Saturday, June 11, 2011

விஜயின் அடுத்த அவதாரம்?அம்மா தேர்தலில் வென்றதற்கு தானும் தனது தந்தையும் அணில் போல ஒரு காரணமாக இருந்து உதவியதை(?!) நினைத்துப் பெருமைப்படுவதாக நம்ம டாக்டர் சொல்லியிருந்தார். அதாவது ராமர் பாலம் கட்டும்போது அணிலும் சிறு கற்களைப் போட்டு உதவியதாம்னு சொல்லுவாங்கள்ல? அப்படியானால் அடுத்த தேர்தலில்?

அடுத்த ஸ்டேஜ்?

ஐயையோ!!

*************

ஏன்?
பருத்திவீரன் படத்தில் யுவன் முற்றிலும் ஒரு கிராமச் சூழலுக்குத் தகுந்த மாதிரியே இசை, இசைக்கருவிகளைப் பயன்படுத்தியிருப்பார். Cannes பட விழாவில் பங்கேற்கும்போது கதைக்களத்தின் சூழலைப் பிரதிபலிக்கும் இசையையும் கவனித்தே விருது கொடுக்கப்பட்டிருக்கும். 

யுவனே தனது பாணியிலிருந்து முற்றாக மாறி அவ்வளவு பொறுப்பா இருக்கும்போது, அதில ஸ்பெஷலிஸ்டா இருந்துகொண்டே ஏன் அழகர் சாமியின்குதிரைக்கு....நல்லா இருக்கு ஆனா ஒட்டலை! சில விஷயங்களை இளையவர்களிடமும்...

*************

என்ன கொடுமைடா சாமி!
இப்பல்லாம் வேலைப்பழு கூடிட்டே போகுது..! அப்பப்ப ஆபீஸ் ஆணிய எல்லாம் வீட்ல இருந்தும் பிடுங்க வேண்டியிருக்கு! ம்ம்ம்..!

*************

டீ.வி. பார்க்கும்போது யோசிச்சது!
அதெப்படி சினிமாவில தங்கச்சி மேல் ரோம்ம்ம்பப் பாசம் வைத்திருக்கும் அண்ணன்மாரெல்லாம் தேடிப்போய் ஒரு கெட்டவனுக்கு அவளைக் கட்டிக் கொடுக்கிறார்கள்? 

ஒரு அண்ணாவும் தங்கச்சியும்னா, தங்கச்சி அண்ணனவிட்டு ஒரு கெட்டவனோட ஓடிப்போயிடணும்?

காலங்காலமா அண்ணன்- தங்கச்சி பாசக்கதைக்கான ஸ்டாண்டர்ட் டெம்ப்ளேட்?

*************

Tora! Tora! Tora!

இரண்டாம் உலகப்போரில் பேர்ல் ஹார்பர் இல் குண்டுவீசி அமெரிக்காவை யுத்தத்திற்கு அழைத்து வந்தது ஜப்பான். 


நானூறுக்கு மேற்பட்ட ஜப்பானின் விமானங்கள் தாக்குதலில் ஈடுபட்டன. 29 மட்டுமே அமெரிக்கப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட, ArisonaOklahama என்ற பிரபல சண்டைக்கப்பல்கள் உள்ளிட்ட பலத்த இழப்பு அமெரிக்காவுக்கு. துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 300 க்கு மேற்பட்ட விமானங்கள் அழிக்க, சேதமாக்கப்பட்டன. ஜப்பானின் கப்பல்கள் சிலவும் பதில் தாக்குதலில் அழிக்கப்பட்டன.

அந்தக் குண்டுவீச்சுத் தாக்குதலுக்கான சங்கேத வார்த்தையே டோரா!டோரா!டோரா!இந்தத் தாக்குதலையும், அதற்கான திட்டமிடல்களையும் பற்றிக் கூறும் இத்திரைப்படம் 1970 வெளிவந்தது! 


என்னதான்  ஹாலிவுட்  தயாரிப்பாக இருந்தாலும், (இயக்கம் ஹாலிவுட் + ஜப்பான் இயக்குனர்கள்) படம்  பார்க்கும்போது  அமெரிக்கா  அடிவாங்கும்போது  விசில்  அடிக்கும்படியாகவே எடுக்கப்பட்டிருக்கும்! அதாவது ஜப்பான் ஆர்மியை ஹீரோக்களாக - அவர்களுக்கு சப்போர்ட் பண்ணும் விதமாகவே இருந்தது/ அப்படி எனக்குத் தோன்றியது! 

ஜப்பானின் ஒரு மிகப்பெரிய வெற்றியைக் கூறும் செம விறுவிறுப்பான படம்! அந்தக்காலத்துலயே சும்மா அப்ப்ப்பிடி எடுத்திருக்காங்க!

படம் ஸ்பெஷல் எபெக்ட்ஸ்க்கான Academy Award வென்றது!

29 comments:

 1. // அப்பப்ப ஆபீஸ் ஆணிய எல்லாம் வீட்ல இருந்தும் பிடுங்க வேண்டியிருக்கு! ம்ம்ம்..!
  //
  எது பேஸ்புக்,ப்ளாக் அதுகளா??

  ReplyDelete
 2. //ஒரு அண்ணாவும் தங்கச்சியும்னா, தங்கச்சி அண்ணனவிட்டு ஒரு கெட்டவனோட ஓடிப்போயிடணும்?/
  நச்செண்டு கேளுங்கோ

  ReplyDelete
 3. //
  /அதாவது ஜப்பான் ஆர்மியை ஹீரோக்களாக - அவர்களுக்கு சப்போர்ட் பண்ணும் விதமாகவே இருந்தது/ அப்படி எனக்குத் தோன்றியது! //

  ஆமாம்!!

  ReplyDelete
 4. ஒரு பதிவில் இத்தனை செய்திகளா? அருமை நண்பரே..

  ReplyDelete
 5. அண்ணன் தங்கச்சி கதை டெம்ப்ளேட்டில் விதி விலக்காகி ஹிட் ஆனது பாசமலர், கிழக்குச் சீமையிலே...நல்ல பல்சுவைப் பதிவு.

  ReplyDelete
 6. தொலைக்காட்சி நாடகமெல்லாம் பார்ப்பீங்களா? ரொம்ப பொறுமைசாலிதான்.

  விஜயின் அடுத்த அவதாரம் என்றவுடன் நான் பயந்தே போய்விட்டேன்.

  ReplyDelete
 7. //மைந்தன் சிவா said...
  வடை ?//
  வாங்க பாஸ்! உங்களுக்கு முதலே வந்தாய்ங்க! ஆனா கமேண்டைக் காணல!

  //மைந்தன் சிவா said...
  // அப்பப்ப ஆபீஸ் ஆணிய எல்லாம் வீட்ல இருந்தும் பிடுங்க வேண்டியிருக்கு! ம்ம்ம்..!//
  எது பேஸ்புக்,ப்ளாக் அதுகளா??//
  ச்சே! ச்சே! வேலை பாஸ்! கடமைன்னு வந்துட்டா ஜீ...:-)

  //"என் ராஜபாட்டை"- ராஜா said...
  All matter are super//
  நன்றிங்கோ!

  //!* வேடந்தாங்கல் - கருன் *! said...
  ஒரு பதிவில் இத்தனை செய்திகளா? அருமை நண்பரே..//
  செய்தியா? எங்கே? எங்கே? நன்றி நண்பரே! :-)

  //விக்கி உலகம் said...
  super//
  நன்றி மாம்ஸ்!

  செங்கோவி said...
  //அண்ணன் தங்கச்சி கதை டெம்ப்ளேட்டில் விதி விலக்காகி ஹிட் ஆனது பாசமலர், கிழக்குச் சீமையிலே//
  ஆமால்ல! கிழக்குச்சீமைய மறந்துட்டேன்! பாசமலரும் அப்பிடியா?!!

  //கடம்பவன குயில் said...
  தொலைக்காட்சி நாடகமெல்லாம் பார்ப்பீங்களா? ரொம்ப பொறுமைசாலிதான்//
  சேச்சே நான் சினிமா பற்றி சொன்னேன்! அதுவும் எப்போதாவதுதான் டீ.வி யைக் கடந்து செல்லும்போது மட்டும்!!

  ReplyDelete
 8. அழகர் சாமியின் குதிரையில் எனக்கு ”சிரிக்கிற சிரிக்கிற குதிரைக்குட்டி” பாடல் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது!
  வில்லனுக்கு கட்டிவைச்சாதான் கதையை கொண்டுபோலாம் இது கூட தெரியாமா! ஹையோ கையோ!
  ஏன் ஆணிய புடுங்க போறீங்க? சும்மா இருக்கிற மாதிரியே விட்டுபாருங்களேன்!
  உங்களுட்ட இருந்து கனக்க படம் எடுத்து பாக்கோணும் போல கிடக்கே!

  ReplyDelete
 9. பல்சுவை பகிர்வு.

  ReplyDelete
 10. தமிழ்மணம் ஏழு.

