Tuesday, October 4, 2011

புத்தரின் வாரிசுகளும், மிருக நேயமும்!
'நீ மாட்டிறைச்சி சாப்பிடுவாயா?' 
'ஓரிரு தடவை சாப்பிட்டிருக்கிறேன்!' 

'வீட்டில்?'
'அனுமதிப்பதில்லை!'

'நல்லது! நாங்களும் சாப்பிடுவதில்லை! அது பெரும்பாவம்!'

- தனது கோப்பையிலிருந்த மீன்துண்டைப் பிரித்து மேய்ந்துகொண்டே சீரியசாகப் பேசினார் நம்ம அலுவலக அங்கிள், உணவருந்தும்போது! அவர் ஒரு சிங்களவர். பௌத்தமதத்தவர்.

'உங்கள் மதத்திலும் அது பாவம்னு சொல்லியிருக்கா?'
'எந்த மாமிசமும் கூடாதுன்னுதான் சொல்லியிருக்கு!' 

'வெள்ளிக் கிழமைகளில் நீங்கள் சாப்பிடுவதில்லை அப்படித்தானே?...ஆனால் நீ?
'வெள்ளிக் கிழமையில் வீட்டில் அனுமதியில்லை...! ஆனால் வெள்ளிக்கிழமை மட்டும் மதத்தைப் பின்பற்றுவதில் எனக்கு உடன்பாடில்லை!'

'அதுவும் தவிர நாங்க எல்லாம் எங்க வசதிக்கேற்றபடி மதத்தை யூஸ் பண்ணிக் கொள்வோம்! இது ஒரு ஜனநாயக மதம். யாரும் கடவுளைக் கும்பிடவோ, கோயிலுக்குப் போகவோ கட்டாயப்படுத்துவதில்லை. விரும்பினால் செய்யலாம்'

'இதில இன்னொரு பெரிய அட்வான்டேஜும் இருக்கு. திறமை, பயிற்சி, முயற்சி இருந்தால் நாங்களே கடவுளாகவும் மாறக்கூடிய வாய்ப்பும் இருக்கறது! மற்றவங்க எல்லாம் வந்து வணங்குவார்கள்!'     

இந்த உரையாடலுக்குக் காரணம் ஒரு தொலைக்காட்சிச் செய்தி!

சிலாபம் முன்னேஸ்வரத்தில் கோவிலில் பலியிடுவதற்காக காத்திருந்த நானூறுக்கும் அதிகமான ஆடு, கோழிகளை பிரபல அமைச்சர் மேர்வின் சில்வா தன் பரிவாரங்களுடன் சென்று மீட்டதை சில நாட்களுக்கு முன் தொலைக்காட்சிகளில் பரபரப்பாக ஒளிபரப்பினார்கள்!

இந்த நிகழ்வின்மூலம் ஓவர் நைட்ல புத்தருக்கு ஈக்வலான இடத்தை அவர் பெற்றுவிட்டதைப் போலவே செய்தி பரப்பியது அந்த அல்லக்கை டீ.வி! சனல்4 பற்றிய செய்திகளை கூறும்போது அவர்கள் சனல்4 நாடகம (நாடகம என்றால் நாடகம் - அதாவது நடித்து எடுக்கப்பட்டதாம்!) என்றே குறிப்பிடுபவர்கள் அவர்கள்!

அந்த அமைச்சர் ஏற்கனவே ரொம்ப பிரபலம்! ஏராளமான நல்ல காரியங்கள் தவிர, தொலைக்காட்சிகளில் ஆபாச நடன நிகழ்ச்சிகளில் நடுவராகப் பணிபுரிவது, பகிரங்கமாகவே அந்தப் பெண்களிடம் ஜொள்ளு விடுவது என அவரது பணிகள் அளப்பரியன.

ஏற்கனவே வேறு ஒரு அமைச்சர் மூன்று வருடங்களுக்கு முன் என நினைக்கிறேன். மாட்டிறைச்சி சாப்பிடுவது பாவம் என்று அறிக்கை விட்டிருந்தார். முஸ்லிம் சகோதரர்களைக் குறிவைத்தே அவர் அப்படிச் சொன்னது எல்லோருக்கும் புரிந்திருந்தது. ஆனால் அவர்கள் மட்டும் உட்கொள்வதில்லையே!

ஆனால் மாட்டிறைச்சிக்கு ஆல்டர்நேட்டிவ்வா அவர் ஒரு விஷயம் சொன்னார் பாருங்க அதுதான் செம்ம காமெடி! அதாவது மாட்டிறைச்சிக்கு பதிலா நெத்தலி மீனைச் சாப்பிடச் சொன்னார்.

ஒரு மாட்டைக் கொன்றால் பல குடும்பங்களுக்கு உணவாகும். ஆனால் ஒரு தனிமனிதனின் உணவுக்கு பல நெத்தலிக் குடும்பங்களைக் கொல்ல வேண்டியிருக்கும். உருவத்தைப் பார்த்து அதற்கேற்றபடிதான் உயிரின் சைஸூம் இருக்கும் என்பது அவரோட நம்பிக்கை! மாட்டுக்கு பெரிய உயிர் இருக்கும், நெத்தலிக்கு சின்ன உயிர் இருக்கும் என்ற அவரின் ஆழ்ந்த நம்பிக்கை என்னைப் போலவே பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கலாம்.

எல்லா மதத்துக்குமே அன்பு தானே அடிப்படை! எந்த உயிரையும் துன்புறுத்தக் கூடாது என்றுதானே புத்தர் கூறியிருப்பார்? பசுவை/மாட்டை மட்டும் கொல்லாதேன்னா சொல்லியிருப்பார்? புரியலயே!

'புத்தர் மனுஷரைப் பற்றி எதுவுமே கூறவில்லையா?'
அவர் பதில் எதுவும் சொல்லவில்லை. சிரித்துக் கொண்டார்.

திடீரென்று கோப்பையிலிருந்த பொரித்த மீன்துண்டு அவருக்கு அவ்வளவு நகைச்சுவையாகத் தோன்றியிருக்க வாய்ப்பில்லாததால் நான் கேட்டதற்குத்தான் சிரிக்கிறார் எனப் புரிந்தது! 

நிஜமாகவே புத்தர் மனுஷரைப் பற்றி ஏதும் கூறவில்லையா? அல்லது வாரிசுகளுக்குத் தெரியவில்லையா?

இப்பெல்லாம் இலங்கைல யார் யார் திடீர் திடீரென்று புத்தரின் நேரடி வாரிசாவார்கள், அடுத்த ஹீரோ அவதாரம் எடுக்கப்போகிறார்களோ என்று நினைத்தாலே பெரும் பீதியா இருக்கு. திடீர் திடீரென்று யார் யாருக்கோ எல்லாம் மிருகாபிமானம் வந்து தொலைக்கிறது! இவர்களில் யாருக்குமே மனிதர்கள் பற்றிக் கவலையேயில்லை என்பது கூடுதல் ஆச்சரியம்!

பிற உயிர்களைத் துன்புறுத்தக்கூடாது, கொல்லக்கூடாது என்பதுதான் எனது கொள்கையும்! அதாவது நான் கொல்லக்கூடாது! மற்றவர்கள் கொன்று சமைத்துத் தருவதை சாப்பிடலாம் தப்பேயில்லை! - இப்படி ஒரு உயர்ந்த கொள்கையை வைத்திருக்கும் லட்சக் கணக்கானோரில் ஒருவனான எனக்கு   மிருகவதை பற்றிப் பேச தகுதியில்லை என்பதால் நான் குறைந்த பட்ச நேர்மையுடன் இது பற்றிப் பேசாமல் ஒதுங்கி விடுவதுண்டு!

ஒன்று மட்டும் புரியவேயில்லை. இலங்கை போன்ற ஒரு 'ஜனநாயக' நாட்டில் மிருகவதை பற்றிப் பேச வேண்டிய அவசியம் என்ன? போகிற போக்கைப் பார்த்தால் சக மனிதர்களை மதிக்கும் குணமே வழக்கொழிந்து போய் எதிர்காலத்தல் மிருகாபிமானம், மிருகநேயம் அதிகம் கொண்டவர்களே மக்கள் தலைவர்களாக வாய்ப்புகள் அதிகமென்று தோன்றுகிறது.

******************

நம்மில் சிலர் பிராணிகளை மதிக்கும், நேசிக்கும் அளவில் கால்பங்கு கூட சக மனிதர்களை பொருட்படுத்துவதில்லை என்பது கொடுமையே!

தம் வளர்ப்புப் பிராணிகளை ஒரு குழந்தையைப் போலப் பராமரிக்கும் உயர்வர்க்க மனிதர்களைப் பார்ப்பதுண்டு. கார்களில் பயணிக்கும் உயர்ரக நாய்களைப் பார்க்கும்போதெல்லாம் மகிழ்ச்சியாக இருந்தாலும், கூடவே வறுமை காரணமாக கல்வி மறுக்கப்பட்டு அவர்களின் வீட்டு வேலைக்கமர்த்தப் பட்டிருக்கும் முகம்தெரியா சிறுமிகள் ஞாபகமும் வரும்!

30 comments:

 1. வருத்தமான விஷயம்தான் இல்லையா என்னத்தை சொல்ல....

  ReplyDelete
 2. நல்ல விளக்கம் நண்பரே

  ReplyDelete
 3. மனிதர்களை மதிக்க தெரிந்தவர்களாக இருந்தால் எதற்கு இத்தனை சண்டை சச்சரவுகள் எல்லாம் செய்ய போகிறார்கள்,புத்தர் உயிரோடு இருந்திருந்தால் இன்னேரம் தூக்கு போட்டு செத்திருப்பார்

  ReplyDelete
 4. எனக்கு பிடித்த குறள்...
  தான் ஊன் பெருக்க தான் பிரிதூனுன்பான் எங்கனம்
  வந்தாலும் அருள்..

  இங்கு அருள் என்பது கடவுள் அருள் அல்ல; மனிதாபிமானம்

  ReplyDelete
 5. நல்ல அலசல் ,சில வரிகள் மண வேதனை தான் ,பகிர்வுக்கு நன்றி நண்பா

  ReplyDelete
 6. உண்மையே ... இனி வரும் காலங்களில் மனிதநேயம் அருகி மிருகநேயம் அதிகரிக்கும்போல்தான் தெரிகிறது. சில இடங்களில் மிருகங்களுக்கு கொடுக்கும் மதிப்பில் பாதிகூட மனிதர்களுக்கும் மனித மனங்களுக்கும் கொடுப்பதில்லை... மனவேதனையளிக்கும் உண்மையே..

  ReplyDelete
 7. //தம் வளர்ப்புப் பிராணிகளை ஒரு குழந்தையைப் போலப் பராமரிக்கும் உயர்வர்க்க மனிதர்களைப் பார்ப்பதுண்டு. கார்களில் பயணிக்கும் உயர்ரக நாய்களைப் பார்க்கும்போதெல்லாம் மகிழ்ச்சியாக இருந்தாலும், கூடவே வறுமை காரணமாக கல்வி மறுக்கப்பட்டு அவர்களின் வீட்டு வேலைக்கமர்த்தப் பட்டிருக்கும் முகம்தெரியா சிறுமிகள் ஞாபகமும் வரும்!//

  இத்தகைய முரண்பாடுகளை பார்க்கும் போது ரொம்பவே எரிச்சலா இருக்கும். நனும் நிறைய இடங்களில் பார்த்திருக்கிறேன்

  ReplyDelete
 8. இனிய இரவு வணக்கம் பாஸ்,

  நம்ம ஊரு கோமாளி ஒருவரை டீவி சனல் இன்னும் பிரபலமாக்கி விட்டதே..

  முடியலை பாஸ்....

  ReplyDelete
 9. மனிதாபிமானம் + மிருகாபிமானம் எனக்கு ரொம்ப குறைவு...

  நான் பார்க்கும் பலருக்கு மிருகத்தின் மேல் அன்பு அதிகம்... அதிலும் திருமணம் ஆகியோருக்கு...

  என்ன சம்பந்தமோ...

  ReplyDelete
 10. த.ம.8.
  மனித நேயம் இல்லாத மிருக நேயமா?இரண்டுமே வேண்டும்!

  ReplyDelete
 11. யாரு பாஸ் அந்த அமைச்சர்? அத விடுங்க, உங்க கடைசி வரி நச்...

  ReplyDelete
 12. மனிதாபிமானத்தைவிட மிருகாபிமானம் பேணும் இந்தப் போக்கு இலங்கையில் மட்டுமல்ல இப்போ எல்லா இடங்களிலும் பரவி வருது. இந்திய நகரங்களில் வருடந்தோறும் வெறிநாய்க்கடிகளால் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருது, ஆனா அந்த வெறிநாய்களை அழிக்க அனுமதி இல்லை, மிருகாபிமானமாம்!

  ReplyDelete
 13. எல்லா உயிர்வதைகளுமே தவறுதான். கோவிலில் மிருகங்களைக் காப்பாற்றிய அமைச்சர் இலங்கையின் ஒண்ணாம் நம்பர் போதைப்பொருள் வர்த்தகர் என ஒரு தகவல் கூறுகிறது.மனிதசமுதாயத்தையே அழிவின்விளிம்பிற்கு கொண்டுசெல்லும் இது ரொம்ப நல்லகாரியமாகுமோ.அவனவன் வசதிக்குத்தான் சட்டங்களும் நியாயங்களும்

  ReplyDelete
 14. உலகம் போகும் போக்கு ஒன்றுமே புரியவில்லை

  ReplyDelete
 15. சோகமான விடயம் மிருகத்திற்கு இருக்கும் மரியாதை மனிதருக்கு இல்லைத்தான் போலும் அந்த அமைச்சர் யானைச் சவாரி மறக்க முடியாது!

  ReplyDelete
 16. நன்றாக சொன்னீர்கள் நண்பா எனை கவர்ந்த பதிவொன்று...!

  ReplyDelete
 17. பாவம் புத்தர்..இவர்களிடம் மாட்டிக்கொண்டு படாதபாடு படுகிறார்!

  ReplyDelete
 18. இந்த மாதிரி ஜீவகாருண்யம் பேசுவதெல்லாம் ஃபேசன் இங்கே...அங்கே அது மத/இன வெறியாக உள்ளது போல.

  ReplyDelete
 19. மனிதர்கள் பலியிடப்படும் புண்ணிய பூமியில் மிருக பலியா ...

  ReplyDelete
 20. வருத்தமான விசயந்தான்...
  நீங்கள் கடைசியில் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மையே...

  ReplyDelete
 21. ////இப்பெல்லாம் இலங்கைல யார் யார் திடீர் திடீரென்று புத்தரின் நேரடி வாரிசாவார்கள், அடுத்த ஹீரோ அவதாரம் எடுக்கப்போகிறார்களோ என்று நினைத்தாலே பெரும் பீதியா இருக்கு. திடீர் திடீரென்று யார் யாருக்கோ எல்லாம் மிருகாபிமானம் வந்து தொலைக்கிறது! இவர்களில் யாருக்குமே மனிதர்கள் பற்றிக் கவலையேயில்லை என்பது கூடுதல் ஆச்சரியம்!////

  இதனைவிட வேறு வடிவங்களில் “இவர்களின்“ இம்சைகளை சொல்லிவிட முடியாது.

  சூப்பர் பாஸ்.

  ReplyDelete
 22. மாப்ள நான் லேட்டுய்யா சாரி...ஹிஹி...பட் புத்தர் என்னை பார்த்து சிரிக்கும்படி நான் நடந்துக்க மாட்டேன்னு நெனைக்கிறேன்...அயய்யோ சாமி குத்தமாயிடுமோ!

  ReplyDelete
 23. மனிதனோ ,மிருகமோ நேயம் வேண்டும்!

  ReplyDelete
 24. சாரி பாஸ்! எனக்கு உங்க மேல நோ காண்டா! இனி ரெகுலரா வருவேன்!

  அருமையான விஷயம் ஒன்றை பதிவாக்கியிருக்கீங்க! மனிதாபிமானம் எல்லாம் மலையேறிப் போச்சுண்ணே!

  ReplyDelete
 25. மனித மனம் முதலில் மனிதம் பெறவேண்டும் என்ற தங்களின் கருத்து நச்.

  ReplyDelete
 26. அண்ணே, ஏழாம் அறிவு எந்தப்படத்தில் இருந்து சுட்டது என கண்டு பிடித்து ஒரு பதிவு போடவும்!!!

  ReplyDelete
 27. //சி.பி.செந்தில்குமார் said...
  அண்ணே, ஏழாம் அறிவு எந்தப்படத்தில் இருந்து சுட்டது என கண்டு பிடித்து ஒரு பதிவு போடவும்!!!//

  தம்பி உங்க லொள்ளுக்கு அளவேயில்லையா? :-)

  அது எங்கேயும் சுடலைன்னு முருகதாஸ் சொல்லியிருக்காரே!

  ReplyDelete
 28. இதே அமைச்சர் முன்பு ஒரு அரசாங்க உத்தியோகத்தர் ஒருவரை மரத்தில் கட்டி வைத்து அடித்தார். சிரச தொலைக்காட்சிக்குள் புகுந்து ஊழியர்களைத் தாக்கினார். மனிதர்களைக் கட்டி வைத்து விட்டு மாடுகளை அவிட்டு விடுவது தான் இப்போது தர்மம்.

  கோயிலில் வெட்டினால் பிழை, குருக்கள் வெட்டிய இறைச்சியை கபாப், தந்தூரி, BBQ என்று பெயரிட்டு மேசையில் ஆவி பறக்க கொண்டு வந்து கொடுத்திருந்தால் அமைச்சரும் குளிர்ந்திருப்பார், காரியமும் நடந்திருக்கும்.

  ReplyDelete
 29. //// முஸ்லிம் சகோதரர்களைக் குறிவைத்தே அவர் அப்படிச் சொன்னது எல்லோருக்கும் புரிந்திருந்தது. ஆனால் அவர்கள் மட்டும் உட்கொள்வதில்லையே!///

  ஏன் ஜீ மாட்டுக்கு மட்டும் தான் உயிர் இருக்கா... மற்றவைக்கெல்லாம் என்ன இருக்கிறது என்பது அவர்க்கு தெரியாதோ...

  ReplyDelete
 30. அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
  தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி
  அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி (திருவருட்பா அகவல்)

  திருவடி தீக்ஷை(Self realization)

  இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.
  நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
  சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

  http://sagakalvi.blogspot.com/


  Please follow

  (First 2 mins audio may not be clear... sorry for that)
  http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
  http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
  http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo  Online Books
  http://www.vallalyaar.com/?p=409


  Contact guru :
  Shiva Selvaraj,
  Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
  17/49p, “Thanga Jothi “,
  Kalaignar kudi-iruppu – Madhavapuram,
  Kanyakumari – 629702.
  Cell : 92451 53454

  ReplyDelete

Followers

Powered by Blogger.

Follow by Email

Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |