Saturday, May 28, 2011

தமிழ்ப் பெண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? - நம்மவர்!


வார இறுதிகளில் நெடுந்தூரப் பேருந்துப் பயணங்கள் பெரும்பாலும் கொடுமையானதாக மாறிவிடுகிறது. 

பேரூந்தில் ஏறியதுமே முதலில் நோட்டமிடுவது எனது சீட்டுக்குப் பின் சீட்டில் யார் இருக்கிறார்கள் என்பதையே! இளம்பெண்கள் இருந்துவிட்டால் பகீரென்று விடுகிறது! - அவ்வளவுதான்! அன்றைய பயணம் நரகம்தான்!

சொகுசு பஸ்களை ரிசேர்வ் பண்ணி பயணம் செய்வதன் முக்கிய காரணமே ஏசி, சௌகர்யமான அட்ஜஸ்ட்டபிள் சீட் என்பதால் தூங்கிட்டே பயணிக்கத்தான்! அதாவது மற்றவர்களுக்கு இடையூறில்லாமல், பின்னாலிருப்பவர்களின் முழங்காலில் இடிக்காமல் இருக்கையை சாய்த்து, வசதியாக!

ஆனால் இருக்கையை சாய்க்க விடாது தடுத்தால் எப்படியிருக்கும்? இதைத்தான் செய்து வருகிறார்கள்! - பெரும்பாலான பெண்கள்!

முதல்முறை அப்படித்தான் ஒரு பெண்! மிக அழகான பெண்! பெண்ணின் அருகிலிருந்த அங்கிளிடம் பார்க்கச் சொன்னேன் எவ்வளவு தூரம் அட்ஜஸ்ட் செய்யலாமென்று பார்க்க! அவர் சொன்னார் 'நீங்க தாராளமா சரியுங்க தம்பி'ன்னு. ஆனால் அந்தப் பெண் சிறிதும் அனுமதிக்கவில்லை, அவரும் பேசிப்பார்த்து பலனில்லை! 

நான் எதுவும் பேசவில்லை என்ன பேசுவது? எப்படிப் பேசுவது இப்படியான பெண்மணிகளுடன்? கொஞ்சம் கூட மனிதப் பண்புகள் , அடுத்தவனும் மனுஷன் என்று நினைக்கும் குணம் இல்லாதவர்களைச் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. 

முதலில் எரிச்சலாக இருந்தாலும் அதனாலும் எனக்குத்தானே பாதிப்பு? அப்பத் தோணிச்சு பாருங்க - ஏழு மணித்தியாலம் அந்தப் பெண்ணுக்கு முன்னாலிருந்து பயணம் செய்வதே இவ்வளவு கஷ்டமா இருக்குதுன்னா அதை கல்யாணம் செய்பவன் கதி? - எப்புடியெல்லாம் யோசிச்சு மனசைத் தேத்த வேண்டியிருக்கு?

அப்படியே நிமிர்ந்தவாறே தூக்கமுமின்றி பயணம் செய்து மறுநாள், கழுத்து, உடம்பு வலியால் அலுவலகத்தில் அவஸ்தை! 

இன்னொரு நாள். எனக்கு முன்னிருக்கையில் அமர்ந்திருந்த ஒருபெண்! எனது முழங்காலில் அவருடைய இருக்கை சாய நானும் ஒவ்வொரு முறையும் சீட்டில் தட்டுவேன் உடனே சிறிது உயர்த்துவார். சற்று நேரத்தில் காலின்மீது சரிக்க நான் திரும்பவும்....பயணம் முழுவதும் அவஸ்தை தொடர்ந்தது. தூக்கமுமில்லை! 

இவ்வளவிற்கும் எல்லாரும் படித்த பெண்கள். முக்கியமான விஷயம் தமிழ்ப் பெண்கள்! 

ஏன் தமிழ்ப் பெண்கள் மட்டும் இப்படி நடந்து கொள்கிறார்கள்? அடுத்தவன் அவஸ்தைகள், மனநிலையை மதிக்காமல் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி மனசாட்சியே இல்லாமல் வாழ எப்படி முடிகிறது?

சரி! அதைக்கூட விட்டு விடுங்கள்! இவ்வளவு அநியாயம் பண்ணிட்டு, கடைசியில் இறங்கிப்போகும்போது ஏதோ நாமதான் என்னமோ 'ஈவ் டீசிங்' பண்ணினமாதிரி கண்ணகி கசின் ரேஞ்சில ஒரு 'லுக்கு' விடுவாங்க பாருங்க! அதாங்க பெரிய கொடுமை! 

தாங்கள் ஒழுங்காக சௌகர்யமாக அமரும் இந்தப் பெண்கள், மற்றவர்களும் அதே வசதிக்காகத்தான் அதிக விலை கொடுத்து சொகுசுப் பேரூந்துகளில் வருகிறார்கள் என்பதை ஏன் நினைத்துப் பார்க்க மாட்டேன் என்கிறார்கள்? 

இயல்பாகவே தமிழ்ச் சமூகம் பெண்களுக்குத் தரும் மரியாதையை, ஒரு பரிவை அல்லது சலுகையை தங்களுக்கு ஒரு வேலியாகப் பயன்படுத்திக்கொண்டு வந்து அந்த வேலியே பின்பு தடித் தோலாக மாறிவிட்டதா? 

இந்த மாதிரியான தடித்தோல் பேர்வழிகளிடம் எப்படிப் பேச முடியும்? என்னதான் அநியாயத்தைக் கண்முன்னால்  பார்த்துக் கொண்டிருந்தாலும், ஒரு பெண்ணிற்கெதிராகப்  பேசினா நம்ம நடுத்தர , வயோதிக அன்பர்கள்  சண்டைக்கு வந்துவிட மாட்டார்களா?

அதுவும் அழகான பெண்கள் என்றால் எமது சமுதாயத்துக்கே ஒரு பெரிய வீக்னெஸ் அல்லவா?

இதுக்கென்றே ஒரு கூட்டம் இருக்கே! பெண்கள் துயர்துடைக்க(?!) எங்கடா சான்ஸ் கிடைக்கும்னு அலைஞ்சிட்டு! இது தாய்க்குலத்தைக் காப்பாற்றும் கூட்டமா அல்லது 'கவர்' செய்ய முயலும் கூட்டமா என்பது ஆராயப்பட வேண்டியதொன்று! 

பெரும்பாலான ஆண்கள் வயது வித்தியாசமின்றி இளம்பெண்களைக் கண்டுவிட்டாலே குரலை உயர்த்தி அடிக்கடி அந்தப் பக்கம் ஒரு லுக் விட்டுக் கொண்டே ஹீரோவாக முயற்சி செய்யும் ஒரு சைக்கோ சமூகத்தில், பெண்கள் இப்படித்தான் இருப்பார்களா?

பெண்களையும் , ஆண்களையும் அருகருகே உட்கார இடமளிப்பதில்லை நம்ம தமிழ் ஏரியா பேருந்துகளில்! கலாச்சாரத்தைக் காப்பாற்றும்(?!) முயற்சியாம்! (ஜோடியாக பதிவு செய்தல் ஓக்கே!)  மிக்க நல்லது!அதை அப்பிடியே தனித்தனி வரிசையாகவே மாற்றிவிட்டால், நம்மள மாதிரி அப்பாவி ஜீவனுகள் பிழைச்சுப் போகும்! 

இன்று அதிகாலையும் தூக்கமின்றி வந்தேன்! நாளை திரும்பவும் போகணும்! புதுசா என்ன கொடுமையோ? இப்பவே கண்ணைக் கட்டுது!  

இந்தப் பதிவைப் படிக்கும் பெண்கள் ஒருநிமிஷம் நியாயமாக யோசியுங்கள், உங்கள் தோழிகளிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்!  ஏனெனில் நீங்களோ, உங்கள் தோழியோ கூட இதில் அடங்கலாம்!

இதில் ஒட்டு மொத்தமாக எல்லாப் பெண்களையும் குறை கூறவில்லை! மற்றவர்களையும் மனிதராக மதிக்கும் பெண்களும் பலர் இருந்தாலும், நம்மவரில் பெரும்பான்மை இவர்கள்தான்!   
  
நீங்களும் இப்படியான அவஸ்தைகளைச் சந்தித்திருக்கிறீர்களா?ஆண்களால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி நிறையப் பேசுகிறார்கள்! பெண்களால் ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை யாரிடம் சொல்வது?

பிராணிகளுக்கு எல்லாம் ப்ளூ கிராஸ் இருக்கு..ஆனா அப்பிராணி ஆண்களுக்கு?

44 comments:

  1. ஹிஹி என்ன ஜி ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்கீங்க போல??

    ReplyDelete
  2. என்ன பாஸ் நீங்க பின்னால இருந்த பிகர செட் பண்ணி அவங்களோட போயி அவங்க சீட்ல இருப்பீங்களா...அத விட்டிட்டு உங்க சீட்ட அட்ஜெஸ்ட் பண்றாராம் அவர்

    ReplyDelete
  3. இப்போ ஒட்டு போடல பாஸ் இரவு வாறன்

    ReplyDelete
  4. சுடு சோறு கிடைக்குமா

    ReplyDelete
  5. ஃஃஃஃஃ'நீங்க தாராளமா சரியுங்க தம்பி'ன்னு. ஆனால் அந்தப் பெண் சிறிதும் அனுமதிக்கவில்லை, அவரும் பேசிப்பார்த்து பலனில்லை! ஃஃஃஃஃ

    அவங்க நினைச்சிருப்பாங்கள் இவனுகள் இடம் கொடுத்தால் மடம் கட்டிப் போடுவாங்கள் எண்டு...

