Sunday, January 1, 2012

2012, பெண்களைக் கவர, குறுகிய காலத்தில் சிவப்பழகு பெற!


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

கடந்த ஆண்டும் வழக்கம் போல ஆப்புகள், பல்புகள், வலிகள், ஏமாற்றங்கள், என ரொம்ப ஜாலியா போச்சு! ஆனா அதுக்கு முதல் வருஷத்தோட ஒப்பிடுகையில் எவ்வளவோ பரவாயில்லை என்பதால் அந்தளவுக்கு enjoy பண்ண முடியல!

குறிப்பா யாருமே நம்பிக்கைத் துரோகம் பண்ணல! ஏன்னா நான்தான் யாரையும் நம்பவே இல்லயே! யாருகிட்ட?

அப்புறம் 2012 ல உலகம் அழிஞ்சிடும்னு வேற சொல்றாங்க. இல்லைன்னும் சொல்றாங்க! 2000 ல கூட ஒரு குறூப் இப்பிடிச் சொன்னதா ஞாபகம். ஆனா அதை யாருமே நம்பல! காமெடியாத்தான் எடுத்துக்கிட்டாங்க! ஆனா இந்த முறை கொஞ்சம் பீதியா இருக்காங்க போல!

எப்படியும் 2013 புதுவருட வாழ்த்துச் சொல்வேன் என்ற நம்பிக்கையுடன், அடுத்த வினாடி ஒளித்துவைத்திருக்கும் ஏராளமான ஆப்புக்களை எதிர்கொள்ளும் மன தைரியத்துடன் ஜீ..!

பெண்களைக் கவர
புத்தாண்டில புதுசா ஏதாவது செய்யணுமேன்னு யோசிக்கும்போது ஒரு விஷயம் தோணிச்சு!

நம்மளுக்கும் பொண்ணுங்களுக்கும் ஆவுறதில்ல என்கிறது தெரிஞ்ச விஷயம்தான்! ஆனா நம்ம பதிவுகளையும் பொண்ணுங்க யாரும் படிக்கிறதில்ல என்கிற அதிர்ச்சிகரமான உண்மை ரொம்ப லேட்டா இப்பதான்  தெரிஞ்சுது!

அதனால பெண்களைக் கவர, எதைப்பற்றி எழுதலாம்னு தீவிரமா உட்கார்ந்து யோசிச்சு, பயனுள்ள இந்த அழகுக் குறிப்பை சமர்ப்பிக்கிறேன். (இனி வரும் காலங்களில் பதிவுலக நண்பர்கள் தங்கள் அக்காக்கள், தங்கைகள், நண்பிகள், காதலிகள் எல்லாருக்கும் எனது தளத்தை பரிந்துரைப்பார்கள் என்பதில் ஐயமேதுமில்லை!)

குறுகிய காலத்தில் சிவப்பழகு பெற..!


இது மிக எளிமையான வழி! வீட்டிலேயே செய்து கொள்ளலாம்!
முதலில் கொஞ்சம் கடலை மாவில் தண்ணீரைக் கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் பூசி இரண்டு நிமிடங்களின் பின் குளிர்ந்த நீரால் கழுவவும்!
சுத்தமாகத் துடைத்த பின்னர் கால் டம்ளர் தயிர் எடுத்துக் கொள்ளவும். நாலைந்து டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் நன்றாக 'அப்ளை' பண்ணிக் கொள்ளவும்!
பின்னர் இரண்டு விரல்களால் முகத்தின் கீழிருந்து மேலாக, வட்ட வடிவமாக மெதுவாக மசாஜ் செய்து கொள்ளவும்!
அடுத்து கண்கள்! - இப்போது இன்னொருவரின் உதவி தேவை! அவர் செய்ய வேண்டியது!
இரண்டு வட்ட வடிவமாக 'கட்' பண்ணிய வெள்ளரித் துண்டுகளை எடுத்து கண்களை மூடி வைத்துக் கொள்ளவும்! 
கண்களின் பிரகாசத்துக்கு இடையூறின்றிய ஆழ்ந்த தூக்கம் பெரிதும் உதவும் என்பதால், மூன்று தூக்க மாத்திரைகளை கொடுத்துக் குடிக்கச் செய்யவும்!
பின்னர் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று எறும்புகள் நடமாட்டம் உள்ள பகுதியில் படுக்க வைத்து...

இன்னுமா படிச்சுட்டு இருக்கீங்க? போங்க போய் முதல்ல காலைல போட்ட மேக்கப்ப கலைங்க!

அழகுக்குறிப்புன்னு எதை சொன்னாலும், எதை வேணும்னாலும் முகத்தில 'அப்ளை' பண்ண எப்பவுமே ஒரு கூட்டம் ரெடியா இருக்குமோ? பத்திரிகைகள், புத்தகங்களில் மாறி மாறி சலிக்காம வந்துட்டே இருக்கிறதைப் பார்த்தா அப்பிடித்தான் தோணுது!

*********
நம் நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒரு சிறு பெண்ணிடம் அறிவிப்பாளினி கேட்டார்,
' நீங்க வளர்ந்து என்னவா வர விரும்புறீங்க?'
'அழகுக் குறிப்பு நிபுணரா வர'
'அது அழகுக் குறிப்பு நிபுணர் இல்லம்மா, அழகுக் கலை நிபுணர்' சிரித்துக் கொண்டே திருத்தினார்.
ஒரு வேளை அந்தப்பொண்ணு தெளிவாத்தான் சொல்லிச்சோ என்னவோ, நாட்டில அழகுக் குறிப்பு நிபுணர்கள் எக்கச்சக்கமா இருக்கிறார்கள்!

விட்றா! விட்றா!
போன வாரம் என்னை ஒரு பொண்ணு முறைச்சுப் பார்த்திச்சு! 

பொதுவா பொண்ணுங்க நம்மளைப் பார்த்தாலே முறைச்சுத்தான் பாப்பாய்ங்க! அதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல! ஆனா இது ரொம்ப வித்தியாசமா, கொடூரமா,சரி பச்சையா சொல்லப்போனால் ரொம்பக் கேவலப்படுத்திறமாதிரி....

தனக்கு நேர்ந்த அவமானங்களையும், பின்னடைவுகளையும் தற்சார்பின்றிக் கேள்விக்கு உட்படுத்தாமல் பொதுவில் முன்வைப்பவனே சிறந்த மனிதனாகிறான் என்ற ஜியோக்கியூட்ரசின் (கி.மு.781 - 827) கூற்றுக்கு அமைவாக...அதுபற்றி பின்னர் ஒரு பதிவிடுகிறேன்!

29 comments:

 1. புதுவருட வாழ்த்துக்கள் ஜீ!


  முதல்நாளே என்ன வில்லத்தனம்!!

  ரசித்தேன்.

  ReplyDelete
 2. //நம்மளுக்கும் பொண்ணுங்களுக்கும் ஆவுறதில்ல என்கிறது தெரிஞ்ச விஷயம்தான்! ஆனா நம்ம பதிவுகளையும் பொண்ணுங்க யாரும் படிக்கிறதில்ல என்கிற அதிர்ச்சிகரமான உண்மை ரொம்ப லேட்டா இப்பதான் தெரிஞ்சுது!

  அதனால பெண்களைக் கவர, எதைப்பற்றி எழுதலாம்னு தீவிரமா உட்கார்ந்து யோசிச்சு, பயனுள்ள இந்த அழகுக் குறிப்பை சமர்ப்பிக்கிறேன்.//

  திரும்பியும் பிழை விடுறீங்க ஜீ....
  ஏன் நாங்க அழகில்லையா நீங்க அழகுக்குறிப்பு தர, அதை நாங்க படிக்க?
  என்ற எண்ணம் அவர்களுக்கு கண்டிப்பாக வரும் :(

  ReplyDelete
 3. ஏனுங்க அவனவன் பொண்ணுங்க பார்வையே படமாட்டேங்கிதுன்னு பொலம்பிட்டு இருக்கானுக, உங்களை ஏதோ முறைச்சாவது பாத்துச்சே.....?

  ReplyDelete
 4. அழகுக்குறிப்பெல்லாம் போட்டு பெண்களைக் கவர் பண்ண முடியாதுங்கோ.... அதுக்கு வேற வழிகள் எக்கச்சக்கமா இருக்கு...! உங்களுக்கு இன்னும் பயிற்சி வேணும் போல.....!

  ReplyDelete
 5. ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழரே

  ReplyDelete
 6. அழகு குறிப்பு செய்தி..இளைய வட்டத்திற்கேற்ற பதிவு..

  அழகுக்குறிப்புன்னு எதை சொன்னாலும், எதை வேணும்னாலும் முகத்தில 'அப்ளை' பண்ண எப்பவுமே ஒரு கூட்டம் ரெடியா இருக்குமோ?
  சந்தேகமே வேண்டாம்..
  அன்போடு அழைக்கிறேன்..

  உயிரைத் தின்று பசியாறு(அத்தியாயம்-1)

  ReplyDelete
 7. முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

  http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

  ReplyDelete
 8. ஜி அண்ணே வருஷத்தில் முதல் நாளே என்ன ஒரு வில்லத்தனம்.

  நானும் அந்த அழகு குறிப்பை ஆர்வமா படிச்சேன் என் ஆளுக்கு அனுப்புவோம் என்று.... அவ்வவ்
  யோவ்... நல்ல வேலை படித்து பார்க்காமல் உங்கள நம்பி அனுப்பாம விட்டேனே..... ஒரு வேலை அனுப்பி இருந்தால்...!!! ஆத்தாடி........... அவ்வவ்

  அப்புறம் பாஸ்..
  பொண்ணுங்க அழகான பசங்களத்தான் முறைச்சு முறைச்சு பார்க்குங்கலாம்
  முறைக்கிற மாதிரி அந்த அழகை ரசிக்க.......நம்ம ஜி அண்ணன் அவ்ளோ அழகாவா இருக்காரு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 9. ;)))

  புத்தாண்டு வாழ்த்துக்கள் ))

  ReplyDelete
 10. வணக்கம் ஜி!!!ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!////போன வாரம் என்னை ஒரு பொண்ணு முறைச்சுப் பார்த்திச்சு!///நீங்க மாஸ் ஹீரோ கணக்கா பில்டப்பு குடுத்திருப்பீங்க."மூஞ்சியும்,மொகரையும்"னு முறைச்சுப் பாத்திருக்கும்.விடுங்க சார்!(விட்றா!விட்றா!)

  ReplyDelete
 11. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அழகுக்குறிப்பெல்லாம் போட்டு பெண்களைக் கவர் பண்ண முடியாதுங்கோ.... அதுக்கு வேற வழிகள் எக்கச்சக்கமா இருக்கு...!//

  அய்யய்யோ நான் கவர் பண்றத சொல்லல பாஸ்! என்னாமா கோர்த்து விடுறாங்கப்பா! ஏற்கனவே ஏழரை... :-)

  ReplyDelete
 12. //துஷ்யந்தன் said...
  அப்புறம் பாஸ்..
  பொண்ணுங்க அழகான பசங்களத்தான் முறைச்சு முறைச்சு பார்க்குங்கலாம்//
  வேணாம் நான் சீரியசா பேசிட்டிருக்கேன்! :-)

  ReplyDelete
 13. //Yoga.S.FR said...
  நீங்க மாஸ் ஹீரோ கணக்கா பில்டப்பு குடுத்திருப்பீங்க."மூஞ்சியும்,மொகரையும்"னு முறைச்சுப் பாத்திருக்கும்.விடுங்க சார்!(விட்றா!விட்றா!)//

  நீங்களுமா? இதுக்காகவே நான் அந்த சம்பவத்தை அல்ல அல்ல சரித்திரத்தை எழுதுவேன்! :-)

  ReplyDelete
 14. ஜீ... said...

  நீங்களுமா? இதுக்காகவே நான் அந்த சம்பவத்தை அல்ல அல்ல சரித்திரத்தை எழுதுவேன்! :-)/////அந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற வரலாற்றை படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்!hi!hi!hi!!!

  ReplyDelete
 15. தெரியாத்தனமா யாராவது பொண்ணுங்க படிச்சிட்டிருந்தா கூட இனிமே படிக்க மாட்டாங்க...

  ReplyDelete
 16. அண்ணன் போன வருஷம் கூட ஏதோ 'லிஸ்ட்' ரெடி பண்ணதா ஞாபகம்!

  ReplyDelete
 17. தேவையான தகவல்கள் சகோ
  உங்களுக்கும் உங்களின் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 18. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜீ..!
  இந்த ஆண்டு பல சாதனைகளை குவிக்க வாழ்த்துக்களுடன் கு.கிருத்திகன்.


  http://tamilpp.blogspot.com/

  ReplyDelete
 19. அந்த உலகப் புகழ்பெற்ற சரித்திரத்தை ஆவலுடன் எதிர்பார்த்து.........................(முன்னைய பின்னூட்டத்தில் விடுபட்டுவிட்டது!)

  ReplyDelete
 20. ஜீ...அன்பான வாழ்த்துகள்.என்ன கொலைவெறியப்பா வருஷத் தொடக்கத்திலேயே !

  ReplyDelete
 21. ஹல்லோ..பாஸ்.. மொறச்ச பொண்ணு பத்தி நாலு லைன் அதிகம் போடுவீங்கன்னு பாத்தா..

  ReplyDelete
 22. ஆஹா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஆரம்பிச்சிட்டாங்கய்யா ஆரம்பிச்சிட்டாங்க...!!!

  ReplyDelete
 23. இப்படியும் வழி இருக்கா பார்வையாளர்களை பதிவு படிக்க வைக்க பாஸ்!
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 24. நன்று.

  த.ம.9

  நீண்ட வராமைக்கு மன்னிக்கவும்.இனி தொடர்ந்து வருவேன்.

  இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  புத்தாண்டில் புதிய பொலிவோடு புறப்படட்டும் உங்கள் பதிவுகள்.

  ReplyDelete
 25. 2012 வாழ்த்துக்கள் முத பதிவே டக்கரா இருக்கு.ஸ்பெசல் சினிமா விமர்சனம் போடுங்க ஜீ

  ReplyDelete
 26. குறிப்பா யாருமே நம்பிக்கைத் துரோகம் பண்ணல! ஏன்னா நான்தான் யாரையும் நம்பவே இல்லயே! யாருகிட்ட?//

  ஒரு வருஷ அனுபவம் பேசியிருக்கு.. நல்லா பக்குவ பட்டுட்டீங்க போல!

  ஆண்களை கவர.. அப்பிடீன்னு ஏதாவது ஐடியா இருக்கா?

  ReplyDelete
 27. " அடுத்த வினாடி ஒளித்துவைத்திருக்கும் ஏராளமான ஆப்புக்களை எதிர்கொள்ளும் மன தைரியத்துடன்" ...இப்படிக்கு விக்கி ஹிஹி!

  ReplyDelete
 28. >>நம்மளுக்கும் பொண்ணுங்களுக்கும் ஆவுறதில்ல என்கிறது தெரிஞ்ச விஷயம்தான்! ஆனா நம்ம பதிவுகளையும் பொண்ணுங்க யாரும் படிக்கிறதில்ல என்கிற அதிர்ச்சிகரமான உண்மை ரொம்ப லேட்டா இப்பதான் தெரிஞ்சுது!

  ennai என்னையும் உங்க லிஸ்ட்ல சேர்க்கவும் அவ்வ்வ்வ்

  ReplyDelete
 29. அது அழகுக் குறிப்பு நிபுணர் இல்லம்மா..........
  ....ஒரு வேளை அந்தப்பொண்ணு தெளிவாத்தான் சொல்லிச்சோ என்னவோ
  nice, u r there....

  ReplyDelete