Thursday, November 3, 2011

துணிந்துவிடு தமிழா! -ஏழாம் அறிவுக் கதைகள்!

டீ.என்.ஏ!

விஞ்சானி சுபா! சுபாவிற்கு அறிமுகம் தேவையில்லை!


அப்படியே நான் அறிமுகப்படுத்தினாலும் மேலேயுள்ள படத்தை விட என்ன பெரிதாகச் சொல்ல முடியும்?

இப்போது சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்! 

தமிழ்நாட்டின் ...இல்லை இல்லை இந்தியாவின் தலைசிறந்த விஞ்சானி அவள்! அவள் அப்பாவும் உலக அளவில் பிரபலமான விஞ்சானிதான்!

வில்லன் டோங்க்லி கொல்லப்பட்ட நிம்மதி, சீனாவிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்றிய மகிழ்ச்சியையும் மீறி மனதில் ஏதோ சஞ்சலம்!

டோங்க்லியும் ஒரு பெரிய ஜீனியஸ்தான் இல்லையா அதனால்தான்  அவனது பரம்பரையையும் ஆராய முனைந்தாள்!

தனது ஆய்வுச்சாலையில் நுழைந்தாள். அது கிராமத்திலிருக்கும் அவளது பாட்டியின் பங்களா ஸ்டைலிலேயே அமைக்கப்பட்டது!

அப்போதுதான் வந்திருந்த டோங்க்லியின் டீ.என்.ஏ ரிப்போர்ட்டை எடுத்துப் பார்த்தவள்...

ஆச்சரியம், அதிர்ச்சி,குழப்பம் எல்லாம் கலந்து கட்டி தொலைபேசியில் அடிக்குரலில் கோபத்துடன் தந்தையிடம் கேட்டாள்....


'அப்பா நீங்க சீனா போயிருந்தீங்களா?'*****************************


துணிந்துவிடு தமிழா!


இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது!

அடிச்சுடணும்!

எதுக்குப் பயப்படணும்? 
யாருக்குப் பயப்படணும்? 
நான் ஒரு தமிழன் இல்லையா? 
எப்படிப்பட்ட வரலாறு எங்களுடையது? 
தமிழன்னா ஒரு வீரம் வரணுமா இல்லையா? 

இந்த நினைப்பே நரம்புகளை முறுக்கேறச் செய்தது!

முடிவு செய்துவிட்டான் சுற்றுமுற்றும் பார்த்து........

இப்பவே இந்த இடத்திலயே...... 

...........


ஷ்.....ஷிப்ப்ப்!

ஸ்ஸ்...அப்பாடா இப்பதான் நிம்மதியாச்சு! 


மூணு பாட்டில் பியர்னா சும்மாவா!

20 comments:

 1. சூப்பர் ஜோக்

  ReplyDelete
 2. ஜீ நீங்க அந்த விஞ்ஞானியளை மிஞ்சிட்டிங்க போல...

  அதுக்குள்ள பியர் என்று வேற கதை மாத்திறிங்களோ... அடி செருப்பால..

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  இலங்கைப் பதிவர்களின் முதல் குறும்படம் - ஒரு பழைய முயற்சி

  ReplyDelete
 3. ஆகா.. ஏழாம் அறழவை வச்சி நல்லாவே யாசிக்கிறிங்கப்பா...

  ReplyDelete
 4. ஷ்.....ஷிப்ப்ப்!

  ஸ்ஸ்...அப்பாடா இப்பதான் நிம்மதியாச்சு!  மூணு பாட்டில் பியர்னா சும்மாவா
  >>
  அடக்கடவுளே நான் வேறென்னவோ நினைச்சுட்டேன்

  ReplyDelete
 5. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  ReplyDelete
 6. ஹா,ஹா!சூப்பர் கதை!

  மூணு பாட்டில் பியருக்கு அப்புறம் எழுதிய கதையா?!:)

  ReplyDelete
 7. அன்புடையீர்,

  அடியிற்க‌ண்ட‌ சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.


  //// ** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! “ மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… /////
  .
  இப்பதிவு பலரை சென்றடைய தங்களின் வலைப்பூவில் நல்லிணக்கத்தோடு லின்க் கொடுத்து உதவிய / உதவும்
  அனைத்து பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

  ஒத்துழைப்புக்கு முன்கூட்டிய‌ ந‌ன்றிக‌ள்.

  ReplyDelete
 8. //
  மூணு பாட்டில் பியர்னா சும்மாவா!
  //

  அப்பஇப்படிதான் வரும் ...

  ReplyDelete
 9. அடப்பாவி சீனாகாரியையும் விட்டு வைக்கலாயா? உங்களுக்கு செம நக்கல்தான்...

  ReplyDelete
 10. ஹா ஹா ஹா ஏழாம் அறிவு!!?

  ReplyDelete
 11. ஆஹா கிளம்பிட்டாயிங்க ஏ ஏலேய் மக்கா ஒடுங்கலேய் ஒடுங்கலேய் அது நம்மை நோக்கிதாம்லேய் வருது....

  ReplyDelete
 12. கலக்கிட்டீங்க ஜீ..

  ReplyDelete
 13. லேடி விஞ்சானியோட அப்பா நல்லவரா? கெட்டவரா?

  ReplyDelete
 14. //செங்கோவி said...
  லேடி விஞ்சானியோட அப்பா நல்லவரா? கெட்டவரா?//

  ஏண்ணே ஏன்??
  அண்ணே வேணாம்...அப்பா பற்றி பேசாதீங்க...இது அந்த அப்பா இல்ல இது வெறும் கதை அவ்வ்வ்வ்!

  ReplyDelete
 15. என்னமா கத விடுது பயபுள்ள.... ஒரு வேள அவங்க முன்னோரும் யாரும் சீனா போயிருப்பாங்களோ? அப்புறம் அந்தே பீர் மேட்டர் யாருக்கு?

  ReplyDelete
 16. ஏய்யா தாங்க முடியல்ல!

  ReplyDelete
 17. ஹா ஹா ஹா :)
  வாய் விட்டு சிரித்தேன் நண்பர் :)

  விஞ்சானி - திட்டமிட்டதா? ;)

  ReplyDelete