    ReplyDelete
  6. இப்போது இருக்கும் சட்ட நடைமுறைகளும், தான் பணம் சம்பாதிக்கிறோம் என்ற பெண்களுக்கே உரித்தான கர்வமும்தான் காரணம். மேலும் பெண்கள் என்று தனியாக பரிவுகாட்டும் மனப்பான்மை உள்ளதால் இவைகளை தங்களின் சுய நலத்திற்கு பயன்படுத்த அவர்கள் தயங்குவதில்லை.
    பரட்டை தலையும், ஸ்லீவ் லெஸ் டி ஷர்டும், ஜீன்ஸ் பேண்டும், காதில் ஹெட் போனும் ,கண்களில் கருப்பு நிற சன் கிளாசும் இவர்களின் இந்த கர்வத்தை உலகுக்கு காட்டும் அடையாளங்கள். யாருடனும் பேசமாட்டார்கள். ஏதோ வேறு ஒரு கிரகத்தில் இருந்து வந்தவர்கள் போல நடந்துகொள்வார்கள். பெரியவர்களை விடுங்கள், சின்ன குழந்தைகள் கூட இவர்களிடம் பேசினால் அவர்களை தவிர்த்து விடுவார்கள்.இவர்கள் எல்லாம் யார் என்றும் உங்களுக்கும் தெரியுமே. :)

    ReplyDelete
  7. சொம்பு நசுங்கிருச்சி ஹே ஹே ஹே ஹே...

    ReplyDelete
  8. நீங்கள் நாலைந்து தடவை திருப்பி திருப்பி கேட்டிருந்தா சிலவேளை ஒம் எண்டிருப்பா!

    ReplyDelete
  9. நல்ல பதிவு நீங்கள் சொல்லுவது மாதிரியான பெண்கள் இருப்பது உண்மைதான் , நானும் அது மாதிரியான பெண்களை கடந்து வந்திருக்கிறேன்

    ReplyDelete
  10. மாப்ள இனிமேயாவது உணர்வாங்கன்னு நம்புவோம்!

    ReplyDelete
  11. எங்கயோ செமத்தியா வாங்கியிருக்கிங்க போல...

    ReplyDelete
  12. தமிழ்ப் பெண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? - நம்மவர்!//

    வணக்கம் சகோதரம், சிங்கிள் கப்பில் சிக்ஸர், அதிரடித் தலைப்போடு அமர்களமான நியூஸ்!

    ReplyDelete
  13. உண்மைதாங்க பேருந்தில் ஆண்களுக்கு சுதந்திரம் கிடையாது..

    அவர்கள் வந்து நம் பக்கத்தில் அமரலாம் நிற்கலாம், பேசலாம் அதையே நாம் செய்தால் மிக பெரிய தவராக கருதுகிறார்கள்....

    உண்மையில் இது எல்லோருக்கும் இருக்கும் அனுபவம்தான்...

    ReplyDelete
  14. பேரூந்தில் ஏறியதுமே முதலில் நோட்டமிடுவது எனது சீட்டுக்குப் பின் சீட்டில் யார் இருக்கிறார்கள் என்பதையே! இளம்பெண்கள் இருந்துவிட்டால் பகீரென்று விடுகிறது! - அவ்வளவுதான்! அன்றைய பயணம் நரகம்தான்!//

    ஏனய்யா, நாம தான் இளம் பெண் இருந்தால் ஜாலியா இருக்குமே என்று நினைக்கிறோமே, நீங்க எதிர் மறையாக இருக்கிறீங்களே, இருங்க முழு மேட்டரையும் படிச்சிட்டு வாறேன்.

    ReplyDelete
  15. தாங்கள் ஒழுங்காக சௌகர்யமாக அமரும் இந்தப் பெண்கள், மற்றவர்களும் அதே வசதிக்காகத்தான் அதிக விலை கொடுத்து சொகுசுப் பேரூந்துகளில் வருகிறார்கள் என்பதை ஏன் நினைத்துப் பார்க்க மாட்டேன் என்கிறார்கள்?//

    பாஸ், அது சுய நலம் பாஸ்.

    தாங்கள் மட்டும் தான் சொந்த பஸ்ஸில் போவதாக நினைப்போரின் மன நிலை இது பாஸ்,
    திருத்தவே முடியாத ஆட்கள் இவர்கள்.

    ReplyDelete
  16. பிராணிகளுக்கு எல்லாம் ப்ளூ கிராஸ் இருக்கு..ஆனா அப்பிராணி ஆண்களுக்கு?//

    பாஸ் இதயத்தை டச் பண்ணீட்டீங்க சகோ.

    ReplyDelete
  17. தமிழ்ப் பெண் குலங்கள் தமக்குரிய சலுகையினைப் பேருந்துகளில் துஷ் பிரயோகம் செய்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது சகோ, அதுவே நிஜமும் கூட.

    ReplyDelete
  18. AnonymousMay 28, 2011

    ///அதுவும் அழகான பெண்கள் என்றால் எமது சமுதாயத்துக்கே ஒரு பெரிய வீக்னெஸ் அல்லவா?/// ஹிஹிஹி உண்மை தான் பாஸ்

    ReplyDelete
  19. AnonymousMay 28, 2011

    ///இதுக்கென்றே ஒரு கூட்டம் இருக்கே! பெண்கள் துயர்துடைக்க(?!)/// இது கேள்விக்குறியுடைய வசனம் தான் பாஸ் ;)

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. ஜி செம்பு நசுங்குறதா??ஹிