Friday, August 26, 2011

'நாய்'மொழி!'டோன்ட் கோ அவுட்... டோன்ட் கோ!'

சொல்லிக்கொண்டே வெளியில் வந்தது ஒரு சிறிய ஹை-கிளாஸ் நாய்.

என்னைப்போலவே நண்பனும் கலவரமானான். அவனும் இதுவரை நாய் பேசியதைப் பார்த்ததில்லை போலும்! நாயா பேசிச்சு? சரியாக குரல் பொருந்தினாலும் இந்த நாயால் இவ்வளவு சத்தமாக..ஆக்ரோஷமாக..?

இந்த நாயா பேசிச்சு?
பின்னாலயே வந்த சற்றே பெரிய வயதான....... நாயல்ல, பெண்மணியைப் பார்த்ததும் தான்,  நிம்மதியாச்சு!

'ஜிம்மி கோ இன்சைட் கோ இன்சைட்'

நிச்சயமாக ஜிம்மியால் அதைவிட சத்தமாக குரைக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்டதாலோ என்னவோ ஜிம்மி பம்மிக் கொண்டே உள்ளே போனது!

ஜிம்மிக்குத் தமிழ் தெரியாது போல! என்றான் நண்பன். இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லையே! பொதுவாக ஹை-கிளாஸ் நாய்கள் எல்லாம் ஆங்கிலத்தில் தான் உரையாடுகின்றன அல்லது செவிமடுக்கின்றன! அதுவும் குறிப்பாகத் தமிழ்நாய்கள்! தமிழில் பேசுவது அவ்வளவு நாகரீகமல்ல என்பதோடு 'ஸ்டேட்டஸ்'சையும் குறைத்துக் காட்டக்கூடும் என்ற உயரிய கருத்து நாய்கள் வரையில் பரவியுள்ளதா? என்பது இங்கு ஆராயப்படவேண்டியது!பொதுவாக குரைக்கும் நாய்களைக் கண்டால் எனக்குப் பயம்! குரைக்கிற நாய் கடிக்காது என்று சொல்லப்படுகிறபோதும், இந்த விஷயம் அந்த நாய்க்குத் தெரிந்திருக்கவேண்டுமே என்ற நியாயமான பயமும், யாராவது, எப்போதாவது நாய்களுக்கு இதைப் போதித்திருப்பார்களா என்ற அநியாயமான சந்தேகமும் எனக்குண்டு! அதுவும் தவிர சில நாய்கள் குரைக்கும் போது குலைநடுங்கும் இந்தக்குரைப்புக்கு கடியே பரவாயில்லை எனத் தோன்றுவதுமுண்டு!

சில நாய்கள் புதிதாக யாரும் வீட்டுக்குப் போனாலும் கண்டுகொள்வதில்லை! ஒற்றைக்கண்ணை மட்டும் உயர்த்திப் பார்த்துவிட்டு அப்படியே பேசாமல் படுத்திருக்கும். இந்த நேரத்தில அந்த குரைக்கிற நாய் பழமொழி ஞாபகத்துக்கு வந்து பயமுறுத்தும்! ஏதோ பிளான் பண்ணித்தான் பேசாம இருக்கோ என்று! ஆனாலும் அதற்கு 'குரைப்பதால் என்ன பயன்? எப்படியும் கடிக்க அனுமதிக்கப் போவதில்லை எதுக்கு வீணா குறைத்து நம்ம எனர்ஜியை வேஸ்ட் ஆக்கணும்?' என்ற ஆயாசமும் காரணமாயிருக்கலாம்!

பெரும்பாலான ஹை-கிளாஸ் நாய்கள் சாதா நாய்கள் போல அநாகரீகமாக சத்தமாகக் குரைப்பதில்லை! அட குரைப்பதேயில்லை! ஆனால் அவற்றுக்கும் சேர்த்து அவற்றின் எஜமானர்களே குரைத்துக் கொள்வதை அவதானிக்க முடிகிறது!

என்நண்பன் சொல்வான் நாய்களுக்கும் பலவேளைகளில் அவைகளின் எஜமானர்கள் போலவே முகம் மாறித்தொலைக்கிறதென்று. அது எவ்வளவு உண்மையென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் சமயத்தில் யார் பேசுவது/குரைப்பது எனக் குழப்பும் விதமான குரல்வளம் இருவருக்கும் வாய்த்துவிடுகிறது! ஒரேமாதிரியான தொனி,உரப்பு என்று..ஆனால் இது எவ்வாறு? யாரைப்பார்த்து யார் பழகினார்கள் என்பது ஒரு புதிர்தான். நாய்களுக்கு மிமிக்ரி தெரியுமா?


ஹை-கிளாஸ் நாய்களால் அவற்றின் பணக்கார சூழ்நிலை தவித்து சாதா நாய்களுடன் வாழ முடியுமா? என்றாவது ஒருநாள் பொது உலகில் அதாவது சாதா நாய்களுடன் வாழ வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படுமானால் அது ஒரு மிகப்பெரும் சவாலாகவே இருக்கும் என்பது கண்கூடு! ஆனாலும் அப்படி 'நடுவீதிக்கு' வரும் நிலை எந்தவொரு ரிசேசன் வந்தாலும் எங்கள் நாடுகளில் ஏற்படும் சாத்தியமில்லை. அமெரிக்க வாழ் நாய்களுக்கே அந்த அபாயமுண்டு.

ஹை-கிளாஸ் நாய்களெல்லாம் ஏன் தம் தாய்மொழியைப் புறக்கணிக்கின்றன? அதற்கான காரணத்தை ஒருநண்பர் தெளிவுபடுத்தினார். அதாவது அவற்றுக்கு ஆங்கில மொழிக் கல்வி மட்டுமே கற்பிக்கப்படுகிறது! இதற்கான பிரத்தியேக  கல்வி நிலையங்கள் இயங்கிவருகிறதாம்!

சாதா நாய்கள் படிப்பதில்லை! அனுபவ அறிவு மட்டுமே! ஆனால் இண்டலிஜென்சில் சாதா நாய்களை க(அ)டிச்சுக்க முடியாதென்று மேலும் கூறினார்.ஹைகிளாஸ் நாய்களால் சுயமாக ரோட்டைக்கூட கிராஸ் பண்ணத்  
தெரியாதென்றார். வெறும் ஏட்டுச்சுரைக்காய் ரோட்டுக் கிராஸ் பண்ணக்கூட உதவாது என்பது இங்கே உண்மையாகிறது! 

சிலசமயங்களில் எப்படியோ தவறி வீதிக்கு வந்துவிடும் ஹை-கிளாஸ் நாய்கள் சாதா நாய்களின் கேள்விகளுக்கு 'மொழிப் பிரச்சினை' காரணமாக பதில்சொல்ல முடியாமல் புறமுதுகிட்டு ஓடுவதை நான் பார்த்திருக்கிறேன்.


தெரு நாய்களுக்கு நாகரீகம் தெரியாதா? யார் சொன்னது? நம்ம சிங்கம் இருக்கே! நண்பன் ஜெயனும் நானும் அப்படித்தான் குறிப்பிடுவோம்! பார்ப்பதற்கு கம்பீரமாக, புஷ்டியாக எப்போதும் நீராடிவிட்டு வந்த மாதிரியான சுத்தமான ஒரு தோற்றம்! வெள்ளவத்தையில் ருத்ரா மாவத்தைக்கும் லிட்டில் ஏசியாவுக்கும் இடையில் சிங்கம் நடைபயில்வது ஒரு தனியழகு!

முதலில் பார்ப்பவர்களுக்கு சிங்கத்தின் பெரிய உருவம் பயத்தைக் கொடுத்தாலும் அது ஒரு சாதுவான மிக அமைதியான Walker Friendly யான நாய்! எப்போதும் அவசரமும் பரபரப்புமான மாலை நேரங்களில் அந்த ஏரியாவில் நான் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவன் என்று எதற்கும் அலட்டிக் கொள்ளாமல் மிக மெதுவாக சிங்கம் நடைபோடுவதை நாங்கள் ரசித்தாலும் சிங்கம் என்றும் எங்களைக் கண்டுகொண்டதில்லை.

நான் கொழும்பு வந்த புதிதில் நடைபாதையில் செல்லும்போது நான் முடிந்தளவு ஒதுங்கிச் சென்றும் அசிரத்தையாக வந்து வந்து மோதினார் ஒரு பெண். தப்பு அந்தப்பெண்ணில் இருந்தாலும் தமிழ்ப் பாரம்பரியம், பண்பாடு தெரிந்ததால் பதறியடித்து, பயந்து நான் ஸாரி சொல்ல அந்தப்பெண்ணோ 'எவன்டா வெளங்காதவனா இருக்கானே? யாழ்ப்பாணத்திலிருந்து புதுசா வந்திருப்பான்போல' என்றொரு பார்வை பார்த்துச் சென்றார்! அப்போதான் புரிஞ்சுது இடிச்சா ஸாரி சொல்வது நாகரீகமல்ல என்பது!

ஆனால் சிங்கத்துக்கு இதெல்லாம் தெரிந்திருக்கிறது! தன்மீது யார் மோதினாலும், இடித்தாலும் அது சட்டை செய்வதில்லை. சிறு முறைப்போ, குரைப்போ காட்டுவதில்லை என்பது ஆச்சரியமே! இருந்தாலும் தான் யார்மீதும் மோதாமல் இருக்குமளவுக்கு தனது நாய்கரீகத்தையும் பேணத்தவறுவதில்லை!

பல நாட்களாக நான் சிங்கத்தைப் பார்க்கவில்லை. இப்போதுதான் அந்த சந்தேகம் எழுகிறது. சிங்கத்துக்கு தமிழ் தெரியுமா? பொதுவாக வெள்ளவத்தையிலுள்ள சிங்கள நாய்களுக்கும் தமிழ் தெரிந்திருக்கும். இருந்தாலும் சிங்கத்துக்கு தமிழ் தெரியுமா?
'நாய்'மொழி! | வானம் தாண்டிய சிறகுகள்..

49 comments:

விக்கியுலகம் said...

எலேய் நீ யார கடிக்கரே இப்படி..எனக்கென்னமோ தாக்குதல் பதிவு போல இருக்கு...ஹிஹி!

கந்தசாமி. said...

குரைக்கிற நாய் கடிக்காது என்று சொல்வது பொய் , சில நாய்கள் அவ்வாறு தான். ஆனால் நான் கண்ட அனுபவத்தில் குரைக்கிற நாய்கள் தான் பெரும்பாலும் கடிக்கும் ;-)

ரெவெரி said...

VOW VOW...வவ்..வவ்..

இராஜராஜேஸ்வரி said...

'நாய்'மொழி! ரசிக்கவைக்கிறது.

செங்கோவி said...

சூப்பர் ஜீ..

கூர்மையான அவதானிப்பு இல்லாமல் இப்படி ஒரு பதிவு எழுத முடியாது..இடையில் ஏதேதோ குறியீடுகளை உள்ளடக்கிய உணர்வு!

செங்கோவி said...

//டோன்ட் கோ அவுட்... டோன்ட் கோ!'

சொல்லிக்கொண்டே வெளியில் வந்தது ஒரு சிறிய ஹை-கிளாஸ் நாய்.//

நச்சுன்னு ஒரு ஆரம்பம்..சுஜாதா கதை மாதிரி.

கடம்பவன குயில் said...

//இந்த நாயா பேசிச்சு?
பின்னாலயே வந்த சற்றே பெரிய வயதான....... நாயல்ல, பெண்மணியைப் பார்த்ததும் தான், நிம்மதியாச்சு!//

உங்களுக்கே உரித்தான சிறப்பான நக்கல் நையாண்டி கலந்த நாய் ஆராய்ச்சி அற்புதம். வேறென்னத்த லொள்ள......

செங்கோவி said...

//ஆனால் சமயத்தில் யார் பேசுவது/குரைப்பது எனக் குழப்பும் விதமான குரல்வளம் இருவருக்கும் வாய்த்துவிடுகிறது! ஒரேமாதிரியான தொனி,உரப்பு என்று..ஆனால் இது எவ்வாறு? யாரைப்பார்த்து யார் பழகினார்கள் என்பது ஒரு புதிர்தான். நாய்களுக்கு மிமிக்ரி தெரியுமா?//

பதிவின் டாப் இது தான்..

செங்கோவி said...

// நம்ம சிங்கம் இருக்கே!//

இதற்கு முன்வரை பதிவு எனக்குப் புரிகிறது..இதற்குப் பின் வருவதற்கும் முந்தைய பகுதிக்கும் என்ன இணைப்பு என்று புரியவில்லை. ஹைகிளாஸ்க்கும் தெருநாய்க்குமான ஒப்பீடு என்று கொள்ளலாமா?

செங்கோவி said...

//பல நாட்களாக நான் சிங்கத்தைப் பார்க்கவில்லை. இப்போதுதான் அந்த சந்தேகம் எழுகிறது. சிங்கத்துக்கு தமிழ் தெரியுமா? பொதுவாக வெள்ளவத்தையிலுள்ள சிங்கள நாய்களுக்கும் தமிழ் தெரிந்திருக்கும். //

தமிழ் தெரிந்ததால் வந்த ஆபத்தா?

கடம்பவன குயில் said...

//பெரும்பாலான ஹை-கிளாஸ் நாய்கள் சாதா நாய்கள் போல அநாகரீகமாக சத்தமாகக் குரைப்பதில்லை! அட குரைப்பதேயில்லை! ஆனால் அவற்றுக்கும் சேர்த்து அவற்றின் எஜமானர்களே குரைத்துக் கொள்வதை அவதானிக்க முடிகிறது!//

இதெல்லாம் விட வீட்டைப்பாத்துக்க நாய் வாங்கிட்டு அந்த நாயைப் பாத்துக்க ஆள் போடுவாங்க பாருங்க...அதுதான் ஹைகிளாஸ் காமெடி.

செங்கோவி said...

சரளமான நடையே இந்தப் பதிவின் அழகு!

தொடர்ந்து கலக்குங்கள்.

காட்டான் said...

அட இது ரெம்ப வித்தியாசமாய் இருக்கேய்யா... வாழ்த்துக்கள்..

நாயார் பேரு யிம்மிதானே மாப்பிள.

காட்டான் குழ போட்டான்

கந்தசாமி. said...

எதோ நடந்திருக்கிறது போல !!!!

கந்தசாமி. said...

சிங்கத்தால பாதிப்பா... நான் கூட மூன்று வருடங்களுக்கு முன்னர்......................

ஆகுலன் said...

அண்ணே இது ஆருக்கு ஆப்பு......
அழகா சொல்லி இருக்குறீர்கள்.....

///அசிரத்தையாக வந்து வந்து மோதினார் ஒரு பெண்.////
நல்லாத்தான் இருக்குது....

கணேஷ் said...

குரைக்கிற நாய் கடிக்காது என்று சொல்லப்படுகிறபோதும், இந்த விஷயம் அந்த நாய்க்குத் தெரிந்திருக்கவேண்டும்.//

சூப்பரு))

நாய் பதிவு நல்ல பதிவு))படமும்

மாய உலகம் said...

நாய் மொழியை நானும் கற்றுக்கொண்டேன் நண்பா உங்க பதிவின் மூலம் நன்றி

சே.குமார் said...

நல்ல பகிர்வு... வாழ்த்துக்கள்.

அம்பாளடியாள் said...

ஜிம்மிக்குத் தமிழ் தெரியாது போல! என்றான் நண்பன். இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லையே! பொதுவாக ஹை-கிளாஸ் நாய்கள் எல்லாம் ஆங்கிலத்தில் தான் உரையாடுகின்றன அல்லது செவிமடுக்கின்றன! அதுவும் குறிப்பாகத் தமிழ்நாய்கள்! தமிழில் பேசுவது அவ்வளவு நாகரீகமல்ல என்பதோடு 'ஸ்டேட்டஸ்'சையும் குறைத்துக் காட்டக்கூடும் என்ற உயரிய கருத்து நாய்கள் வரையில் பரவியுள்ளதா? என்பது இங்கு ஆராயப்படவேண்டியது!

எங்கோ ஆரம்பிச்சு இங்க வந்து கடைசி வரியிலையும் ஒரு கேள்வி வைத்தீர்களே அருமை அருமையான ஆராட்சி .வாழ்த்துக்கள் சகோ ."உண்மை என்றுமே அழியாது"
நன்றி சகோ பகிர்வுக்கு .வாங்க எங்கட கடைக்கும் வாங்க சகோ .....

துஷ்யந்தன் said...

மாத்தி யோசிச்சுட்டீன்களோ பாஸ்,
ஆனாலும் பதிவு நல்லாத்தான் இருக்கு. :)

kobiraj said...

நாய்மொழி ரசிக வைக்கிறது

சி.பி.செந்தில்குமார் said...

haa haa அட புதுசா இருக்கே

மைந்தன் சிவா said...

ரொம்ப இறங்கி பழகுவாரோ????கச்சிதமா புரிஞ்சு வைச்சிக்கார்??

Riyas said...

ஆஹா நாயை வைத்தே ஒரு பதிவா.. நல்லாயிருந்தது..

Riyas said...

//ஹை-கிளாஸ் நாய்கள் எல்லாம் ஆங்கிலத்தில் தான் உரையாடுகின்றன அல்லது செவிமடுக்கின்றன//

காலத்திற்கேற்ப மாறித்தானே ஆகனும்..

தமிழ்மனம் voted

நிரூபன் said...

தமிழக மக்களின் உணர்வெழுச்சிக்குச் சவாலாக அமையவுள்ள தூக்குத் தண்டனை விடயம்!
அன்னைத் தமிழகமே, நீ என்ன பதில் சொல்லப் போகிறாய்?


பின்னூட்டப் பெட்டி மூலம் நான் விளம்பரம் போடுவதில்லை, ஆனாலும் என்னை மன்னிக்கவும்,

theep said...

எப்படி ஜீ?!! இதை எழுத நாய் படா பாடு பட்டிருப்பீங்களே!

MANO நாஞ்சில் மனோ said...

நாய்க்கடிக்கு மருந்து இருக்காவோய்....?

FOOD said...

நாய் குரைக்குதோ, கடிக்குதோ,ஆனா,ந்ன்றியுள்ளது. இப்படில்லாம் நம்மை பற்றி ஆராய்ச்சி பண்ணாதுன்னு நினைக்கிறேன்.

இராஜராஜேஸ்வரி said...

நாய்களுக்கு மிமிக்ரி தெரியுமா?//

தினேஷ்குமார் said...

சூப்பர் கலக்கலுங்கோ.........

இராஜராஜேஸ்வரி said...

நாய்களுக்கும் பலவேளைகளில் அவைகளின் எஜமானர்கள் போலவே முகம் மாறித்தொலைக்கிறதென்று.

Nesan said...

அதிகமான வெள்ளவத்தை நாய்கள் டமில் தெரியாது ஜீ இதுகூடப்புரியலையா அண்ணா கனடா அக்கா லண்டன் மம்மி சுவிஸ் இப்படிதான் கடிக்கும் சீசீ குரைக்கும் வித்தியாசமான பதிவு!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

வித்தியாசமான சிந்தனை..
நாய்மொழி!!!!

காட்டான் said...

சில நாய்கள் புதிதாக யாரும் வீட்டுக்குப் போனாலும் கண்டுகொள்வதில்லை! ஒற்றைக்கண்ணை மட்டும் உயர்த்திப் பார்த்துவிட்டு அப்படியே பேசாமல் படுத்திருக்கும். இந்த நேரத்தில அந்த குரைக்கிற நாய் பழமொழி ஞாபகத்துக்கு வந்து பயமுறுத்தும்! ஏதோ பிளான் பண்ணித்தான் பேசாம இருக்கோ என்று! ஆனாலும் அதற்கு 'குரைப்பதால் என்ன பயன்? எப்படியும் கடிக்க அனுமதிக்கப் போவதில்லை எதுக்கு வீணா குறைத்து நம்ம எனர்ஜியை வேஸ்ட் ஆக்கணும்?' என்ற ஆயாசமும் காரணமாயிருக்கலாம்!

இப்பிடிப்பட்ட ஜிம்மிகள் பிழைக்கத்தெரிந்த ஜிம்மிகள்.. இவர்கள் எசமானின் எனர்ஜியையும் வேஸ்ட் ஆக்குவதில்லை விருந்தாளியின் எனர்ஜியையும் வேஸ்ட் ஆக்குவதில்லை.. ரெம்ம நல்லவங்கையா..!!??

"என் ராஜபாட்டை"- ராஜா said...

நல்ல ரசனை

மருதமூரான். said...

////ஜிம்மிக்குத் தமிழ் தெரியாது போல! என்றான் நண்பன். இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லையே! பொதுவாக ஹை-கிளாஸ் நாய்கள் எல்லாம் ஆங்கிலத்தில் தான் உரையாடுகின்றன அல்லது செவிமடுக்கின்றன! அதுவும் குறிப்பாகத் தமிழ்நாய்கள்! தமிழில் பேசுவது அவ்வளவு நாகரீகமல்ல என்பதோடு 'ஸ்டேட்டஸ்'சையும் குறைத்துக் காட்டக்கூடும் என்ற உயரிய கருத்து நாய்கள் வரையில் பரவியுள்ளதா? என்பது இங்கு ஆராயப்படவேண்டியது!////


இதுவொன்றே போதும் தற்போதுள்ள பெரும்பான்மை மனிதர்களின் மனநிலையைப் புரிந்து கொள்ள. நீங்கள் நாயின் ரூபத்தில் விடயத்தை சொல்லியிருக்கிறீர்கள்.

கலக்கம் பாஸ்.

Krishnan R said...

நாய்கள் பற்றிய ஆராய்ச்சி நல்லா இருக்கு..... எல்லாம் சரியான, அனைவராலும் ஒத்துக்கொள்ள கூடிய ஆராய்ச்சி முடிவுகள்தான்....

பாரத்... பாரதி... said...

நிறைய உள்ளர்த்தத்தோடு எழுதியிருக்கிறீர்கள். பல விஷயங்கள் புரியவில்லை(for me only). இருப்பினும் உங்கள் உள்மன ஆதங்கம் வெளிப்பட்டிருப்பதால் கொஞ்சம் அமைதியாகி இருப்பீர்கள் என்று நம்புகிறேன்..

ஆனந்தி.. said...

//மிக அமைதியான Walker Friendly யான நாய்! //

So Cute line....இதை ரொம்ப ரசிச்சேன்..செங்கோவி சொன்னமதிர்யே தான் நானும் நினைச்சேன்..சுஜாதா ஸ்டைலே...வாவ்...நல்லாவே இருக்கு..லொள்..லொள் ..மொழி...:-))

ரிஷபன் said...

நாயை வைத்து இவ்வளவு ஆராய்ச்சியா.. பதிவு கடிக்கவில்லை.. இனித்தது.

கார்த்தி said...

அதுசரி நீங்க sorry உங்கட வீட்ட என்ன சாதி நாய்?

Real Santhanam Fanz said...

//ஹை-கிளாஸ் நாய்கள் எல்லாம் ஆங்கிலத்தில் தான் உரையாடுகின்றன அல்லது செவிமடுக்கின்றன//
நாய் மட்டுமா நண்பா ஊருல நெறைய மேட்டர் இப்ப இங்க்லீஸ் தான் பேசுது, தமிழ் பேசினா தெய்வகுத்தமாம்ல. மல்ல தமிழ் இனி சாகும்னு அந்த முண்டாசு கவிஞர் சும்மாவா சொன்னாரு

சின்னதூரல் said...

நாய் பேசினால் அப்பதான் இருந்திருக்குமோ

ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Ckr said...

சிலசமயங்களில் எப்படியோ தவறி வீதிக்கு வந்துவிடும் ஹை-கிளாஸ் நாய்கள் சாதா நாய்களின் கேள்விகளுக்கு 'மொழிப் பிரச்சினை' காரணமாக பதில்சொல்ல முடியாமல் புறமுதுகிட்டு ஓடுவதை நான் பார்த்திருக்கிறேன்.///

அடடா, நாய்களுக்கும் லாங்குவேஜ் ப்ராப்ளமா? இது நல்லா இருக்கே!

முனைவர்.இரா.குணசீலன் said...

நாய் மொழி எல்லாம் கேட்க ஆரம்பிச்சிடுச்சா..

ஜிம்மி said...

டோய் யார்ரா அவன் எங்க இனத்த கிண்டல் பண்ணி எழுதிறது ..மனுசப்பயலுகளே..குரங்கு தேவலைடா...

பார்த்தி said...

இந்த விஷயம் அந்த நாய்க்குத் தெரிந்திருக்கவேண்டுமே என்ற நியாயமான பயமும், யாராவது, எப்போதாவது நாய்களுக்கு இதைப் போதித்திருப்பார்களா என்ற அநியாயமான சந்தேகமும் எனக்குண்டு!

எனக்கும் வந்ததுண்டு

வீட்டுப்பெயர் கஜன்