Wednesday, December 14, 2011

யாழ்ப்பாணத்துப் பெண்களும், புலம்பெயர் அன்பரும்! - நம்மவர்!



'யாழ்ப்பாணம் இப்ப ரொம்ப மோசமாமே?' 

பொண்ணுங்களுக்கும் நமக்கும் எப்பவுமே ஆவுறதில்ல!நாம இருக்கிற ஏரியாலயே பொண்ணுங்களைக் காண முடியிறதில்ல!எப்பவாவது அலுவலகத்தில ஒன்றிரண்டு பேரைப் பார்த்தாலும் நாம அவங்க வழிக்கே போறதில்ல! ஆனா பாருங்க நம்மளப் பார்த்த உடனேயே கட்டம் கட்டிடுவாய்ங்க போல! வலிய வம்பிழுக்கிறதுன்னு முடிவு பண்ணிடுவாய்ங்க! நம்ம ராசி அப்பிடி!


இப்படித்தான் சமீபத்தில ஒரு அனுபவம் அந்தப் பெண் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் அல்ல. பெரிதாக அறிமுகமில்லை திடீரென்று ஏதோ முடிவோடதான் ஆரம்பித்தார்.

'யாழ்ப்பாணம் இப்ப ரொம்ப மோசமாமே?'

(நான் உடனே பொங்கிடுவேன்னு நினைச்சிருப்பார் போல ஆனா நமக்குத்தான் தமிழுணர்வு, அறச்சீற்றம் எதுவும் கிடையாதே!)

'ஏன்?'

'கேர்ள்ஸ் எல்லாம் சரியான மோசமாம்!' (பெண்கள்தான் இப்படிப் பேசுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது! ஏன்?)

'அப்பிடியா?'

(கொஞ்சம் குழப்பத்துடன்) 'உங்களுக்கு நியூஸ் எதுவும் தெரியாதா?'

'நியூஸ்ல இதெல்லாம் சொல்றானுங்களா? எந்த நியூஸ்?' 

(காண்டாகி)'ஒரு வெப்சைட்ல நிறைய எழுதியிருக்காங்க. கேர்ள்ஸ் பற்றியெல்லாம்!'

'ஓ! ஏதோ ஒரு ஆபாச சைட் ஒண்ணு இருக்குன்னு கேள்விப்பட்டேன். நான் பார்த்ததில்ல!' 

(பதறியடிச்சு) 'ஐயையோ அது ஆபாச சைட் இல்ல. கோவில் திருவிழா பற்றியெல்லாம் எழுதி இருக்கு!'

(என்னா விவரம்டா!) 'அப்பிடியா?' 

'என்ன இருந்தாலும் யாழ்ப்பாணத்துக்கு எண்டு ஒரு பேர் இருந்ததுதானே சிவாஜி படத்தில கூட சொல்லியிருந்தாங்களே'(அடிப் பாவீங்களா நீங்களுமாடி? )

'ம்ம்..அதெல்லாம் ஒரு விதமான பிசினஸ் ட்ரிக். தமிழ் சினிமால வெளிநாட்டு....' இதெல்லாம் எதுக்கு சொல்லணும்னு தோணிச்சு! பார்த்தேன். நம்பாத முகபாவத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்!

'உங்களுக்கு வாசிப்பு பழக்கம் இருக்கா?'
'புக்ஸ் படிப்பேன்'
'ரமணிசந்திரன கேட்கல...வேற ஏதாவது உருப்படியா?'
'டைம் கிடைக்கிறதில்ல!'
'நல்ல விஷயம்!'
'ஏதோ சொல்ல வந்தீங்களே?'
'அதெல்லாம் உங்களுக்கு சுத்தமாப் புரியாது! விட்டுடுங்க!'

இதுக்கப்புறமும் நம்ம கிட்டப் பேசுவாய்ங்க?

நாங்கெல்லாம் எதுக்கெல்லாம் பெருமைப்படுவம்னு எங்களுக்கே தெரியாது!   சினிமா ஒரு கலை,பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி அது ஒரு மாபெரும் வியாபாரம் என்பதை பலர் புரிந்துகொள்ள விரும்புவதில்லை!

நடிகர்களை நடிகர்களாக மட்டும் நாம் பார்ப்பதில்லை! அறிவுஜீவிகளாக, வழிகாட்டிகளாக, தத்துவ ஞானிகளாக நினைத்து, சினிமாவில் சொல்வதையெல்லாம் நிஜ வாழ்க்கையில் பொருத்திப் பார்த்து, ஒப்பிட்டு சந்தோஷப்பட்டுக் கொள்கிறோம்!

சிவாஜி படத்தில் முற்று முழுதாக வியாபார நோக்கில் ஈழத் தமிழர்களைக் குறிவைத்து 'யாழ்ப்பாணத்துப் பெண்கள்' பற்றிய வசனம் வெளியானபோது நம்மாளுங்க எல்லாம் வாயெல்லாம் பல்லா திரிஞ்சாய்ங்க!

குறிப்பா நம்ம புலம்பெயர், வருங்கால வெளிநாட்டு மாப்பிள்ளைங்க பலர் நாம நினைக்கிறத அப்பிடியே சொல்லிட்டாங்கன்னு புல்லரிச்சுப் போயிட்டாங்க!இதில வெளிநாட்டில இருக்கிற பெண்களைப் பெற்ற அங்கிள்ஸ், ஆன்டிங்க கூடப் பெருமைப்பட்டது மேலதிக காமெடி! ஆனா இதைப்பற்றி அந்தப் பெண்கள் என்ன நினைச்சிருப்பாங்கன்னு தெரியல! அவிங்களும் சேர்ந்து பெருமைப்பட்டிருக்கலாம் தப்பில்ல!


ஒரு புலம்பெயர் அன்பரின் அழைப்பு!

ரு தொலைபேசி அழைப்பு! நம்பர் பார்த்தா லண்டனிலிருந்து! நமக்கு வெளிநாட்டிலருந்து அழைப்பா சான்சே இல்லையே..ஆச்சரியத்துடன்,

'ஹலோ!'
'டேய் நீ உங்க எ.. எ.. என்னடா பண்ணிட்டு இருக்கே?'
'ஹலோ நீங்க...'
'ஒழுங்கா இருக்க மாட்டியா என்ன... என்ன...வேலை...பாக்கிற.. உனக்கு மாசமாசம் கஷ்டப்பட்டு காசு அனுப்பினா.. நீ..நீ..'
'ஹலோ ஹலோ வெயிட்..நீங்க யாரு..'
'என்ன?...ஓ அந்த அளவுக்குப் போயிட்டுதோ? டேய் என்னை..என்னை...பாத்து யாரெண்டு...'
'கட்' பண்ணிட்டேன்.

நான் பேசும் எதையும் அவர் காதில் வாங்கும் நிலையில் இல்லை! உச்சகட்ட டென்ஷனில் கத்தினார். தூக்கம் கலைந்த எரிச்சல் போய் கொஞ்சம் சிரிப்பாகவும், பின்னர் அந்தப் புலம்பெயர் அன்பரை நினைக்க வருத்தமாகவும் இருந்திச்சு! பாவம் அவருக்கு என்ன மன உளைச்சலோ?

நம்மாளுங்க, வெளிநாட்டிலருந்து யாரோ ஒருத்தர் கஷ்டப்பட்டு உழைச்சு காசு அனுப்ப, அதைப்பற்றி யோசிக்காம இங்க காசையிறைத்து ஜாலியா வாழுறது காலங்காலமா நடக்கிறதுதான்! இதில சிலர்/பலர் ஒரு படி மேல போய் எதையாவது இசகு பிசகா பண்ணி அவங்களுக்கு நன்றிக்கடனா பிரஷர எகிற வச்சிடறாங்க!

நான் இன்னும் கொஞ்சம் பொறுமையைப் பேசி இருக்கலாம். நான் திடீரென 'கட்' பண்ணினதும் இன்னும் கோபம் அதிகரிச்சிருக்கும்!

அப்புறம்தான் அந்த ஐடியா வந்திச்சு! நாம ஏன் அவருக்கு ஒரு நல்ல காரியம் செய்திருக்கக் கூடாது? அதுவும் ஒரேயொரு 'பிட்'டைப்போட்டு..

அது...

'யோவ்! உன்ன யாருய்யா காசனுப்பச் சொன்னது? உனக்குக் கொஞ்சமாவது சூடு, சுரணை இருந்தா இனிமே ஒத்த ரூபா அனுப்பக் கூடாது!' 
- எப்பூடி?

30 comments:

  1. வணக்கம் ஜீ சார் ஒரு பால் கோப்பி கிடைக்குமா?

    ReplyDelete
  2. இந்தப்பதிவிலே நீங்கள் இறுதியாகச் சொன்னீர்கள் பாருங்கள் அதுதான் சூப்பர் மானம், ரோசம் ,உண்மையில் இங்கு இருந்து அனுப்பும் பணம் சிலரால் வீண்சோலியில் செலவழிப்பது உறைக்க வேண்டும் அவர்கள் நித்திரை கெட்டு பிரசர் கூடியும் போக இப்படி உறவு என்று பணம் அனுப்பி புலம்பும் பலரை நானும் கானுகின்றேன்!

    ReplyDelete
  3. இப்போது சில தளங்கள் அதிகமாக இப்படி மக்களை சுரண்டியும் மக்கள் மனதில் நஞ்சை விதைப்பதிலும் அதிக ஆர்வமாக இருப்பதையும் அதற்கு வாசகர் அதிகம் என்று விடும் டுபாக்கூர்த்தனத்தை நினைத்தால் சிரிப்புத்தான் வருகின்றது பாஸ்!

    ReplyDelete
  4. இப்போது புலம்பெயர்ந்தவர்கள் மீது சினிமா வியாபாரம் சந்தையை திறந்து வாரிச் சுருட்டுகின்றது சில விசில் குஞ்சுகள் நெருப்பில் காய்ந்து அப்பணத்தை இப்படியான முகமுடிகளுக்கு கொடுப்பதை நினைத்தால் கவலைதான் வருகின்றது.என்றுதான் முகத்திரைகிழியுமோ?!

    ReplyDelete
  5. வணக்கம் தலை முதலில் வோட்டு போட்டுவிட்டு வாறன்.

    ReplyDelete
  6. மாப்ள இப்படியெல்லாம் இருக்கா...நான் கொஞ்சம் மக்கு...இப்பு புரியிது...ஓகே ஓகே..பாவம்யா அந்த மனுஷன்!

    ReplyDelete
  7. உண்மைதான் தமிழ் சம்பந்தமான உலக தரகுக்கும் சந்தைக்கும் யாழ்ப்பாணம் என்ற பெயர் தேவைப்படுகின்றது.
    ஒருத்தியை தாசி என்று கேவலமாக அவளைப்பற்றி கதைபேசும் நால்வரில் எவன் அவள் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்திருக்கின்றான் அல்லது வழிமறையாவது சொல்லியிருக்கின்றான் என்ற கேள்வியே நீங்கள் கூறும் இணையதளம் பற்றிய என் அபிப்பிராயம் தன் தாய் விபச்சாரி என்று செய்திபரப்பும் ஒரு ஈனப்பிறவிக்கும் இத்தகைய செய்திகளை ஊடகம் என்ற பெயரில் எழுதுபவர்களும் ஒன்றுதான் ஜீ.

    ReplyDelete
  8. யோவ்! உன்ன யாருய்யா காசனுப்பச் சொன்னது? உனக்குக் கொஞ்சமாவது சூடு, சுரணை இருந்தா இனிமே ஒத்த ரூபா அனுப்பக் கூடாது!'//

    யோவ் பாவம்யா ஹா ஹா ஹா ஹா விட்டுருங்க....

    ReplyDelete
  9. அது அவங்க நியூ ஜப்னாவின் வாசகி போல, அது தான் அப்பிடி எல்லாம் கேட்டிருக்காங்க.. உங்களுக்கு தான் புரியல்ல ;);)

    ReplyDelete
  10. ////சிவாஜி படத்தில் முற்று முழுதாக வியாபார நோக்கில் ஈழத் தமிழர்களைக் குறிவைத்து 'யாழ்ப்பாணத்துப் பெண்கள்' பற்றிய வசனம் வெளியானபோது// அந்த நேரத்தில் நியூ ஜப்னா இணையத்தளம் இல்ல போல , இருந்திருந்தா ஜோசிச்சிருப்பாங்க இப்பிடி ஒரு வசனம் தேவை தானா எண்டு...நம்மளை நாறடிக்க புதுசா வெளில இருந்து ஒருத்தன் வர வேண்டிய அவசியமே இல்ல...உள்ளுக்கையே திரியிறாங்க ..)

    ReplyDelete
  11. நம்மாளுங்க, வெளிநாட்டிலருந்து யாரோ ஒருத்தர் கஷ்டப்பட்டு உழைச்சு காசு அனுப்ப, அதைப்பற்றி யோசிக்காம இங்க காசையிறைத்து ஜாலியா வாழுறது காலங்காலமா நடக்கிறதுதான்! இதில சிலர்/பலர் ஒரு படி மேல போய் எதையாவது இசகு பிசகா பண்ணி அவங்களுக்கு நன்றிக்கடனா பிரஷர எகிற வச்சிடறாங்க!

    உள்நாட்டுல சம்பாதிச்சாலும் அதே கூத்து நடக்குது.. இப்படிய்ம் அப்படியுமாத்தான் உலகம்.

    ReplyDelete
  12. ஜீ..!

    போங்க நீங்க ரொம்ப மோசம்.

    பொண்ணுங்க வந்து பேசினாலும் அவர்களை கடுப்பாக்கிற மாதிரி பதில் சொன்னா எப்பிடி? அதுசரி, யாழ்ப்பாண திருவிழா பற்றிய விடயங்களை வெளியிட்ட இணையத்தளம் எதென்று கேட்டீங்களா இல்லையா?!


    அறச்சீற்றமும்- தார்மீகக்கோபமும் உங்களுக்கும் வருதுபோல.

    சூப்பர் மாமா!!

    ReplyDelete
  13. ஜீ ஆதங்கம் ரொம்பவே புரியுது..

    என்ன செய்வது எம்மை நாம் திருத்தாமல் எப்படி இந்தியரை நாம் சுட்டுவது..

    இன்னும் ஓரிரு வருடத்தில் இணையப் பாவனை அதிகரித்ததும் எல்லாம் இன்னும் மோசமாகிவிடும்.....

    ReplyDelete
  14. சுதா இதில் மோசம் என்பது எதனுடன் ஒப்பிட்டு சொல்கிறீர்கள்?

    ReplyDelete
  15. வணக்கம்,ஜீ!இங்கே ஒரு உண்மை சொல்ல வேண்டும்.புலம்பெயர் நாட்டில் "பணம்"(ஈரோ,டாலர்,பிராங்)வீட்டின் பின்னே இருக்கும் மரம் மீது காய்க்கிறது!

    ReplyDelete
  16. பாஸ் நீங்க ரெம்ப வித்தியாசமான ஆள்தான் போல... ஆனா உங்க மேலே எனக்கு சின்ன வருத்தம்... உங்களுக்கு கோவம் வரவில்லை என்று இல்லை.... ஒரு பொண்ணு வழிய வந்து பேசியும் விட்டுட்டீங்களே...... அவ்வ்வ்வவ் :)

    ReplyDelete
  17. நம்மாளுங்க, வெளிநாட்டிலருந்து யாரோ ஒருத்தர் கஷ்டப்பட்டு உழைச்சு காசு அனுப்ப, அதைப்பற்றி யோசிக்காம இங்க காசையிறைத்து ஜாலியா வாழுறது காலங்காலமா நடக்கிறதுதான்<<<<<

    நிதர்சன உண்மை..... :(

    ReplyDelete
  18. ஜி! வர வர உங்க எழுத்துக்கு தீவிர ரசிகன் ஆயிட்டு வாறன். எனக்கு பொறாமையும் கூட.. தொடர்ந்து பதிவு எழுதுங்க/

    ReplyDelete
  19. பிரதர் அங்க மட்டுமில்ல எல்லா ஊர்லயும் இதுதான் நடக்குது...ரொம்ப பசங்க அப்பன் பணத்துலதான் தண்ணி அடிக்கறது, காதலிங்கிற பெயருல கண்ட கழுதைகளுக்கும் செல் கார்டு ரீசார்ஜ் பண்ணுறதிலேர்ந்து,பொடவை,,சினிமான்னு எல்லாமே அப்பன் பணத்துலதான்...

    ReplyDelete
  20. //'யோவ்! உன்ன யாருய்யா காசனுப்பச் சொன்னது? உனக்குக் கொஞ்சமாவது சூடு, சுரணை இருந்தா இனிமே ஒத்த ரூபா அனுப்பக் கூடாது!'
    - எப்பூடி?//
    கடைசியில கிளைமாக்ஸ் வசனம் அசத்திட்டிங்க

    ReplyDelete
  21. //'யாழ்ப்பாணம் இப்ப ரொம்ப மோசமாமே?' //

    பல இணையத்தளங்களும் பரபரப்பிற்காகவும் தங்கள் தளம் இலகுவில் பிரபலமடையவும் இந்தமாதிரியான செய்திகளை வெளியிடுகிறார்கள்.இச்செயல் கண்டிக்கப்படவேண்டியது.

    ReplyDelete
  22. கடைசியில வச்சீங்க பாரு ஆப்பு. அந்த ஊதாரி உறவுக்கு.

    ReplyDelete
  23. உண்மைதான் ஜீ.உதவி செய்கிறோம் என்கிற பெயரில் வெளிநாட்டில் உள்ளவர்கள்தான் ஊரில் உள்ளவர்களைப் பழுதாக்குகிறோம்.நானும் நல்லாப் படிச்சிட்டு இப்ப எல்லாம் நிப்பாட்டியாச்சு !

    ReplyDelete
  24. யாழ்ப்பாணம் இப்ப மோசம்.முந்திப்போல இல்லையெண்டு சொல்லக் கேக்க கவலைதான்.உண்மை எந்தளவுக்கெண்டு தெரியேல்ல !

    ReplyDelete
  25. யதார்தமான உண்மை. அந்த தளத்துக்கு எல்லாம் வாசகி? ம்ம்....

    ReplyDelete
  26. வணக்கம் மச்சி!
    நல்லா இருக்கிறீங்களா?
    இருவேறு பட்ட கோணத்தில் யாழ்ப்பாண நிலையினை அலசியிருக்கிறீங்க.

    சில விடயங்கள் இடம் பெற்றாலும், அவற்றினை பெரிது படுத்திப் பரபரப்புத் தேடுவதில் எம் இணையத் தளங்களுக்கு நிகர் இணையத் தளங்கள் தான்!
    அவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  27. உங்களுக்கு வாசிப்பு பழக்கம் இருக்கா?'
    'புக்ஸ் படிப்பேன்'
    'ரமணிசந்திரன கேட்கல...வேற ஏதாவது உருப்படியா?'
    'டைம் கிடைக்கிறதில்ல!'
    'நல்ல விஷயம்!'
    'ஏதோ சொல்ல வந்தீங்களே?'
    'அதெல்லாம் உங்களுக்கு சுத்தமாப் புரியாது! விட்டுடுங்க!'
    , .................

    ReplyDelete
  28. சிவாஜி படத்தில் முற்று முழுதாக வியாபார நோக்கில் ஈழத் தமிழர்களைக் குறிவைத்து 'யாழ்ப்பாணத்துப் பெண்கள்' பற்றிய வசனம் வெளியானபோது நம்மாளுங்க எல்லாம் வாயெல்லாம் பல்லா திரிஞ்சாய்ங்க

    Well said

    ReplyDelete