  ReplyDelete
 11. /அதாவது ஜப்பான் ஆர்மியை ஹீரோக்களாக - அவர்களுக்கு சப்போர்ட் பண்ணும் விதமாகவே இருந்தது/ அப்படி எனக்குத் தோன்றியது! //
  இப்படம் ஜப்பானியர்களின் பார்வையில் எடுக்கப்பட்டதால் உங்களுக்கு அப்படி தோன்றியது.
  இதே சம்பவம் அமெரிக்கப்பார்வையில் பேர்ல் ஹார்பர் என்ற படம் எடுக்கப்பட்டது.
  இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா எல்லா நாடுகளுக்கும் ஆயுதங்களை விற்று பரபரப்பாக பணம் பண்ணிக்கொண்டிருந்தது.எரிகிற வீடுகளில் எண்ணெய் ஊற்றிக்கொண்டிருந்தது.
  இந்த அடிக்குப்பிறகுதான் போரில் குதித்தது.ஜப்பானை அணுகுண்டு போட்டு அழித்து இன்றளவும் தாதா போல் ஆடிக்கொண்டிருக்கிறது.வெகு விரைவில் என்கவுண்டரில் அமெரிக்கா சாகும்.

  ReplyDelete
 12. பல் சுவையும் கலந்த ஸ்டேட்டஸ்களைப் பகிர்ந்திருக்கிறீங்க...அருமை மாப்பு.

  அண்ணன் தங்கை பாசம் பற்றிய கடி...
  ஹி...ஹி...

  ReplyDelete
 13. தமிழ் மணம் எட்டு..
  ஹி.....

  ReplyDelete
 14. தகவல்கள் அறிந்துகொண்டோம்.

  ReplyDelete
 15. AnonymousJune 12, 2011

  அண்ணன் தங்கை பாசம் அட ஆமாம் நமக்கு ஏன் தோனலைன்னு இப்ப யோசிக்கிறேன்..தகவல்கள் சுவைபட...

  ReplyDelete
 16. /////ராமர் பாலம் கட்டும்போது அணிலும் சிறு கற்களைப் போட்டு உதவியதாம்னு சொல்லுவாங்கள்ல?////

  ஹ...ஹ...

  ஜீ ஒரு குருவி (புனில்) கட்டும் போது அது மண்ணில் உருண்டு பெயர் வாங்கியதாவும் சொல்லுவார்கள்..

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  சீரியஸ் மனிதனின் நகைச் சுவைப் பக்கங்கள் With vedio

  ReplyDelete
 17. அப்பாடி நிண்ட நாளைக்கு பிறகு நிங்க கறிப்பிட்டுள்ள ஒரு படத்தை நானும் பார்த்திருக்கேன் மிகவும் விறு விறுப்பானதப்பா...

  ReplyDelete
 18. விசை அவதாராமா? அவரே ஓவரு ச்ச்சி ஒரு அவதாரம்ங்கோ

  ///அப்பப்ப ஆபீஸ் ஆணிய எல்லாம் வீட்ல இருந்தும் பிடுங்க வேண்டியிருக்கு! ம்ம்ம்..! ///

  என்னங்க இது ஆபிஸ் ஒக்காந்து பதிவு எழுதலாம் படிக்கலாம் ,ஆனா வீட்ல ஒக்காந்து ஆபிஸ் வேல பாக்ககூடாது ,அப்படித்தானே சொல்லவரீங்க ஜி .ஹிஹி ஹி .

  ReplyDelete
 19. அம்மா தேர்தலில் வென்றதற்கு தானும் தனது தந்தையும் அணில் போல ஒரு காரணமாக இருந்து உதவியதை(?!) நினைத்துப் பெருமைப்படுவதாக நம்ம டாக்டர் சொல்லியிருந்தார்.
  ஹ...ஹ...ஹிஹி ஹி .

  ReplyDelete
 20. மேலும் வாசிக்க.... பார்க்க.........

  Do Visit

  மனசு ரெண்டும் புதுசு
  http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_1926.html

  ஜில் ஜில் ஜிலேபி
  http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_7808.html

  மாங்கனி
  http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_8805.html


  நாட்டு சரக்கு
  http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_9605.html


  http://www.verysadhu.blogspot.com/

  ReplyDelete
 21. எழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.
  மேலும் விபரம் அறியவும்....
  இந்த மோசடியை வெளி உலகத்துக்கு தெரியப்படுத்தவும்.....
  எனது வலைப்பக்கம் வாருங்கள்.ப்ளீஸ்...

  ReplyDelete
 22. பல் சுவையும் கலந்து பகிர்ந்திருக்கிறீங்க...அருமை "


  can you come my said?

  ReplyDelete
 23. http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_23.html

  தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். கருத்துரைகளை அறியப்படுத்தவும். நன்றி.

  ReplyDelete

Followers

Blog Archive

Powered by Blogger.

Archives

Follow by Email

Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |