Monday, October 24, 2011

ஏழரை!


ஏழரைக்கும் எனக்கும் காலங்காலமா அப்பிடியொரு பந்தம்! அது எப்பிடின்னே தெரியல! இப்போ இன்னும் ஓவராயிடுச்சு!


இப்பல்லாம் நான் காலைல மணி ஏழரைக்குத் தான் தூக்கம் கலைந்து எழுந்திருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்க!

அதில பாருங்க சும்மாவே எனக்கு எப்போதும் ஏழரைதான்! இந்த கொடுமைல இப்போ உண்மையாவே ஏழரைச் சனி நடக்குறதா ரெண்டு வருஷத்துக்கு முதல் வீட்டில சொன்னாங்க. எனக்கு இதிலெல்லாம் பெரிசா நம்பிக்கை இல்லாதிருந்தாலும் போன வருஷம் முழுக்க ரொம்ம்ம்ப அடிபட்டுட்டதால (சும்மா இல்ல..செம்ம) அப்பிடித்தானோன்னு இப்பவும் குழப்பமா யோசிக்கிறேன்!

இருந்தாலும் இதுக்கு மேல என்ன நடக்கப் போகுது? நாம பாக்காத கலவரமா, வாங்காத அடியா விட்றா விட்றான்னு ஒரு கெத்தோட நாம பாட்டுக்கு போயிட்டிருந்தாலும், யாராவது வலியக் கூப்பிட்டு.... 

நம்ம ரெசிடென்சுக்கு எதிர்ல இருக்கிற கடை ஓனர் அங்கிள் இன்னொருத்தரோட ஏழரை பற்றி ஏதோ சொல்லிட்டிருந்தாரா நம்மளைப் பார்த்ததும் தம்பி என்ன ராசி? (எப்புடித்தான் கண்டு பிடிக்கிறாய்ங்களோ?) சொன்னேன்.

உடனே சந்தோஷமா 'உங்களுக்கு ஏழரை முடியப்போகுது'ன்னு சொல்லி கூடவே ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

'ஏழரை முடியும்போது ஒரு வழி பண்ணிட்டுத்தான் போகும்...அது வரைக்கும் கவனமா இருங்க தம்பி!'. 
(அவ்வ்வ்வ்!)

அதுவரைக்கும் பேசாம இருந்த ஒரு ஆன்டி சம்பந்தமேயில்லாம ஒரு அட்வைஸ் குடுத்தா பாருங்க 
'ஓமோம் பிரயாணம் செய்யும்போது கவனமா இருக்கவேணும்...அதுவும் காலை பத்திரமா பாத்துக் கொள்ளவேணும்! அங்கதான் கூடத் தாக்கும்!'
(அடப்பாவீங்களா.....?)

வாரத்தில் இரண்டுநாள் நான் சொகுசு பஸ் பிரயாணம் ஊருக்கு (கொழும்புக்கு)
செய்வது அந்தக் கடைக்கார அங்கிளுக்குத் தெரியும்! ஆனா அந்த யாரோ ஒரு ஆன்டிக்கு? என்னை முன்ன பின்ன தெரியாதே! அப்புறம் ஏன் இந்தக் கொல வெறி? 

அதென்னவோ தெரியல தாய்க்குலங்களுக்கு எல்லாம் பார்த்த உடனேயே நம்ம மேல அப்பிடி ஒரு அன்பு!

விடுறா ஜீ இதெல்லாம் உனக்குப் புதுசான்னுட்டு அன்னிக்கு இரவு நான் பாட்டுக்கு பஸ்ல ஏறி உட்கார்ந்து, மொக்கை படத்தை பாக்காம கஷ்டப்பட்டு, ட்ரை பண்ணி, நல்லா தூங்கிட்டேன். 

கிறீச்னு ஒரு சத்தம் (பிரேக்!) நெத்தியில வலி! முன் சீட்டுல அடிபட்டு! எல்லாரும் பேஸ்தடிச்சு, முழிச்சுட்டே உட்கார்ந்திருந்தாங்க!

அப்புறமா இறங்கிப் பார்த்தா பஸ்ல முன்பக்கத்தில ஓடு வெடிச்ச, அவிச்ச முட்டை மாதிரி இருந்திச்சு! சொகுசு பஸ் எல்லாமே அவ்வளவா ஸ்ட்ராங் இல்லாமல் முட்டை மாதிரித்தான் தோன்றுகிறது! அப்படிப் பார்க்கப் போனா நம்ம நாட்டின் சாதா பஸ்ஸான லங்கா- அசோக் லேலான்ட் தான் உறுதியா தெரியுது. ஆனா அவங்களோட சொகுசு தயாரிப்பும் முட்டை மாதிரியேதான் தோன்றுது. ஆனா என்ன அடிபட்டா டிரெய்னே பிச்சுக்குது பஸ் எங்கே...!

ம்ம்ம்...எதுக்கும் சீட் பெல்ட்டைப் போட்டுட்டு தூங்குறது நல்லதோ? அப்படியே செய்தேன். ரெண்டு நாள்தான் அப்புறம் எல்லாத்தையும் வழக்கம்போல மறந்துட்டேன்.

அனாலும் நம்ம ராசி விடுமா? நேற்று எங்கேயும் எப்போதும் பார்த்து தொலைச்சிட்டேன்! கிலியாகிப் போய் இருந்ததால இரவு பஸ்ல ஏறி சீட்ல உட்கார்ந்ததும் சீட் பெல்டைத் தேடினா....அந்த பஸ்ல சீட் பெல்டே இல்ல! என்ன கொடுமை இது?

ஆனா ஒண்னு படம் சூப்பரா இருந்திச்சு! கூடவே அஞ்சலியும் ஹி! ஹி! ஆனா அதுக்கப்புறம் பஸ்ஸை பார்த்தாதான் பீதியா இருக்கு!    

ஏழரை! | வானம் தாண்டிய சிறகுகள்..

41 comments:

MANO நாஞ்சில் மனோ said...

முதல் ஏழரை...

MANO நாஞ்சில் மனோ said...

ஆனா ஒண்னு படம் சூப்பரா இருந்திச்சு! கூடவே அஞ்சலியும் ஹி! ஹி! ஆனா அதுக்கப்புறம் பஸ்ஸை பார்த்தாதான் பீதியா இருக்கு!//

பீதியா...?? பேதியா...?? சரியா சொல்லுங்கய்யா ஹா ஹா ஹா ஹா...

நிரூபன் said...

வணக்கம் தல, நலமா?

ஏழரைக்கும் உங்களுக்கும் பூர்வ ஜென்ம பந்தம் இருக்குமோ?

ஹி...ஹி....

வேதனையிலும் இவன் கடிக்கிறானே என்று நினைக்க வேணாம்,

ஒரு வலி நிறைந்த அனுபவத்தை, எல்லோரும் மாங்கு மாங்கு என்று கும்மும் ஜீ பையனின் அனுபவத்தை காமெடியா நீங்க எழுதியிருக்கிறீங்க.
அதான் அப்படித் தோணிச்சு..

செங்கோவி said...

அஞ்சலி ஸ்டில் சூப்பர்.

செங்கோவி said...

10 கோடிப் பேருக்கு மேல ஏழரை நடக்குது..எல்லாருக்கும் காலா கட் ஆகுது?

ஆண்ட்டி சும்மா விளையாடுது...அது ஃபோன் கால்-ஐ சொல்லி இருக்கும்..

செங்கோவி said...

ஆக்சுவலி அஞ்சலியே சூப்பர் தானே..

செங்கோவி said...

அந்தப் படத்தை ஆம்னி பஸ்ல பார்த்தா பீதியாத் தான் இருக்கும்..

மருதமூரான். said...

ஆகா! ஏழரை குறித்து எனக்கு பயமூட்டியிருக்கிறார்கள். அத விடுங்க.

இந்த பஸ் பிரயாணங்கள் என்டாலே எனக்கு எரிச்சல். அதுவும் மொக்கை படங்கள் போட்டு ரணகளமாக்கி விடுறாங்கள் இப்பெல்லாம்.

ஆனால், போட்டிக்கு ஓடும் பஸ்களின் பின்னால் எங்களின் எமனும் பயணிக்கிறான் என்ற உண்மையை அழகாகவும்- அதிர்ச்சியுட்டும் வகையிலும் சொல்லிய படம் “எங்கேயும் எப்போதும்“ படம் அருமை சார்.


(ஆனால் பாருங்க, உங்களோட நானொரு படம் வங்கினனே. எனக்கு தலையை எங்காவது சுவத்தில முட்டவேண்டும் என்ற நிலையை உருவாக்கிவிட்டது)

Yoga.S.FR said...

வணக்கம்!(மாலை?) நல்ல ஏழரை தான்.உங்களுக்கு மட்டுமில்லை,இங்கே உலாவும்(!) பலருக்கு அப்படிப் போல் தான் தெரிகிறது!சரி,சரி ஏதோ காயத்தோடு போயிற்றே?தீபாவளி வாழ்த்துக்கள்!

விக்கியுலகம் said...

மாப்ள உங்க ஊர்ல பஸ்சுல சீட் பெல்ட் இருக்காய்யா பார்ரா...பகிர்வுக்கு நன்றி! தீபாவளி வாழ்த்துக்கள்!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

சூப்பர்.,
தீபாவளி வாழ்த்துக்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அட்வைஸ் பண்ண ஆண்டிகிட்ட அப்படியே பரிகாரம் என்னன்னும் கேட்டுட்டு வந்திருக்கலாம்.....

சி.பி.செந்தில்குமார் said...

>>அதென்னவோ தெரியல தாய்க்குலங்களுக்கு எல்லாம் பார்த்த உடனேயே நம்ம மேல அப்பிடி ஒரு அன்பு!

விடுறா ஜீ இதெல்லாம் உனக்குப் புதுசா

hi hi அண்ணன் கேடி போல லேடி மேட்டர்ல அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சி.பி.செந்தில்குமார் said...

>>செங்கோவி said...

ஆக்சுவலி அஞ்சலியே சூப்பர் தானே..


அண்னன் 4 கமெண்ட் போட்டாரு, அதுல 2 கமெண்ட் அஞ்சலி பற்றி ஹி ஹி , ஆனா அண்ணன் ரொம்ப நல்லவருங்கோவ்

stalin said...

ஏழரை பந்தமா ........

கார்த்தி கேயனி said...

கவலை படாதீங்க

suryajeeva said...

அந்த ரண காலத்திலேயும் ஒரு கிளு கிளுப்பா?

உங்கள் நண்பன் said...

ஏழரை அப்படின்னா ஏழுக்கும் எட்டுக்கும் நடுவில் தானே ...? ஐயோ முடியல

கந்தசாமி. said...

கண்ணி ராசிகாரருக்கு இப்போ ஏழரை சனி நடந்துக்கிட்டு இருக்காம் ))) எனக்கும் ...

சென்னை பித்தன் said...

டிசம்பர் 21 வரை(வாக்கியப்படி) சாக்கிரதையாவே இருங்க!என் பங்குக்கு பீதியைக் கிளப்பிட்டேன்!

ஜீ... said...

//MANO நாஞ்சில் மனோ said...
பீதியா...?? பேதியா...?? சரியா சொல்லுங்கய்யா ஹா ஹா ஹா ஹா..//
பீதி மட்டும் தான் பாஸ்! பழகிடுச்சுல்ல!

ஜீ... said...

//நிரூபன் said...
ஒரு வலி நிறைந்த அனுபவத்தை, எல்லோரும் மாங்கு மாங்கு என்று கும்மும் ஜீ பையனின் அனுபவத்தை காமெடியா நீங்க எழுதியிருக்கிறீங்க.
அதான் அப்படித் தோணிச்சு//

Download: eType1.com/f.php?FIC7Ef
ம்ம்ம்..காமெடியாத்தான் போகுது பாஸ்! :-)

ஜீ... said...

//செங்கோவி said...
அஞ்சலி ஸ்டில் சூப்பர்//
ம்ம்ம்..அப்புறம்?

//செங்கோவி said...
10 கோடிப் பேருக்கு மேல ஏழரை நடக்குது..எல்லாருக்கும் காலா கட் ஆகுது?// TRUE

//ஆண்ட்டி சும்மா விளையாடுது...அது ஃபோன் கால்-ஐ சொல்லி இருக்கும்..//
:-)

//செங்கோவி said...
ஆக்சுவலி அஞ்சலியே சூப்பர் தானே..//
ஏண்ணே மறுபடியுமா? :-)

//செங்கோவி said...
அந்தப் படத்தை ஆம்னி பஸ்ல பார்த்தா பீதியாத் தான் இருக்கும்..//
ஆமா உங்களுக்கும்? நீங்களும் நம்மாளு தானே? :-)

ஜீ... said...

//மருதமூரான். said...
ஆகா! ஏழரை குறித்து எனக்கு பயமூட்டியிருக்கிறார்கள். அத விடுங்க//

உங்களுக்குமா?

//(ஆனால் பாருங்க, உங்களோட நானொரு படம் வங்கினனே. எனக்கு தலையை எங்காவது சுவத்தில முட்டவேண்டும் என்ற நிலையை உருவாக்கிவிட்டது)//
நீங்களும் வாங்கினீங்களா? மறந்திடுச்சு! :-)

ஜீ... said...

//Yoga.S.FR said...
வணக்கம்!(மாலை?) நல்ல ஏழரை தான்.உங்களுக்கு மட்டுமில்லை,இங்கே உலாவும்(!) பலருக்கு அப்படிப் போல் தான் தெரிகிறது!சரி,சரி ஏதோ காயத்தோடு போயிற்றே?தீபாவளி வாழ்த்துக்கள்!//

காயம் எல்லாம் இல்ல பாஸ்! அடி மட்டும் தான்! ஆனா பலம் தான்! :-)
உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!!

M.R said...

எனக்கும் அந்த அடிப்பட்ட அனுபவம் நண்பரே

தீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே

த.ம 3

Yoga.S.FR said...

ஆனா காலையில கொழப்பம் வேணாமேன்னு சொல்லல!இப்ப சொல்லுறேன்,கேட்டுக்குங்க;ஏழரை அப்பிடீன்னு தலைப்புப் போட்டுட்டு,அந்த அழகான பொண்ணு ஸ்டில் போட்டத வன்மையாக கண்டிக்கிறேன்!

அம்பாளடியாள் said...

என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி
பகிர்வுக்கு ........

Chitra said...

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

கவி அழகன் said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

ஹேமா said...

ஏழரை இதோடயாச்சும் போச்சே.சந்தோஷப்படுங்கோ ஜீ !

மாய உலகம் said...

தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா... மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்...

செங்கோவி said...

////செங்கோவி said...
அந்தப் படத்தை ஆம்னி பஸ்ல பார்த்தா பீதியாத் தான் இருக்கும்..//
ஆமா உங்களுக்கும்? நீங்களும் நம்மாளு தானே? :-)//

அடி வாங்கி, அடி வாங்கி பழகிப்போச்சுய்யா..அதனால ரொமப் வலிக்கிறதில்லை..

ஜீ... said...

//விக்கியுலகம் said...
மாப்ள உங்க ஊர்ல பஸ்சுல சீட் பெல்ட் இருக்காய்யா பார்ரா...பகிர்வுக்கு நன்றி! தீபாவளி வாழ்த்துக்கள்!//
சில சொகுசு பஸ்களுக்கு இருக்கு மாம்ஸ்! உங்களுக்கும் வாழ்த்துகள்!

ஜீ... said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அட்வைஸ் பண்ண ஆண்டிகிட்ட அப்படியே பரிகாரம் என்னன்னும் கேட்டுட்டு வந்திருக்கலாம்.....//
மறுபடியுமா? ஒருக்கா பாத்ததுக்கே...

ஜீ... said...

//சி.பி.செந்தில்குமார் said...
>>அதென்னவோ தெரியல தாய்க்குலங்களுக்கு எல்லாம் பார்த்த உடனேயே நம்ம மேல அப்பிடி ஒரு அன்பு!

விடுறா ஜீ இதெல்லாம் உனக்குப் புதுசா

hi hi அண்ணன் கேடி போல லேடி மேட்டர்ல அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

வேணாம் தம்பி! ஏற்கனவே நொந்து போயிருக்கேன்! :-)

ஜீ... said...

//stalin
ஏழரை பந்தமா .......// :-)

//கார்த்தி கேயனி said...
கவலை படாதீங்க// சேச்சே! இதுக்கெல்லாம்! :-)

//suryajeeva said...
அந்த ரண காலத்திலேயும் ஒரு கிளு கிளுப்பா?// பழகிருச்சுல்ல! :-)

//உங்கள் நண்பன் said...
ஏழரை அப்படின்னா ஏழுக்கும் எட்டுக்கும் நடுவில் தானே ...? ஐயோ முடியல// அதேதான்!

//கந்தசாமி. said...
கண்ணி ராசிகாரருக்கு இப்போ ஏழரை சனி நடந்துக்கிட்டு இருக்காம் ))) எனக்கும் ...// வாழ்த்துகள் ! :-))

//சென்னை பித்தன் said...
டிசம்பர் 21 வரை(வாக்கியப்படி) சாக்கிரதையாவே இருங்க!என் பங்குக்கு பீதியைக் கிளப்பிட்டேன்!//
நீங்களுமா? :-)

ஜீ... said...

//Yoga.S.FR said...
ஆனா காலையில கொழப்பம் வேணாமேன்னு சொல்லல!இப்ப சொல்லுறேன்,கேட்டுக்குங்க;ஏழரை அப்பிடீன்னு தலைப்புப் போட்டுட்டு,அந்த அழகான பொண்ணு ஸ்டில் போட்டத வன்மையாக கண்டிக்கிறேன்!//

விடுங்க பாஸ்! ஏதோ நம்மால் முடிஞ்சது! செங்கோவி அண்ணன் எவோ சந்தோஷப்பட்டார் பார்த்தீங்கள்ல? :-)

ஜீ... said...

@M.R
@Chitra
@அம்பாளடியாள்
@ கவி அழகன்
@மாய உலகம்

நன்றி! உங்களுக்கும் என அன்பான வாழ்த்துக்கள்!

//ஹேமா said...
ஏழரை இதோடயாச்சும் போச்சே.சந்தோஷப்படுங்கோ ஜீ !//
போயிடுச்சுங்கிறீங்க..! :-)

ரெவெரி said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...

angelin said...

இனிய தீபாவளித்திரு நாள் நல் வாழ்த்துக்கள்