Wednesday, August 17, 2011

லவ் பண்ணுங்க! ஈழத்து அண்ணி! பஸ்ல உட்கார்ந்து யோசிச்சது!

பஸ்ல உட்கார்ந்து யோசிச்சது!

வார இறுதிப் பேரூந்துப் பயணங்களில் ஏதாவது மொக்கைப் படம் போட்டு நம்மாளுக தூங்கவே விடுறதில்லையா? கொட்டக் கொட்ட முழிச்சுக் கொண்டிருக்கும் போதுதான் நம்முடைய மகா சிந்தனையைத் கோக்குமாக்கா தூண்டி விடுறமாதிரியே ஏதாவது சம்பவம் நடக்குது!


இப்பிடித்தான் போனவாரம் அர்ஜூன் நடிச்ச அன்புச்சகோதரன்னு ஒரு படம்! சின்னவயது அண்ணனும், தங்கச்சியும் ரொம்ப பாசமா இருக்காங்களா, அம்மாவும் அதப்பாத்து சந்தோஷப்படுறாங்களா..அப்புறம் அடுத்த சீன்லயே அம்மா மேல டிக்கட் வாங்கிடுறா! - இந்த சீன்ல சுத்தி இருந்த சிலபேர் உச், ஸ்ஸ்..போன்ற இன்னபிற ஒலிகளை எழுப்பினார்கள்!

அப்பத்தான் எனக்குள்ள தூங்கிட்டிருந்த சிந்தனாவாதி முழிச்சுக்கிட்டான்!

இவங்க திருந்தவே மாட்டாங்களா? இதுக்கெல்லாம் அதிர்ச்சியாகலாமா?  எவ்வளவு படம் எடுத்திட்டாங்க? அதையெல்லாம் பார்த்தும் கொஞ்சமாவது அடிப்படை அறிவு வேணாமா?

'அன்புச்சகோதரன்'னு பேர் வச்சுட்டு அம்மாவை உசிரோட விட்டுவைக்கலாமா? அப்புறம் எப்பிடி அண்ணன் - தங்கச்சி பாசத்தைக்காட்டுறது? தங்கச்சிய ஒரு கெட்டவன் கையில பிடிச்சுக் கொடுக்கிறது? இல்ல தங்கச்சியே ஒரு கெட்டவனோட ஓடிப்போறது? அப்புறம் ரெண்டுபேரும் மாறி மாறி அழுறது? புரிஞ்சிக்கவே மாட்டேங்குறாங்க!

ஈழத்து அண்ணி!

திடீர்னு ஈழத்து அண்ணியைப் பாக்கோணும்னு தோணிச்சா கூகிள்ல விஜயலட்சுமின்னு தேடினப்போ கிடைச்சது மேலேயுள்ள படம்! (ஸ்ஸ் அப்பாடா!)

கடைசியா 'சரோஜா'வில பார்த்தது..ஏன் இப்பல்லாம் பார்க்க முடியல? இப்போ எங்கே, என்ன பண்றாங்க?

அப்புறம்தான் தெரிஞ்சுது. ஈழத்து அண்ணியைத் தேடனும்னா விஜயலட்சுமி சீமான்னு டைப் பண்ணனும்னு! முடிவே பண்ணிட்டாங்களா!


ஆமா..ஈழத்து அண்ணியோட குறிப்பிடத்தகுந்த கலைப்படைப்புகள், ஆவணப்படங்கள் ஏதாவது வெளியாகி இருக்கா? 

ஆனா பாருங்க ஈழத்து அன்னை, ஈழத்து அண்ணன், ஈழத்து அணில், ஈழத்து அப்பா அணில் வரிசையில் ஈழத்து அண்ணியும் இணைந்து கொண்டது ஒரு புது நம்பிக்கையைக் கொடுக்கலாம் சிலருக்கு!

லவ் பண்ணுங்க!

'லவ் பண்ணுங்க சார் லைப் நல்லா இருக்கும்!'

சொன்னவனுக்கு மட்டுமில்ல..யாரப் பார்த்து சொன்னானோ அவனுக்கும் சேர்ந்து லைப் 'வெளங்கின'தை நாம மைனாவில பார்த்தோம்!

ஆனா கொஞ்சம் டீப்பா யோசிச்சா அது சரின்னே தோணுது! ஆனா யாருக்கு என்றதுதான் யோசிக்கவேண்டிய விஷயம்!

