப் போடலாம்! ஆனா முழுசா தப்பிக்க முடியாது!

சமீரா சிரிக்கும்போது கூட அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். ஆனா வெட்கப்படும்போதுதான் ஓடுற பஸ்லருந்து குதிச்சிடலாம் போல இருந்திச்சு!   

அதென்னமோ தெரியல! வெடில சமீராவைப் பார்க்கும் போது நம்ம பொன்னம்பலம் ஞாபகம் வந்திச்சு! நல்ல நடிகர் இப்போ காண முடியிறதில்ல!


அப்புறம் ஒரு விஷயம் ரொம்ப ஆச்சரியமா இருந்திச்சு! விஷாலுக்கும் எனக்கும் இருக்கிற ஒரு ஒற்றுமை! என்னன்னா ரெண்டு பேருக்குமே பஸ் பிரயாணம் ஒத்துவருதில்ல! அதில பாருங்க நான் பஸ்ல போனா எனக்கு மட்டும்தான் கொடுமையான அனுபவமா இருக்கு! ஆனா விஷால் பஸ்ல ஏறிப்போனா நம்ம எல்லாருக்குமே...

புது வருஷத்திலயாவது விஷால் பஸ்ல ஏறி அடுத்த ஊருக்குப் போறதை நிறுத்திட்டா நம்ம எல்லாருக்குமே நல்லது! நாங்களும் எவ்வளவுதான் தாங்குறது?

அதையெல்லாம் விட முக்கியமா ஒண்ணு தோணிச்சு! சமீரா ரெட்டி ஏன் ஹீரோவா நடிக்கக்கூடாது? ரொம்ப நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன். ஆண்கள் மட்டும்தான் பெண்வேஷம் போடணுமா? பெண்கள் ஆண்வேஷம் போடக்கூடாதா? அப்பிடின்னா அது ஆணாதிக்கம் இல்லையா?

ஜீ பெண்களை மிகவும் மதிப்பவன்,அன்பு அக்கறை,மரியாதையை கொண்டவன் என்ற வகையில் இந்தக் கேள்வியை சமூகத்தை நோக்கிக் கேக்கிறான்! நல்லா பாத்துக்குங்க! நம்மளுக்கும் சமூக அக்கறை இருக்கு!

********

நேற்று தெஹிவல - வெள்ளவத்தை பஸ்ல போகும்போது, பக்கத்தில இருந்த ஒரு சிங்கள அங்கிள்/தாத்தா அரசியல் பேச ஆரம்பிச்சார். தமிழ்ல அரசியல் பேசினாலே பாதி புரியாது. இதுல எனக்கு சும்மாவே சிங்களம் தெரியாது! ஆனா அவர் ரொம்ப நல்லவர். என்னை எதுவுமே கேக்கல! தானே தொடர்ந்து பேசிட்டு!ஒருவேளை இளமைக் காலத்தில மேடைப் பேச்சாளரா இருந்திருக்கலாம். 

நானும் வலிக்காத மாதிரியே பொத்தாம் பொதுவா 'ஸ்மைல்'லயே 'அருமை' கமென்ட் போட்டுட்டு, இறங்கி ஓடிட்டேன்! ஏழு மணித்தியாலப் பயணத்தில்தான் படுத்திராங்கன்னா, இப்பல்லாம் பத்து நிமிஷ பஸ் பயனத்திலுமா? ஆளாளுக்கு கொலவெறியாத்தான் அலையுறாங்க போல! 

*********

வை திஸ் கொலைவெறி ஹிட் ஆனதும் ஆச்சு! அதன் தொடர்ச்சியா நம்மாளுங்க பண்ற அலப்பறை இருக்கே...அதாவது தமிழை உலக வரலாற்றில முதன்முறையா கொலை பண்ணிடாங்களாம்! அதை கண்டிக்கிறாய்ங்களாம்! அதுக்கும் அதே பாட்டோட மெட்டுத்தான் தேவைப்படுது! முகப்புத்தகத்தில ஷேர் பண்ணி ஷேர் பண்ணி தமிழுணர்வைக் கொலைவெறியாக் காட்டுறாய்ங்க!     

அரைகுறைகளின் அலப்பறைகளைப் பார்க்கும்போது, 'நாராயணா இந்தக் கொசுத்தொல்லை தாங்க முடியலடா!'  

40 comments:

"என் ராஜபாட்டை"- ராஜா said...

/சமீரா சிரிக்கும்போது கூட அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். ஆனா வெட்கப்படும்போதுதான் ஓடுற பஸ்லருந்து குதிச்சிடலாம் போல இருந்திச்சு!

//

எனக்கும் தான் தல

"என் ராஜபாட்டை"- ராஜா said...

நண்பர்களே உங்கள் பார்வைக்கு இன்று ..


விஜய்யின் நண்பன் படப்பிடிப்பு காட்சிகள் .

Shanmugan Murugavel said...

//ஜீ பெண்களை மிகவும் மதிப்பவன்,அன்பு அக்கறை,மரியாதையை கொண்டவன் என்ற வகையில் இந்தக் கேள்வியை சமூகத்தை நோக்கிக் கேக்கிறான்! நல்லா பாத்துக்குங்க! நம்மளுக்கும் சமூக அக்கறை இருக்கு!//

ஹா ஹா

ஹாலிவுட்ரசிகன் said...

மிகவும் அருமையாக பதிவிட்டிருக்கீங்க ஜீ ...

நானும் கொழும்பில் இருந்த நேரங்களில் சில சமயம் இந்த மாதிரி அலப்பற கேசுகளிடம் மாட்டியதுண்டு. நானும் உங்கள் போல சிரித்தே சமாளிப்பது தான்.

MANO நாஞ்சில் மனோ said...

அதையெல்லாம் விட முக்கியமா ஒண்ணு தோணிச்சு! சமீரா ரெட்டி ஏன் ஹீரோவா நடிக்கக்கூடாது?//

அவ்வ்வ்வ்வ்வ்வ் முடியல...!!!

MANO நாஞ்சில் மனோ said...

அதையெல்லாம் விட முக்கியமா ஒண்ணு தோணிச்சு! சமீரா ரெட்டி ஏன் ஹீரோவா நடிக்கக்கூடாது?//

நான் மலையில இருந்து குதிக்கப்போறேன் வழிய விடுங்க....!!!

மருதமூரான். said...

ஹஹஹஹ!


///அதென்னமோ தெரியல! வெடில சமீராவைப் பார்க்கும் போது நம்ம பொன்னம்பலம் ஞாபகம் வந்திச்சு! நல்ல நடிகர் இப்போ காண முடியிறதில்ல!////

போங்க பாஸ்... நீங்க பொன்னம்பலத்தை அவமானப்படுத்திட்டீங்க.


///ஜீ பெண்களை மிகவும் மதிப்பவன்,அன்பு அக்கறை,மரியாதையை கொண்டவன் என்ற வகையில் இந்தக் கேள்வியை சமூகத்தை நோக்கிக் கேக்கிறான்! நல்லா பாத்துக்குங்க! நம்மளுக்கும் சமூக அக்கறை இருக்கு!////

பெண்கள் மீதான அக்கறை பிடித்திருக்கிறது!

////நானும் வலிக்காத மாதிரியே பொத்தாம் பொதுவா 'ஸ்மைல்'லயே 'அருமை' கமென்ட் போட்டுட்டு, இறங்கி ஓடிட்டேன்! ஏழு மணித்தியாலப் பயணத்தில்தான் படுத்திராங்கன்னா, இப்பல்லாம் பத்து நிமிஷ பஸ் பயனத்திலுமா? ஆளாளுக்கு கொலவெறியாத்தான் அலையுறாங்க போல! ////

பொத்தம் பொதுவாக சிரிப்பதில் கூட சிக்கல் வந்துவிடும். எவ்வளவு அவதானமாக இருந்து சிரிச்சு வைக்க வேண்டியிருக்கு. எனக்கும் அவ்வப்போது இந்த அனுபவம் இருக்கு.


////வை திஸ் கொலைவெறி ஹிட் ஆனதும் ஆச்சு! அதன் தொடர்ச்சியா நம்மாளுங்க பண்ற அலப்பறை இருக்கே...அதாவது தமிழை உலக வரலாற்றில முதன்முறையா கொலை பண்ணிடாங்களாம்! அதை கண்டிக்கிறாய்ங்களாம்! அதுக்கும் அதே பாட்டோட மெட்டுத்தான் தேவைப்படுது! முகப்புத்தகத்தில ஷேர் பண்ணி ஷேர் பண்ணி தமிழுணர்வைக் கொலைவெறியாக் காட்டுறாய்ங்க! ////

அறச்சீற்றத்தில் பொங்குகிறார்கள். அதை எப்படி தப்புச் சொல்லது. ஆமா....! யாழ்ப்பாணத் தமிழ் வளர்க்கிறாங்களாம்....!!

மதுமதி said...

சமீரா சிரிக்கும்போது கூட அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். ஆனா வெட்கப்படும்போதுதான் ஓடுற பஸ்லருந்து குதிச்சிடலாம் போல இருந்திச்சு!

சத்தியமா உண்மை..

Riyas said...

ஹா ஹா வெடி பார்த்து ரொம்பவே நொந்து போயிட்டிங்க போல.. ஏழு மணித்தியால பஸ் பயணம், எங்க யாழ்ப்பாணமா..?

சமீரா வாரணம் ஆயிரத்தில் அழகாத்தான் இருந்தா அதுக்கப்புறம்தான் ஹ்ம்ம்

//சமீரா ரெட்டி ஏன் ஹீரோவா நடிக்கக்கூடாது?// ஏன் பாஸ் இந்த கொலவெறி..? இருக்கிற ஹீரோ போதாதா!

எப்பூடி.. said...

விஷாலின் பஸ் காட்சிகளில் எனக்கு சண்டைக்கோழி பிடித்தமானது, அதில் யுவனின் bgm செமையா இருக்கும். அப்புறம் மலைக்கோட்டைக்கு பிறகு என்னை கட்டி வச்சு அடிச்சாகூட விஷால் படம் பாக்கிறதில்லை என்கிற முடிவில இருக்கிறதால வெடி பாக்கல :p

விஷாலைவிட கம்பீரமா இருக்கிற உசரமான சமீரா ரெட்டியை எப்படி சூர்யாக்கு ஜோடியாக்கினார் கவுதம் மேனன், அதுவும் பார்ப்பதற்கு சிறந்த ஜோடியாக !!!! :p

துஷ்யந்தன் said...

சமீரா புராணம் நல்லா இருக்குண்ணே.... ஹா ஹா

பிரேம் குமார் .சி said...

//தமிழை உலக வரலாற்றில முதன்முறையா கொலை பண்ணிடாங்களாம்! அதை கண்டிக்கிறாய்ங்களாம்! அதுக்கும் அதே பாட்டோட மெட்டுத்தான் தேவைப்படுது!//உண்மை தான் அன்பரே ஒரு தமிழன் புகழ் அடைவதை இன்னொரு தமிழன் விரும்புவதில்லை

துஷ்யந்தன் said...

அதென்னோவோ தெரில்ல எனக்கு சமீரா ஆண்டியை பிடிக்காது :((

அப்புறம் பஸ்சுக்குள்ள கொடுக்கிற இம்சைகள் இங்கேயும் அதிகம்.
இங்கேயும் கொஞ்ச தமிழ்ஸ் இருக்காங்க....

ரயின் பஸ்ல கண்டா...நீங்க தமிழா?? ஸ்ரீலங்காவா??? எப்போ வந்தீங்க??? படிக்கிறீங்களா??? அப்புறம் அரசியல்........ அவ்வ்வவ்வ்

என்ன ஒரு கொலை வெறி :(

தர்ஷன் said...

அந்த யாழ் வேர்ஷன் கொலைவெறியில் எனக்கும் ஏகக் கடுப்புத்தான்
இதுக்கு எங்கூர்ல வயித்தெரிச்சல்ன்னு சொல்வாங்க, மற்றவன் புகழ் அடைந்ததை பொறுக்காது அதே மெட்டில் அதை திட்டி பாடி சொற்ப புகழுக்காக இவர்கள் செய்வதுக்கு பேர்தான் தமிழ் பற்றா? ஞாயமா இவங்க தனுஷ கோயில் கட்டி கும்பிடலாம். யாரு பெத்த புள்ளைங்களோ தனுஷ் புண்ணியத்துல நாலு பேருக்கு தெரிஞ்சிடுச்சி இல்ல.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சமீராவையும் விட்டு வெக்கலியா? புள்ள நல்லாத்தானே இருக்குது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஜீ பெண்களை மிகவும் மதிப்பவன்,அன்பு அக்கறை,மரியாதையை கொண்டவன் என்ற வகையில் இந்தக் கேள்வியை சமூகத்தை நோக்கிக் கேக்கிறான்! நல்லா பாத்துக்குங்க! நம்மளுக்கும் சமூக அக்கறை இருக்கு!
//////

புதுசா ஒண்ணு ரெண்டு பொண்ணுங்க இந்தப்பக்கம் எட்டிப்பாத்திருந்தாலும் இனி வர மாட்டாங்க.....!

KANA VARO said...

ஐயையோ வெடியை நீங்களும் பார்த்திட்டீங்களா?

Vimalaharan said...

//
அதை கண்டிக்கிறாய்ங்களாம்! அதுக்கும் அதே பாட்டோட மெட்டுத்தான் தேவைப்படுது! முகப்புத்தகத்தில ஷேர் பண்ணி ஷேர் பண்ணி தமிழுணர்வைக் கொலைவெறியாக் காட்டுறாய்ங்க!
//

ஜீ, நீங்களும் ஷேர் பண்ணிடுங்கோ.. இல்லை என்றால் இப்போதைய Trendஇன் படி நீங்கதான் தமிழின் முதல் எதிரி :)..

நிரூபன் said...

வணக்கம் நண்பா,

சமீரா ரெட்டியின் வெட்கத்தில் ரொம்பத் தான் தொலைந்திருக்கிறீங்க.
பஸ் பயணத்தில் அரசியல்...செம கொடுமையாக இருந்திருக்குமே.


அப்புறமா கொல வெறி பாட்டு....
இந்தச் செயலை நானும் கண்டிக்கிறேன். ஒருத்தன் பாடல் எழுதிய உடன் எம்மவர்களுக்கும் தமிழ்ப் பற்று வருகிறது! ஹே...ஹே..

வாழ்க தமிழ் பாஸ்.

ஜீ... said...

//மருதமூரான். said...
பெண்கள் மீதான அக்கறை பிடித்திருக்கிறது!//
பிடிச்சிருக்கா சரிதான்! அப்பிடித்தான் பேசிக்கிறாய்ங்க! :-)

ஜீ... said...

//Riyas said...
ஹா ஹா வெடி பார்த்து ரொம்பவே நொந்து போயிட்டிங்க போல.. ஏழு மணித்தியால பஸ் பயணம், எங்க யாழ்ப்பாணமா..?//
கொழும்பு - திருகோணமலை பாஸ்!

ஜீ... said...

//எப்பூடி.. said...
விஷாலின் பஸ் காட்சிகளில் எனக்கு சண்டைக்கோழி பிடித்தமானது, அதில் யுவனின் bgm செமையா இருக்கும்//

சண்டைக்கோழி எனக்கும் பிடிக்கும். எல்லோருக்கும் பிடிச்சிருந்தது அதனாலதான் வில்லங்கமே ஆரம்பிச்சுது!

//விஷாலைவிட கம்பீரமா இருக்கிற உசரமான சமீரா ரெட்டியை எப்படி சூர்யாக்கு ஜோடியாக்கினார் கவுதம் மேனன், அதுவும் பார்ப்பதற்கு சிறந்த ஜோடியாக !!!! :p//

ஆச்சரியம்தான்! அதான் கவுதம் மேனன் ஸ்டைல் இல்லையா? சிம்புவையே....

ஜீ... said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
சமீராவையும் விட்டு வெக்கலியா? புள்ள நல்லாத்தானே இருக்குது?//
மாம்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கா? சொல்லிட்டிட்டீங்கல்ல?
இனி எவன் கதைக்கிறான்னு பாத்துடுவோம்! :-)

ஜீ... said...

//தர்ஷன் said...
ஞாயமா இவங்க தனுஷ கோயில் கட்டி கும்பிடலாம். யாரு பெத்த புள்ளைங்களோ தனுஷ் புண்ணியத்துல நாலு பேருக்கு தெரிஞ்சிடுச்சி இல்ல//
இத அங்கயே (facebook) போடலாம் போல இருக்கே! சூப்பர் பாஸ்! :-)

ஜீ... said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
புதுசா ஒண்ணு ரெண்டு பொண்ணுங்க இந்தப்பக்கம் எட்டிப்பாத்திருந்தாலும் இனி வர மாட்டாங்க.....!//
நல்லாத்தானே எழுதியிருக்கோம்! இந்த உலகம் உன்னைத் தப்பாவே பாக்குதுடா ஜீ! :-(

ஜீ... said...

//Vimalaharan said...
ஜீ, நீங்களும் ஷேர் பண்ணிடுங்கோ.. இல்லை என்றால் இப்போதைய Trendஇன் படி நீங்கதான் தமிழின் முதல் எதிரி :)..//
இது வேறையா? அப்பிடீன்னா நான் சந்தோஷமா தமிழின எதிரியா இருக்கிறேன்! :-)

விக்கியுலகம் said...

யோவ் எது நீ மதிக்கறியா...ஸ்ஸ் நான் நம்ப மாட்டேன் ஹிஹி..என்னா ஒரு வில்லத்தனம் இருந்தா அந்த ஜிம் லேடிய கிண்டல் பன்னி இருப்பே கொய்யால...கொலவெறி பாட்டு மூலமா எதிர்ப்பு தெரிவிச்சி பலர் பிராப்ளம் ச்செ பிரபளம் ஆகராங்க..மன்னுவே உக்கார வச்சி சோறு போட்டு அனுப்பிச்சிட்டாரு(சப்பாத்தி!)..இதுல எதுக்குமே வாய் திறக்காத அவரு சுள்ளான் கிட்ட பேசியதே உலக சாதனை!

ஜீ... said...

//விக்கியுலகம் said...
யோவ் எது நீ மதிக்கறியா...ஸ்ஸ் நான் நம்ப மாட்டேன் ஹிஹி..என்னா ஒரு வில்லத்தனம் இருந்தா அந்த ஜிம் லேடிய கிண்டல் பன்னி இருப்பே//

எது ஜிம் லேடியா? ஜிம் பாய்ஸ் ன்னு தானே கேள்விப்பட்டிருக்கோம்! ஆகா மாம்ஸ் ரொம்பக் கேவலப்படுத்திட்டார் சமீரா அக்காவை! :-)

Yoga.S.FR said...

வணக்கம் ஜி! நல்லாயிருந்திச்சு!அந்த மேல இருக்கிற போட்டோ தான் சமீராவா?பாக்க லட்சணமாத்தானே இருக்கிறா?ஏன் உப்புடிக் கரிச்சுக் கொட்டு றியள்????பாவமில்ல?

ஜீ... said...

//Yoga.S.FR said...
வணக்கம் ஜி! நல்லாயிருந்திச்சு!அந்த மேல இருக்கிற போட்டோ தான் சமீராவா?பாக்க லட்சணமாத்தானே இருக்கிறா?//

இந்தப்படத்தில ஒக்கே பாஸ்! ஆனா படத்தில பாத்தீங்கன்னா...'வெடி'யப் பாக்க வச்சு சாவடிச்சிட்டாங்க! முடியல!

! சிவகுமார் ! said...

வெடியை பத்தி பேசாதீங்க. இன்னும் வெறியா இருக்கேன். வேட்டை பாக்கணும். சமீரா..அவ்வ்!!

திகட்ட திகட்ட கொலவெறி..ஒருவித சலிப்பை உண்டாக்கி விட்டது.

பி.அமல்ராஜ் said...

//சமீரா சிரிக்கும்போது கூட அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். ஆனா வெட்கப்படும்போதுதான் ஓடுற பஸ்லருந்து குதிச்சிடலாம் போல இருந்திச்சு!//

சேம் பீலிங் பாஸ்... அருமையா புகழ்ந்திருக்கீங்க.. ஹி ஹி..

//அதையெல்லாம் விட முக்கியமா ஒண்ணு தோணிச்சு! சமீரா ரெட்டி ஏன் ஹீரோவா நடிக்கக்கூடாது?//

இதவிட சமீராவ புகழுறதுக்கு ஒண்ணுமே தேவையில்ல பாஸ்.. என்னமா ஜோசிக்கிறீங்க?? பட், நீங்க ஜோசிக்கிறது நூறு வீதம் சரிதான்.

சென்னை பித்தன் said...

//வெடில சமீராவைப் பார்க்கும் போது நம்ம பொன்னம்பலம் ஞாபகம் வந்திச்சு! //
ஒய் திஸ் கொலவெறி!ஹா,ஹா.

Yoga.S.FR said...

ஐயாவே வை திஸ் கொலைவெறி அப்புடிங்குறாருன்னா........................!

Yoga.S.FR said...

கவுண்டமணி சொன்னாப்புல,கோழி குருடாயிருந்தா.....................................?!

அம்பலத்தார் said...

ஜீ வரவர உங்க பதிவுகளில் வித்தியாசத்தை உணரமுடிகிறது. மெருகேறிய எழுத்துக்கள் மேலும் சுவாரசியமாக இருக்கிறது.

சிவகுமாரன் said...

சமீராவுக்கு என்ன குறைச்சல்?. மொதல்ல கண் டாக்டர்கிட்ட போங்க ஜீ.

ஜீ... said...

//அம்பலத்தார் said...
ஜீ வரவர உங்க பதிவுகளில் வித்தியாசத்தை உணரமுடிகிறது. மெருகேறிய எழுத்துக்கள் மேலும் சுவாரசியமாக இருக்கிறது//

அப்பிடியா சொல்றீங்க?
மொக்கை போடுறேன்னு மானாவாரியா திட்டுறாய்ங்க பாஸ்! :-)

ஜீ... said...

//சிவகுமாரன் said...
சமீராவுக்கு என்ன குறைச்சல்?. மொதல்ல கண் டாக்டர்கிட்ட போங்க ஜீ//

(அண்ணனுக்கும் பிடிக்கும் போல)
விடுங்க பாஸ்! இனி எவன் கதைக்கிறான்னு பாத்துடுவோம்!

theepr said...

இந்த பெண்களுக்கும் தமிழுக்கும் வாழ்வு கொடுக்கிறவங்க பண்ற அளபற(அளப்பரிய?)தாங்க முடியல!