Tuesday, December 27, 2011

The Postman (1994)



காதலிக்கும்போது பலர் கவிஞர்களாகி விடுவதைப் பார்த்திருக்கிறோம். கூடவே காதலில் உதவும் நண்பர்களையும்! ஆனால் மரியோவுக்கு? உலகம் கொண்டாடும் ஒரு பிரபல கவிஞரே காதலில் உதவும் நண்பராகவும்  வாய்த்துவிடுகிறார்.

Tuesday, December 20, 2011

ஒஸ்தி, பெண்கள் ஜாக்கிரதை!



ஒஸ்தி!
ஸ்ல ஒஸ்தி போட்டாங்க! படத்தின் ஹீரோ ஒப்பனிங் மிக அருமையாக இருந்தது! தேவையே இல்லாமல் ஒரு கட்டடத்தை உடைத்துக்கொண்டு ஜீப் பாயுது! ஜீப் பாயும்போதே..ஹீரோ ஜீப்லருந்து வெளியே பாய்ந்து, அப்படியே முன்பக்கத்தில் உட்கார்ந்து கொள்கிறார்! இயக்குனர் தரணி, பேரரசுவின் குரு என்பதை நாம மறக்கக்கூடாது!

Wednesday, December 14, 2011

யாழ்ப்பாணத்துப் பெண்களும், புலம்பெயர் அன்பரும்! - நம்மவர்!



'யாழ்ப்பாணம் இப்ப ரொம்ப மோசமாமே?' 

பொண்ணுங்களுக்கும் நமக்கும் எப்பவுமே ஆவுறதில்ல!நாம இருக்கிற ஏரியாலயே பொண்ணுங்களைக் காண முடியிறதில்ல!எப்பவாவது அலுவலகத்தில ஒன்றிரண்டு பேரைப் பார்த்தாலும் நாம அவங்க வழிக்கே போறதில்ல! ஆனா பாருங்க நம்மளப் பார்த்த உடனேயே கட்டம் கட்டிடுவாய்ங்க போல! வலிய வம்பிழுக்கிறதுன்னு முடிவு பண்ணிடுவாய்ங்க! நம்ம ராசி அப்பிடி!

Thursday, December 8, 2011

நிராகரிப்பின் வலி!



நிராகரிப்பு, நம்பிக்கைத் துரோகத்தின் வலி மிகக் கொடுமையானது! அது மென்மையானவர்களை, மிகத்திறமைசாலிகளை அதீதமாகவே தாக்கிவிடுகிறது! அவர்கள் தொலைத்ததாகக் கருதும் அங்கீகாரத்தை, வாழ்க்கையை வேறு எதுவுமே ஈடு செய்வதில்லை.

ஒரு சிலர் தாங்களாகவோ அல்லது அன்புக்குரியவர்கள் முயற்சியாலோ மீண்டு வருகிறார்கள். ஆனால் பலர் தம்மையே தொலைத்து விடுகிறார்கள். அவர்களை மீட்க யாரும் முயற்சிப்பதில்லை என்பது பெரும்சோகம்!