லவ் பண்ணும்போது,
உங்க செல்போன் சிம் கம்பெனிக்காரனுக்கு,
நீங்க அடிக்கடி லவ்வரோட போற ரெஸ்டாரெண்ட்காரனுக்கு,
பைக்ல சுத்தினா பெட்ரோல்செட்காரனுக்கு,
லவ்வரோட போகும்போது முன்னாடி வாற பிச்சைக்காரனுக்கு,
நீங்க அடிக்கடி கிப்ட் வாங்குற கடைக்காரனுக்கு,

லவ் ஊத்திக்கிச்சுன்னு வையுங்க..அதால நீங்க ஒரு நல்ல குடிமகனாயிட்டா நாட்டுக்கே நல்லது!

தப்பித்தவறி லவ் சக்சஸ் ஆகிடிச்சுன்னு வையுங்க 'எஸ்'ஸான அந்த முகந்தெரியாத யாரோ ஒருத்தனுக்கு லைப் நல்லாயிருக்கும்!

மொத்தத்தில சரியாத்தான் சொல்லியிருக்காங்க!

36 comments:

 1. //'அன்புச்சகோதரன்'னு பேர் வச்சுட்டு அம்மாவை உசிரோட விட்டுவைக்கலாமா? அப்புறம் எப்பிடி அண்ணன் - தங்கச்சி பாசத்தைக்காட்டுறது? தங்கச்சிய ஒரு கெட்டவன் கையில பிடிச்சுக் கொடுக்கிறது? இல்ல தங்கச்சியே ஒரு கெட்டவனோட ஓடிப்போறது? அப்புறம் ரெண்டுபேரும் மாறி மாறி அழுறது? புரிஞ்சிக்கவே மாட்டேங்குறாங்க!//

  ஹா..ஹா..ரொம்ப பட்டிருப்பீங்க போல..

  ReplyDelete
 2. ஈழத்து அண்ணி பற்றி கூகுள்ல தேடுனா என்ன கிடைக்கும்..டியூபுக்குள்ள தலையை விடுங்க ஜீ!

  ReplyDelete
 3. எங்களை மாதிரி லவ்வ ஒன்னும் கிடைக்காத ஆளுக்கும் ஏதாவது சொல்லுங்கய்யா..

  ReplyDelete
 4. ஆனா பாருங்க ஈழத்து அன்னை, ஈழத்து அண்ணன், ஈழத்து அணில், ஈழத்து அப்பா அணில் வரிசையில் ஈழத்து அண்ணியும் இணைந்து கொண்டது ஒரு புது நம்பிக்கையைக் கொடுக்கலாம் சிலருக்கு!//

  அவ்....இதை விடப் பெரிய தொல்லை பாஸ்,.
  பேஸ்புக்கில் ஈழம் என்ற பெயரிலை நிறையப் பேர் புரோபைலோடு வந்து ஈழம் வேண்டிப் பேஸ்புக்கில் போராடுறாங்களாம்......
  அவ்.
  முடியலை பாஸ்.

  ReplyDelete
 5. நம்ம ஜீ உம் லவ் பண்ண வெளிக்கிட்டாரா.
  அவ்............

  ReplyDelete
 6. யூடூப் வேறயா..அழும்பு பண்ணாதீங்கப்பா ஹஹா

  ReplyDelete
 7. அண்ணியை சேர்த்துவைக்க கொழுந்தனுங்க ரொம்ப முயற்சிதான்

  ReplyDelete
 8. நீங்க சொல்றபடி பார்த்தா...காதலை நம்பித்தான் உலகப் பொருளாதாரமே இயங்குது போல...

  ReplyDelete
 9. லவ் பண்ணுங்க லவ் பண்ணுங்கன்னு ஆளாளுக்கு உசுப்பி விட்டுத்தான் முக்குக்கு முக்கு தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடையெல்லாம் டபுள் டபுளா வச்சிருக்கானுங்க பாஸ்

  ReplyDelete
 10. சார் சினிமாவில எங்கள மாதிரி மற்ற ஆக்கள் போமில இல்லைதானே!! அதான் உஸ் புஸ் என்கிறாங்க!!

  விஜயலட்சுமி நல்லாதானே இருக்கா ஏன் சீமான் மாட்டேங்கிறார்???

  ReplyDelete
 11. haa haa sema kaamedi padhivu..

  daittil help by sengovi annan?

  ReplyDelete
 12. பேருந்து படத்துக்கு நல்ல விமர்சனம் இப்ப ப்டத்தை மட்டுமா பார்த்து அழறாங்க ,டீவி நாடகத்தை பார்த்தும் அழறாங்க .ஒரே சீனிற்க்கு முதல் நாளும் அழறாங்க ,மறு நாளும் அழறாங்க ,

  ReplyDelete
 13. ஹிஹி அடிக்கடி பஸ் பயணம் தான் போல :)
  நல்ல பொண்ணு லக்ஸ்மி..
  போன மாசம் கூட என் கூடத்தான் இருந்திச்சு போயஸ் கார்டினல...
  பூப்பறிச்சம்,

  ReplyDelete
 14. காதல பத்தி ரொம்ப யோசிப்பிங்க போல. . .

  ReplyDelete
 15. //லவ் பண்ணும்போது,
  உங்க செல்போன் சிம் கம்பெனிக்காரனுக்கு,
  நீங்க அடிக்கடி லவ்வரோட போற ரெஸ்டாரெண்ட்காரனுக்கு,
  பைக்ல சுத்தினா பெட்ரோல்செட்காரனுக்கு,
  லவ்வரோட போகும்போது முன்னாடி வாற பிச்சைக்காரனுக்கு,
  நீங்க அடிக்கடி கிஃப்ட் வாங்குற கடைக்காரனுக்கு//

  ha... ha... ha....

  ReplyDelete
 16. பாஸ் அன்னிக் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துல வந்தாங்களே நீங்க மறந்துட்டீங்களா.... நாங்க ஓட்டு போட்டுட்டோம்..
  இது நம்ம ப்ளாக்
  மத்த நடிகர்கள் என்ன செய்ய போறாங்க?
  ஜெயிக்கபோறது விஜய்யா, அஜித்தா, சூர்யாவா? - ஒரு எக்ஸ்க்ளுசிவ் அலசல்
  உங்க கமெண்டும் ஓட்டும் அவசியம் சார்…

  ReplyDelete
 17. ///'அன்புச்சகோதரன்'னு பேர் வச்சுட்டு அம்மாவை உசிரோட விட்டுவைக்கலாமா? அப்புறம் எப்பிடி அண்ணன் - தங்கச்சி பாசத்தைக்காட்டுறது? தங்கச்சிய ஒரு கெட்டவன் கையில பிடிச்சுக் கொடுக்கிறது? இல்ல தங்கச்சியே ஒரு கெட்டவனோட ஓடிப்போறது? அப்புறம் ரெண்டுபேரும் மாறி மாறி அழுறது? புரிஞ்சிக்கவே மாட்டேங்குறாங்க!// ஹிஹி அது சரி தான் )

  ReplyDelete
 18. ///ஆனா பாருங்க ஈழத்து அன்னை, ஈழத்து அண்ணன், ஈழத்து அணில், ஈழத்து அப்பா அணில் வரிசையில் ஈழத்து அண்ணியும் இணைந்து கொண்டது ஒரு புது நம்பிக்கையைக் கொடுக்கலாம் சிலருக்கு!// நீங்க ஈழத்து அணில் எண்டு சொன்னது நம்ம இளைய தளபதியை இல்லை தானே ஹிஹி

  ஈழத்து அண்ணி ...நல்லா தானே இருக்கு )

  ReplyDelete
 19. ///லவ் ஊத்திக்கிச்சுன்னு வையுங்க..அதால நீங்க ஒரு நல்ல குடிமகனாயிட்டா நாட்டுக்கே நல்லது!// இதில ஏதாவது உள்க்குத்து இல்லை தானே ..)

  ReplyDelete
 20. அன்பு சகோதரன் ஒரு வேளை டி ஆரோட ரீமிக்ஸா இருக்கப்போகுது ஹா ஹா.... லவ் பண்ணா லைஃப் எப்படி இருக்கும்னு இப்படி ஒரு விழிப்புணர்வா... ஆஹா அருமை

  ReplyDelete
 21. என்னது அண்ணியா??
  யோவ் நீரே முடிவு பண்ணிட்டேரா ??
  அவ்வவ் (ஆனாலும் அண்ணி அம்சமாத்தான் இருக்கு பாஸ், அண்ணனுக்கு உடபெல்லாம் மச்சம் பாஸ் )

  ReplyDelete
 22. திடீர்னு ஈழத்து அண்ணியைப் பாக்கோணும்னு தோணிச்சா கூகிள்ல விஜயலட்சுமின்னு தேடினப்போ கிடைச்சது மேலேயுள்ள படம்! (ஸ்ஸ் அப்பாடா!)

  எனக்கு இந்த மேட்டர் புரியல இவங்க இப்படி அண்ணியாக முடியும்...(அண்ணி என்றவுடன் இவங்க எண்டு மரியாதைய சொல்லுறன்)

  ReplyDelete
 23. இப்படி ஆளாளுக்கு கும்முனா ஜீ பாவங்க.

  ReplyDelete
 24. ஆனா பாருங்க ஈழத்து அன்னை, ஈழத்து அண்ணன், ஈழத்து அணில், ஈழத்து அப்பா அணில் வரிசையில் ஈழத்து அண்ணியும் இணைந்து கொண்டது ஒரு புது நம்பிக்கையைக் கொடுக்கலாம் சிலருக்கு!/

  ஆமா...சிலருக்கு........!!

  லவ் பண்ணும்போது,
  உங்க செல்போன் சிம் கம்பெனிக்காரனுக்கு,
  நீங்க அடிக்கடி லவ்வரோட போற ரெஸ்டாரெண்ட்காரனுக்கு,
  பைக்ல சுத்தினா பெட்ரோல்செட்காரனுக்கு,
  லவ்வரோட போகும்போது முன்னாடி வாற பிச்சைக்காரனுக்கு,
  நீங்க அடிக்கடி கிஃப்ட் வாங்குற கடைக்காரனுக்கு,/


  ஐயோ முடியல............

  ReplyDelete
 25. பதிவுக்கு நன்றி.
  நன்றி,
  கண்ணன்
  http://www.tamilcomedyworld.com

  ReplyDelete
 26. தப்பித்தவறி லவ் சக்சஸ் ஆகிடிச்சுன்னு வையுங்க 'எஸ்'ஸான அந்த முகந்தெரியாத யாரோ ஒருத்தனுக்கு லைஃப் நல்லாயிருக்கும்!

  மொத்தத்தில சரியாத்தான் சொல்லியிருக்காங்க!

  ReplyDelete
 27. ஒவ்வொரு வாரமும் யாழ் - கொழும்பு பயணமா?

  ReplyDelete
 28. /////இந்த சீன்ல சுத்தி இருந்த சிலபேர் உச், ஸ்ஸ்..போன்ற இன்னபிற ஒலிகளை எழுப்பினார்கள்!////

  இவங்கள நம்பித்தானே ஒரு குரூப்பே இன்னும் படம் எடுக்குறேன்னு சாவடிச்சிக்கிட்டு இருக்கானுக.....

  ReplyDelete
 29. ////ஆமா..ஈழத்து அண்ணியோட குறிப்பிடத்தகுந்த கலைப்படைப்புகள், ஆவணப்படங்கள் ஏதாவது வெளியாகி இருக்கா? ////

  நீங்க என்ன கேட்க வர்ரீங்கன்னு புரியுது, நம்ம செங்கோவி இதுல எக்ஸ்பர்ட்.... அவர்கிட்ட கேட்டுப்பார்க்கலாம்!

  ReplyDelete
 30. ////செங்கோவி said...
  ஈழத்து அண்ணி பற்றி கூகுள்ல தேடுனா என்ன கிடைக்கும்..டியூபுக்குள்ள தலையை விடுங்க ஜீ!
  ////////

  நான் சொல்லல அண்ணன் எக்ஸ்பர்ட்னு....?

  ReplyDelete
 31. எப்படியோ எந்த விஜயலட்சுமியா இருந்தா என்ன.... நமக்கு வேண்டியது படம்.....!

  ReplyDelete
 32. ஜீ….!

  லவ் பண்ணுங்க என்று எழுதியிருக்கும் பகுதியிலேயே நீங்கள் எவ்வளவு பட்டிருக்கிறீர்கள் என்று தெரிகிறது. எனக்கும் இப்படி அடிக்கடி தோன்றுவதுண்டு. ஹிஹிஹி.

  அதுசரி பாஸ்….! இந்த பஸ் பயணங்கள் ரகளையான அனுபவத்தையும், யோசனைகளையும் அடிக்கடி தருகின்றன. அதனை, நீங்களும் அடிக்கடி பெற்று எழுதுகிறீர்கள்.

  ReplyDelete
 33. என்னப்பு இந்தப்போடு போடுறீஹ..?! :-)

  ReplyDelete

Followers

Blog Archive

Powered by Blogger.

Archives

Follow by Email

Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |