Friday, November 18, 2011

மாலை நேர மழைத்துளி!
தலைப்பே கவிதைத்தனமா இருக்கு! காதல் கதையா இருக்குமோ? இருந்தால் நல்லாயிருக்கும்! 

விஜய்- முருகதாஸ் இணையும் படத்தின் பெயர் என்று இணையத்தில் ஒரு செய்தி!

இயக்குனர் முருகதாஸின் படங்களில் வரும் காதல் காட்சிகளுக்கு ஒரு தனியிடம் உண்டு! அதைவிட காதல் காட்சிகள்தான் படத்தின் ஹைலைட் என்றே சொல்லலாம். கஜினியின் மிகப்பெரிய வெற்றிக்கு சூர்யா - அசின் இடையிலான அழுத்தமான காதல் காட்சிகள்தான் காரணம்! அசினின் திரையுலக வாழ்வில் கல்பனா போல இன்னொரு காரெக்டர் அமையுமா என்பது சந்தேகமே! 

அவரது முதல்படமான தீனாவில் கூட லைலா- அஜீத் காதல் காட்சிகள் பலருக்கும் பிடித்திருந்தது! எனக்கு அது மட்டும்தான் பிடிச்சிருந்தது! ஒருவேளை அந்த நேரத்தில மற்றைய காட்சிகளைச் சரியாப் பாக்கலையோ என்னவோ!

முருகதாஸ் ஒரு முழுக்காதல் கதையை எடுத்தால், பஞ்ச டயலாக், வழமையான அலப்பறைகள் இல்லாத அமைதியான விஜய் நடித்தால் நல்லா இருக்கும்!


வெறும் மொக்கையாத்தேன்...  வருது!

அதென்னமோ தெரியல என்னதான் கூகிள்காரன் ஓசில பெரிய மனசு பண்ணி பிலாக் தந்து எழுதுங்கடான்னு விட்டாலும், எழுதத் தொடங்கி ஒரு வருஷமானாலும் இன்னும் சமுதாய அக்கறை, அறச்சீற்றம், சமூக சீர்திருத்தம், ஏ சமூகமே என ஆரம்பித்துக் கேள்வி கேட்கும் சமூகச்சாடல் இதெல்லாம் நம்மளுக்கு வரவே மாட்டேங்குது!

இதைவிட இலங்கைல அதிகமா காத்திரம்னு ஒரு சொல் பாவிக்கிறாங்க! எனக்கென்னமோ அந்த வார்த்தையைக் கேட்டாலே ஒருமாதிரியா... பயமா....ம் சரி விடுங்க!

ஆனா ஒண்ணு! இப்பல்லாம் தமிழுணர்வு கொஞ்சம் ஜாஸ்தியான மாதிரி இருக்கு! நாமளும் தமிழுக்கு ஏதாவது பண்ணணும்னு தோணுது! ஆபீஸ்ல உட்கார்ந்து கடுமையா யோசிச்சதில நாமளும் தமிழர்கள் மறந்துபோன ஒரு தமிழனை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தலாமேன்னு தோணிச்சு!


தமிழன் மறந்த இன்னொரு தமிழன்!

இன்னிக்கு உலகமே அண்ணாந்து (இல்ல குனிஞ்சுன்னு வச்சுக்கலாமா..) பார்க்கிற

உலகத்தில எந்த இடத்தில எந்த விளையாட்டானாலும் சரி, அந்த விளையாட்டு  மைதானத்தில...

புல்லு வெட்டுறதுக்கு பாவிக்கிற மெஷின் இருக்கு பாருங்க..அதைக் கண்டு பிடிக்க..அதைக் கண்டுபிடிக்க அடிப்படையா அமைஞ்சது..

நம்ம தமிழன் பாவித்த ஒரு கருவிதான்கிறது உங்களுக்கு ஆச்சரியமா இருக்கலாம்!

அவர் அந்தக் கருவியால செம்ம ஸ்பீடா சரக் சரக் என்று வெட்டுற அழகிருக்கே..நிறையக் கோவில்ல புல்லு வெட்டியிருக்காராம்! இணையத்தில தேடிப்பாருங்க!

யாரவது சொல்லலாம் நாங்களும் கோவில்ல புல்லு வெட்டியிருக்கோம்னு! பத்து பேரு சேர்ந்து புல்லு வெட்டினா அதுக்குப் பேரு சிரமதானம்! ஆனா தனியா அவர் செய்தது திருப்பணி! அவர்தாங்க...

திருநாவுக்கரசர்! 

அப்பர்னும் சொல்லுவாங்க! அவர் பாவிச்ச ஆயுதத்தோட பேரு உழவாரம்னு சொல்றாங்க! நம்பலைன்னா சிவன் கோயிலுக்குப் போய் அவர் சிலை இருக்கும் பாருங்க!


அப்புறம்...


அவர் ஏதோ தேவாரம்கிற டைட்டில்ல பாட்டெல்லாம் பாடியிருக்காராம்!

      

25 comments:

 1. குற்றாலம் சாரல் போன்ற மழைத்துளி!

  ReplyDelete
 2. ரொம்ப யோசிக்காதீங்க பாஸ், உங்க ஆங்கிலப்பட விமர்சனங்கள் எல்லாமே காத்திரமானவைத்தான்

  ReplyDelete
 3. ///
  அவர் ஏதோ தேவாரம்கிற டைட்டில்ல பாட்டெல்லாம் பாடியிருக்காராம்!////

  இது ஓவர் நக்கல் பாஸ்,, நம்ம முருகதாஸ மொத பந்தில தூக்கி பேசிட்டு, அப்புறம் இப்புடி வாரனுமா?ஹீ ஹீ

  ReplyDelete
 4. நமக்கு என்ன வருமோ அதை செய்தாலே போதும். எழுதித்தான் தீரவேண்டும் என்ற அவசியம் எல்லாம் கிடையாது. அதற்காக கவலைப்படத்தேவை இல்லை நண்பரே.

  ReplyDelete
 5. /அதென்னமோ தெரியல என்னதான் கூகிள்காரன் ஓசில பெரிய மனசு பண்ணி பிலாக் தந்து எழுதுங்கடான்னு விட்டாலும், எழுதத் தொடங்கி ஒரு வருஷமானாலும் இன்னும் சமுதாய அக்கறை, அறச்சீற்றம், சமூக சீர்திருத்தம், ஏ சமூகமே என ஆரம்பித்துக் கேள்வி கேட்கும் சமூகச்சாடல் இதெல்லாம் நம்மளுக்கு வரவே மாட்டேங்குது!
  //

  Cool...cool..;-))))

  ReplyDelete
 6. தமிழன் தமிழன் நான் தான் தமிழன்...
  பச்ச மஞ்ச சிவப்பு ஊதா தமிழன்...

  ReplyDelete
 7. சனி?!வணக்கம்!கம்பியூட்டர் குளறுபடியால் கடந்த சில நாட்கள் பதிவுலகப் பக்கமோ,ஏனைய செய்தி தளங்களுக்கோ வர முடியவில்லை.இன்று சரியாக்கி விட்டோம்.தொடரும்!

  ReplyDelete
 8. ////திரையுலக வாழ்வில் கல்பனா போல இன்னொரு காரெக்டர் அமையுமா என்பது சந்தேகமே/////

  நிச்சயமாக ஜீ... வேலாயுதத்தில் எதிர்பார்த்தாலும் அது கஜினியை ஈ செய்யவில்லை...

  யோவ் நானும் ஏதே அறியத மனுசனாக்கும் என்று ஆர்வமால்ல படிச்சிட்டு கிழே போனேன்... ஹ..ஹ..ஹ.

  ReplyDelete
 9. பாஸ்.... தளபதி fans க்கு இந்த பெயர் பிடிக்காததால படத்துக்கு "துப்பாக்கி" என்று தலைப்பை மாற்றி விட்டார்களாம்.....

  ReplyDelete
 10. இப்ப எல்லாம் தேவாரம் கூட சிலருக்கு நக்கலாப் போச்சு பாஸ் என்ன செய்வது அருமை பெருமையை மறந்துட்டாங்க விசில் குஞ்சுகள். 

  ReplyDelete
 11. மாப்ள நீர் எழுத நினைக்கிறீரா....இல்ல எழுதுறவங்கள் கிண்டல் அடிக்கிறீரா....எனக்கு சரியா புரியல...நடத்தும் இதுவும் நல்லாத்தான் இருக்கு....அது சரி ஏன்யா அந்த நாவரசர இழுத்து போட்டீரு ஹிஹி!

  ReplyDelete
 12. நல்ல காத்திரமான பதிவு..

  ReplyDelete
 13. //அவர் ஏதோ தேவாரம்கிற டைட்டில்ல பாட்டெல்லாம் பாடியிருக்காராம்!//

  அது எந்தப் படத்துல வந்திருக்கு? நான் கேள்விப்பட்டதில்லையே..சீரியல் டைட்டில் சாங்கா? அவரே பாடுனாரா? நல்ல குரல் வளமா?

  ReplyDelete
 14. //முருகதாஸ் ஒரு முழுக்காதல் கதையை எடுத்தால், பஞ்ச டயலாக், வழமையான அலப்பறைகள் இல்லாத அமைதியான விஜய் நடித்தால் நல்லா இருக்கும்!//

  உண்மை தான்..டாக்குடரைப் பார்த்து போரடிச்சிருச்சு..விஜய் தான் இப்போதைய தேவை.

  ReplyDelete
 15. >>செங்கோவி said...

  நல்ல காத்திரமான பதிவு..

  நிரூபண்ட்ட சேட் பண்ணிட்டு நேரா அண்ணன் இங்கே வந்துட்டார் போல ஹி ஹி

  ReplyDelete
 16. மழைத்துளி - சாரல்

  ReplyDelete
 17. ஜீ...என்னாச்சு.எதிலயோ தொடங்கி உழவாரத்தால செதுக்கி
  முடிச்சிருக்கீங்க !

  ReplyDelete
 18. ///அதென்னமோ தெரியல என்னதான் கூகிள்காரன் ஓசில பெரிய மனசு பண்ணி பிலாக் தந்து எழுதுங்கடான்னு விட்டாலும், எழுதத் தொடங்கி ஒரு வருஷமானாலும் இன்னும் சமுதாய அக்கறை, அறச்சீற்றம், சமூக சீர்திருத்தம், ஏ சமூகமே என ஆரம்பித்துக் கேள்வி கேட்கும் சமூகச்சாடல் இதெல்லாம் நம்மளுக்கு வரவே மாட்டேங்குது!
  //
  அதான் இப்ப தொடங்கிட்டீங்களே!

  ReplyDelete
 19. பதிவு ரொம்ப காத்திரமா இருக்கு பாஸ்...

  ReplyDelete
 20. நல்ல காத்திரமான பதிவு..

  ReplyDelete

Followers

Blog Archive

Powered by Blogger.

Archives

Follow by Email

Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |