Thursday, January 26, 2012

குல்லா!


'கால்ஷீட் கிடைச்சாச்சு, கதைய ரெடி பண்ணுங்க!'
'பண்ணிடலாம்க....வழக்கம்போல!'

'என்..னது? வழக்கம்போலயா?'
'இல்லைங்க அவரு இருக்காருல்ல அப்புறம் கதை எதுக்கு? கதைன்னு அவரு பேரையும் போட்டுறலாம்!'

' இல்லாத கதைக்கு எதுக்குயா நாலு பேரு?'
' நாலு பேரு போட்டா ஒரு பின்நவீனத்துவ எபெக்ட் கிடைக்கும்ல!'

'ஹீரோயின்?'
' அப்றோக்சிமேட் ஸ்டார் உள்ள வந்தப்புறம் எதுக்கு அதெல்லாம்? யாராவது டொச்சு பிகரோ டொக்கு விழுந்த பிகரோ, மாக்கெட் போனதோ புடிச்சிரலாம்க!'

'வில்லன்?'
'அட.. என்னாங்க நீங்க... அவருக்கே வில்லனா..? யாரோ ஒரு சொங்கியோ... சோப்ளாங்கியோ போட்டுறலாங்க!'

'மியூசிக்?'
'நம்ம யுத்ராஜாதான்! பேக்ரவுண்ட் மியூசிக்ல பின்றோம்! வீட்ல சும்மா இருக்கிற அவரோட அண்ணா, தம்பி, தங்கச்சிங்க எல்லாரையும் கூட்டிட்டு வந்து கிடைக்குற கேப்ல எல்லாம் போட்டுத் தாக்குறோம்!'
'மொத்தத்துல மியூசிக் கொத்துப் பரோட்டான்னா என்னான்னு காட்டுறோம்!'

'காமெடியன்ஸ்?'
'அது சஸ்பென்ஸ்! படம் ரிலீசான அப்புறம்தான் தெரியும்!'

'யோவ்... என்னய்யா சொல்றே? அது நான் இல்லியே?'
'போங்க சார் உங்களைப்பாத்தா சிரிப்பு வருமா? பாவமால்ல இருக்கு! வழக்கம்போல ஆடியன்ஸ்தான் சார் காமெடியன்ஸ்!'

********
'ஸார் வணக்கம்!'
'வணக்கம் பாஸ்! ஹாவ் எ சீட்! சாப்டீங்களா?'

'ஸார் கதை என்னான்னா...வந்து....கோட்,சூட், கூலிங்கிளாஸ் எல்லாம் இருக்கு சார்!'
'ஸ்க்ரிப்ட் ரெடியா?'

'ரெடி ஸார்!'
(ஹைய்யா! வழக்கம்போல கதைய கேக்கல... ஆமா தமிழ்படிக்கத் தெரியுமா? அதுல படமேதுமில்லையே!)
'சரி அப்டீன்னா நா பேஸ்மாட்டேன்! சொல்லுங்க பாஸ்! அப்புறம்?'

'அப்பிடியே ஓப்பன் பண்ணா பப்புவானியூகினியால நீங்க..!!'
'பின்னாடி ஆறு பேர் வர..... முன்னாடி நீங்க நடக்கிறீங்க...! ஒரு ஜாகுவார், ரெண்டு பென்ஸ் நிக்குது. நீங்க அதில ஏறப்போறதா ஆடியன்ஸ் எல்லாரும் நினைப்பாங்க! ஆனா.... அதான் இல்ல!'
'தென்?'

'நீங்க நடக்க, பின்னாடி மெதுவா உருட்டிட்டே வரோம்!'
'ரியலி?'

'ஆமா அப்புறம் உஸ்பெகிஸ்தான்ல நடக்கிறோம், அப்புறம் சிங்கப்பூர்ல..., அமெரிக்கால கடைசியா சென்னைலன்னு நடையோ நடன்னு..'
'இதெல்லாம் வழக்கமா 'நடக்குறது'தானே...யூ நோ...டெல் மீ சம்திங் டிபரென்ட்..!'

'வித்தியாசமா வச்சிருக்கேன் ஸார்! அனல் பறக்குற சேசிங் சீன் ஒண்ணு! அங்கதான் நீங்க நிக்கிறீங்க!'
'எது சேசிங் சீன்ல நிக்கிறதா..?'

'அட அந்த நிக்கிறது இல்லீங்க.... கொலை வெறியோட எதிரிங்க தப்பிச்சு ஓடறாங்க....செம்ம விறுவிறுப்பு ஆடியன்ஸ் எல்லாம் சீட் நுனில..ஆனா..'
'...?'

'ஆனா....அப்பக்கூட நீங்க ஓடலைங்க..ஸ்லோ மோசன்லயே...எட்டு கிலோமீட்டர் நடந்து போய்..'
'ஈஸிட்?'

'அப்பப்ப துப்பாக்கிய எடுத்து டப்பு டப்புன்னு சுடுறோம்! கிளைமாக்ஸ் வரைக்கும் நீங்க சுடுறது வில்லன் கோஷ்டிக்குப் படாது! அவங்க சுடுறது உங்களுக்குப் படாது! படம் பூரா யாரு யாரச் சுடுறான்னு யாருக்குமே புரியாது! அட உங்களுக்கே புரியாதுன்னா பாருங்க!'
'புர்ல...சத்தியமா எனக்குப் புர்ல!'

'சரி விடுங்க! அப்புறம் புதுசா ஒண்ணிருக்கு கேட்டா ஆடிப் போயிடுவீங்க..முதன்முறையா உங்கள தண்டவாளத்துல நடக்க வச்சு...... மொத்தமா தூக்கிடுறோம்!'
'வ்...வாட்????'

'அய்யோ உங்கள இல்ல சார்! ஆடியன்ஸ!'

**********

'டேய் அசிஸ்டெண்டுகளா கதைய வெளில கசிய விட்றாதீங்கடா ...! பிறெஸ்காரங்க கெஞ்சிக் கூட கேப்பாங்க...அழுதுகூட கேட்டுப்பாப்பாய்ங்க ...! சொல்லிடாதீங்கடா!'
'அண்ணே அடிச்சுக்கேட்டாக் கூட சொல்லமாட்டோம்ணே!'

14 comments:

 1. வணக்கம் ஜீ!ஹ!ஹ!ஹா!!செம!!!!!!!!!!!

  ReplyDelete
 2. அடேங்கப்பா...... எங்க போனாலும் நடந்தே சாதிக்கிறாரெ தல......

  ReplyDelete
 3. நான் பேஸ் மாட்டேன்.... ஆமா நான் பேஸ் மாட்டேன்.... ஏன்னா நான் தனியாளு இல்ல........

  ReplyDelete
 4. பில்லா 2 கதையும் ரிலீஸ் ஆகிடுச்சா ;-)))

  ReplyDelete
 5. ஆனா....அப்பக்கூட நீங்க ஓடலைங்க..ஸ்லோ மோசன்லயே...எட்டு கிலோமீட்டர் நடந்து போய்..'//நல்ல உடற்பயிற்சி..தொந்தி கரைஞ்சிடும்...

  ReplyDelete
 6. ஹா...ஹா...குல்லா நல்லா கல்லா கட்டுமா?

  ReplyDelete
 7. ///'சரி விடுங்க! அப்புறம் புதுசா ஒண்ணிருக்கு கேட்டா ஆடிப் போயிடுவீங்க..முதன்முறையா உங்கள தண்டவாளத்துல நடக்க வச்சு...... மொத்தமா தூக்கிடுறோம்!'
  'வ்...வாட்????'

  'அய்யோ உங்கள இல்ல சார்! ஆடியன்ஸ!'////

  ஹிஹி, செமையா கொண்டுவந்து முடிச்சுட்டியள்....

  ReplyDelete
 8. வணக்கம் பாஸ்,

  சூப்பரா கலாய்ச்சிருக்கிறீங்க.
  அதுவும் ரீமேக் வேட்டை வைக்கிறவங்களுக்கு கறார் காமெடியாக இது இருக்கும் என்பதில் ஐயமில்லை.

  ReplyDelete
 9. சூப்பர் கதை.உரிமையைப் பதிவு செய்யுங்க!

  ReplyDelete
 10. நல்ல கதை ! கலக்கல் வசனம் ! நன்றி !

  ReplyDelete
 11. semai semai samai................ hahaha

  ReplyDelete
 12. :).. :).. :).. :).. :).. :).. :).. :)..

  நான் நடந்து நடந்து சிரிக்கிறேனாக்கும்..

  ReplyDelete
 13. :).. :).. :).. :).. :).. :).. :).. :)..

  நான் நடந்து நடந்து சிரிக்கிறேனாக்கும்..
  ////பாத்து!அப்புறம் வெள்ளை வேனில வந்து கூட்டிக்கிட்டுப் போயிடுவாங்க!ஹி!ஹி!ஹி!!!!

  ReplyDelete

Followers

Blog Archive

Powered by Blogger.

Archives

Follow by Email

Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |