Friday, July 15, 2011

I am Sam

மனதளவில் ஏழு வயது குழந்தையின் வளர்ச்சியை மட்டுமேயுடைய ஒரு ரெஸ்டாரெண்டில் வேலை செய்யும் சாம் (Sam), அவசரமாக மருத்துவமனைக்கு ஓடுகிறான். அங்கே அவன் மனைவிக்கு அழகான பெண் குழந்தை பிறக்கிறது! லூசி எனப் பெயரிடுகிறான்! திடீரென நடு வீதியில் சாமையும், அந்தக் குழந்தையையும் அநாதரவாக விட்டுப் பிரிந்து விடுகிறாள் அவன் மனைவி! ஒரு கணம் தவித்துப் போகிறான் சாம்!


ஒரு ஆண் யாருடைய உதவியுமின்றித் தனியாக பிறந்து ஓரிரு நாட்களேயான சிசுவை வைத்துப் பராமரிப்பதென்பது எவ்வளவு சிரமமான காரியம்! அதுவும் அவன் மனதளவில் அந்த வயதுக்குரிய சரியான வளர்ச்சியை அடைந்திராத பட்சத்தில்? அவனுடைய அயல் வீட்டுக்காரியான ஆனி அவனுக்கு இவ்விஷயத்தில் உதவி செய்கிறாள்! சாமைப் போலவே இருக்கும் குழந்தைத் தனமான அவன் நண்பர்கள் சிலர் எப்போதுமே அவனுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்! அவர்களும் குழந்தை லூசி மீது மிகுந்த அன்பாக இருக்கிறார்கள்!  

அழகான சிறுமியாக வளர்ந்துவிட்ட லூசி, தன தந்தை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்பட்டிருப்பதை உணர்ந்து கொள்கிறாள். லூசியின் பாடப்புத்தகங்களை வாசிக்கிறான் சாம். அவனால் முடியாத கஷ்டமான சொற்களை படிக்க  உதவுகிறாள் லூசி. Different என்ற சொல்லையே லூசி உச்சரிக்க விரும்புவதில்லை!



லூசியின் நண்பர்கள் அவளின் தந்தை குறித்து கேலி செய்கிறார்கள். தந்தை மீதி மிகுந்த அன்பு வைத்திருக்கும் ஆரம்பத்தில் தந்தைக்கு பரிந்து பேசும் லூசி ஒரு கட்டத்தில், அவர் என் உண்மையான தந்தை அல்ல என்று கூறிவிடுகிறது அந்தப் பிஞ்சு!

சாமை தவறுதலாக ஒரு இசகு பிசகான கேசில் அழைத்துச் செல்லும் போலீஸ் அவனைப்பற்றிப் புரிந்து கொள்ள, சமூக நல தொண்டர் ஒருவரின் பார்வை சாம் - லூசி மேல் விழுகிறது - விளைவு? லூசி சாமிடமிருந்து பிரிக்கப்படுகிறாள்! லூசி மீண்டும் கிடைக்க வேண்டுமானால் சாம் தன்னை நிரூபிக்க வேண்டும் - ஒரு குழந்தையை சரியான முறையில் வளர்க்க முடியுமென்று! தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாமல் குழம்பும் சாமுக்கு அவனின் நண்பர்கள் பிரபல வக்கீல் ரிட்டா பற்றிச் சொல்ல, ரிட்டாவின் உதவியுடன் மகளை மீட்க முயற்சிக்கிறான்! பின்பு என்னவாகிறது?



சாமின் நிலையை அவனுடைய விரல்களால் மட்டுமே விளக்கிச் சொல்லும் படத்தின் ஆரம்பக் காட்சியே அசத்தலானது!
மிக உருக்கமான கதையை, படம் முழுவதும் நகைச்சுவை இழையோட சொல்லியிருப்பார்கள்! 
லூசியைப் பார்க்க ஓடிவந்து தடுக்கி விழும் சாம், எழுந்திருக்காமல் அந்த நிலையிலேயே லூசியை முத்தமிட்டுப் பேசிக் கொண்டிருக்கும் காட்சி!
சிறுமி லூசியின் நடிப்பு குறிப்பாக தந்தையிடம் மிகுந்த தயக்கத்துடன் கேட்கும் 'இது எப்படி...ஆக்சிடென்டா? காட்சி!
லூசிக்கு 'ஷூ' வாங்குவதற்கு, ஒரு கடையில் சாமும் அவன் நண்பர்களும்! சாமிடம் பணம் போதவில்லை! உடனே நண்பர்கள் எல்லாரும் தங்களிடமுள்ள பணத்தையும் கொடுத்து ஷூவை வாங்குகிறார்கள்! மீதிப்பணத்தில் சாம் பலூன் வாங்கப்போக, நண்பர்களில் ஒருவர், 'அவளுக்கு மட்டுமா...இல்ல எங்களுக்குமா? எனக்கேட்பார்! அடுத்த காட்சியில் எல்லோரும் கையில் பலூனுடன் வரிசையில் நடந்து செல்வது, அழகான கவிதை! 
கோர்ட்டில், தனக்கு பாதகமான வாதங்கள் வரும்போதும் அதை உணராமல் கைதட்டி மகிழும் சாம், ஒரு கட்டத்தில் இனி எதுவும் செய்ய முடியாது என்று உணர்ந்து குமுறும் காட்சிகள்,  குறிப்பாக ரிட்டாவிடம் எனது நிலையை உங்களால் புரிந்து கொள்ள முடியாது ஏனெனில் You are perfect! - அழுது கொண்டே கூறும் காட்சி!


சாமுக்கு ஆதரவாக வரும் அவனுடைய நண்பர்கள் நடிப்பு - அதுவும் கோர்ட்டில் விசாரணையின்போது அவர்கள் பண்ணும் அமைதியான கலாட்டாக்கள் அட்டகாசம்!
படம் முழுவதும் வரும் எளிமையான, அருமையான உரையாடல்கள்!
ட்ரையல் நடைபெறும்போது கண்காணிப்புடன் லூசியும் சாமும் பேசும்போது லூசி சாமிடம். 'I want no other daddy but You ! உடனேயே  கண்ணாடி பக்கம் (கண்காணிப்பவர்களை) திரும்பி சத்தமாகச் சொல்கிறாள், 'Did You hear that? I said I didn't want any other daddy but him! Why don't you write that down?'   

2001 இல் Seen Penn நடிப்பில், Jessie Nelson இயக்கத்தில் வெளியான இந்த ஹாலிவுட் படம் ஏராளமான விருதுகளை வென்றது. சிறந்த நடிகருக்கான Academy Award க்கு Seen Penn பரிந்துரைக்கப்பட்டார்!

Trailer


**********
ந்தப் படத்தை எப்படித் தமிழில் தழுவலாம்?
குழந்தையை முக்கியமாக ஹீரோவை விட்டுப் பிரியும் பெண்  - நிஜத்தில்  எவ்வளவு மோசமான பெண்கள் இருந்தாலும், தமிழ் சினிமாவுக்கு சேராது என்பதால் அந்தத் தாயை சாகடித்து விடலாம்!
ஹீரோவுக்கு உதவும் பெண் வக்கீல் - இவருக்கு காதலனோ, கணவனோ இருக்கக்கூடாது! அப்புறம் டூயட் பாடுவது எப்படி? அதுவும் தவிர படத்தில் ஹீரோவுக்கு உதவும் பெண் எப்படியும் (படம் முடிந்த பின்பும்!) அவரைக் காதலிப்பார் என்பது நமது ஆழ்ந்த நம்பிக்கை!
குழந்தை,தந்தை பிரிவு - குழந்தையின் தாத்தா தன் மகள் நினைவாக, தந்தையிடமிருந்து பிரிக்க நினைக்கிறார்! (மகள் தன் தந்தையை எதிர்த்தே ஹீரோவை திருமணம் செய்திருப்பார்)
ஒரிஜினல் படம் நெடுக நகைச்சுவை இழையோடி இருந்தாலும், தமிழில் அழுகுணித்தனமாக எடுப்பது விருது குறித்த நம்பிக்கையைக் கொடுக்கும்!
குழந்தையை அடிக்கடி அழ விடுவது, தாய்க்குலங்கள் மத்தியில் செண்டிமெண்டலாக நல்ல பலனைக் கொடுக்கும்! (அப்பாவுடன் இருக்கும்போது அம்மா பாசத்துக்கு ஏங்குவதாகவும், பிரிந்த பின் அப்பாவை நினைத்து!)
Seen Penn ஐப்பாருங்கள் அவரை மாதிரி ஒரு ஹீரோ! அதே ஹெயார் ஸ்டைலைப் பயன்படுத்தலாம்! புதுசா இருக்கும்!
எந்த விவரமான தமிழ்ப் பெண்ணாவது இப்படி ஒரு ஹீரோவைக் காதலித்து திருமணம் செய்வாளா? - என்ற கேள்வி எழக்கூடும்! - அதனால் ஒரு பெரிய ஹீரோ படத்துக்கு தேவை! (ஆனால் இதுக்காகவே  வில்லங்க பதிவர்கள் சிலர் கேட்கக்கூடும்!)

குழந்தையை இயல்பாக மனுஷக் குழந்தையாகவே நடிக்க வைக்கலாம்!   
அந்தக் காலத்திலிருந்து (ஷாலினி, ஷாமிலி) தமிழ் சினிமாவில் குழந்தைகள் அதிகப் பிரசங்கிகளாகவும், பெரிவர்களுக்கு அட்வைஸ், தத்துவம் சொல்லும் தெய்வத் திருமக்களாகவே மிரட்டுகிறார்கள்!
ஒருவர் மனவளர்ச்சி குன்றியிருந்தால் அந்தக் குடும்பத்தில் பெரியவரோ, சிறுவரோ எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை மற்றவர்களைச் சமாளிப்பதுதான்! - இந்த யதார்த்தத்தை சரியாக வெளிப்படுத்தலாம்!
இதையெல்லாம் விட கொஞ்சமாவது நேர்மை இருந்தால் இன்ஸ்பிரேசன்னு, I am Sam படத்தைக் குறிப்பிடலாம்!

35 comments:

  1. ஜீ..!

    இயக்குனர் விஜய் மீது சிறு மரியாதை இருக்கிறது. ஆனாலும், தெய்வத்திருமகள் i'm samஇன் தழுவலென்று போட்டிருக்கலாம். அப்படி போட்டிருந்தால் விஜய் மீது மரியாதை அதிகாரித்திருக்கும்.


    சூப்பர் பதிவு பாஸ்!

    ReplyDelete
  2. Super and different thinking

    ReplyDelete
  3. AnonymousJuly 15, 2011

    போஸ், உண்மையிலே ஒப்பீடுகள் யதார்த்தம்...

    ReplyDelete
  4. AnonymousJuly 15, 2011

    ///ஹீரோவுக்கு உதவும் பெண் வக்கீல் - இவருக்கு காதலனோ, கணவனோ இருக்கக்கூடாது! அப்புறம் டூயட் பாடுவது எப்படி? அதுவும் தவிர படத்தில் ஹீரோவுக்கு உதவும் பெண் எப்படியும் (படம் முடிந்த பின்பும்!) அவரைக் காதலிப்பார் என்பது நமது ஆழ்ந்த நம்பிக்கை!///

    தமிழ் சினிமாவின் யதார்த்தம் என்று சொல்லலாமா!! ))

    ReplyDelete
  5. கதையைச் சுட்டு விட்டு அதை ஒரு நன்றி அறிவிப்பாகக் கூட வெளியில் சொல்லவில்லையென்றால் எப்படி?
    நல்ல பதிவு!

    ReplyDelete
  6. நம் இயக்குனர்களுக்கு அந்த பக்குவம் வரவில்லை என்று தான் சொல்லவில்லை.

    ReplyDelete
  7. சூப்பர்..இது அப்பட்டமான காப்பியே தான். எனக்கு ஐ அம் சாம் பற்றித் தெரியாது ஜீ. தெரிந்திருந்தால், விமர்சனத்தில் சொல்லி இருப்பேன்.

    சாட்டையடிப் பதிவு.

    ReplyDelete
  8. //எந்த விவரமான தமிழ்ப் பெண்ணாவது இப்படி ஒரு ஹீரோவைக் காதலித்து திருமணம் செய்வாளா? - என்ற கேள்வி எழக்கூடும்! - அதனால் ஒரு பெரிய ஹீரோ படத்துக்கு தேவை! // இங்கே ‘அவள் ஒரு சமூக சேவகி. எனவே விருப்பப்பட்டு மணந்தாள்’ என்று ஒரு காரணம் சொல்கிறார்கள்.

    ReplyDelete
  9. நேத்து ஃபுல்லா விஜய்யை பெருமையா நினைச்சுக்கிட்டிருந்தனே..அப்போ அதெல்லாம் வேஸ்ட்டா?

    ReplyDelete
  10. ஹிஹி பாஸ்..காலத்துக்கேற்ற பதிவு...தமிழ் மாற்றம் கூட அருமை ஹிஹி

    ReplyDelete
  11. ஓ...இம்புட்டு வில்லங்கம் இருக்கா புது ரிலீஸில்? எனக்குத் தெரியாதே. பார்ப்போம் எல்லோரின் விமர்சனத்தையும். யாராவது ஐ ஆம் ஷாம் பற்றி சொல்றாங்களான்னு?

    ReplyDelete
  12. படம் பற்றி பாராட்டப்படவேண்டியது தான் முக்கியமாக தேவை. ஏனென்றால் இது போன்ற சினிமாக்கள் வருவதே ரொம்ப கம்மி. இதில் திரைப்படம் சம்பந்தமான தவறுகள் மட்டுமே சுட்டிக்காட்டப்பட வேண்டும்... (தெய்வத்திருமகளை சொல்கிறேன்) இருந்தாலும் I AM SAM ரொம்ப பிடித்திருந்தது...

    ReplyDelete
  13. இவுனுங்க காப்பி அடிக்குறத கூட பொருத்துக்கலாம்.. ஆனா படம் ரிலீஸ் ஆனதும் டீ.வில பேட்டி குடுக்கும் போது எதோ சொந்தமா சிந்திச்சது போல விடுவனுங்க பாருங்க கப்ஸா அதான் காண்டா இருக்கும்.. :)

    ReplyDelete
  14. இதையெல்லாம் விட கொஞ்சமாவது நேர்மை இருந்தால் இன்ஸ்பிரேசன்னு, I am Sam படத்தைக் குறிப்பிடலாம்//

    மச்சி, உங்களின் ஆங்கிலப் பட அறிவினை நினைக்கையில் மெய் சிலிர்கிறது.

    உடனுக்குடன் விமர்சனம் மூலம் தவறினைச் சுட்டிக் காட்டியிருக்கிறீங்க.

    நீங்க I'm Sam பற்றிச் சொல்லியிருக்கா விட்டால், நாமெல்லாம் தெய்வத் திருமகளைத் தான் கொண்டாடி மகிழ்ந்திருப்போம்.

    ReplyDelete
  15. படத்தின் ஸ்டில்லே சொல்லி விட்டது இது ஐ யாம் சாம் என்று.
    விஜய் ஏற்க்கெனவே டைட்டானிக்கை மதராச பட்டினமாக்கியவர்தானே.

    ReplyDelete
  16. நானும் படம் பாத்து வந்து விக்கிபிடியாவில் பாக்கும்போதுமதன் அறிந்தேன் இந்த படத்தில் தழுவலென..

    ReplyDelete
  17. ada,, பல தகவல்களை அறிந்தேன்

    ReplyDelete
  18. ஒப்பீடு அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  19. அருமையாக சொல்லி யுல்லிர்கள்

    ReplyDelete
  20. ஜீ....இப்போ தான் பேஸ் புக் இல் பார்த்தேன்...i am sam பத்தி...நீ இதை விட மாட்டியே ...பின்னுவியே ன்னு குத்து மதிப்பா உன் ப்லாக் வந்தேன்...ரைட் ட்டு..கலக்கிட்ட...Prediction எல்லாம் போட்டு...அசத்திட்ட...சான்ஸ் ஏ இல்ல ஜீ...செம போஸ்ட்...

    ReplyDelete
  21. தமிழில் ஒரு ஆங்கில படத்தின் விமர்சனம்.தேவையான நேரத்தில் வந்துள்ளது.நன்றி

    ReplyDelete
  22. விமர்சனம் மற்றும் ஒப்பீடு அருமை நண்பரே...

    ReplyDelete
  23. ஆங்கிலப்பட விமரிசனமா,அநியாயத்தைச் சுட்டிக்காட்டும் நிதர்சனமா?

    ReplyDelete
  24. திரும்பவும் ஒரு நல்ல படம் அறிமுகம்.நன்றி ஜீ !

    ReplyDelete
  25. உண்மையை,அநியாயத்திற்கு ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டீர்..டைரக்டர் விஜய் இதை படித்தால் என்ன நினைப்பார்..? சரி ..சரி ..கவுண்டமணி சொல்வதைப்போல் சினிமாவில்( அரசியலில் )இதல்லாம் சகஜமப்பா...( மதராச பட்டினமும் டைட்டானிக்கோடா காப்பிபோல தான் இருந்தது )

    ReplyDelete
  26. நல்ல பதிவு!

    ReplyDelete
  27. முதலில் பத்து வருஷம் கழிச்சு காப்பியடிச்சிருந்தாலும், அதை எங்கேயிருந்துடா காப்பியடிச்சான் என்று சரியாகக் கண்டுபிடித்து சொன்னதற்கு நன்றி. அடுத்து, \\இந்தப் படத்தை எப்படித் தமிழில் தழுவலாம்?\\ என்ற தலைப்பில் பவுண்டரியும், சிக்சரிமாக விளாசித் தள்ளி விறுவிறுப்பாக எழுதி எங்களை குஷிப் படுத்தியதற்கும் நன்றி. பதிவு சூப்பரோ சூப்பர்.

    ReplyDelete
  28. இப்படி எல்லாம் சுடுவார்களா? சிறிய காட்சிகளை கூட சுட்டுள்ளாரே#பலூன்

    ReplyDelete
  29. அட இது கூட தழுவல... அனால் கதை மனசை ரொம்பவே தழுவுகிறது ஜீ...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்

    ReplyDelete
  30. நன்றி...... அருமையான பதிவு ....

    ReplyDelete
  31. இப்படி ...தாக்கிடிங்களெ...தமிழ் சினிமாவை..ஜி

    ReplyDelete
  32. ஆனால்....சரியான சாட்சிகளோடு....அழகாக விமர்சனம் செய்துள்ளிர்கள்..

    ReplyDelete
  33. சூப்பர் பதிவு பாஸ்!

    ReplyDelete
  34. கதை மனதை வருடுகிறது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  35. AnonymousJuly 23, 2011

    While making this movie, Vijay,Vikram & co would've seen I am Sam atleast hundred times. Still they've absolutely no guilty feelings about copying, what a shameless people ? These hypocrites crying about illegal dvds.

    ReplyDelete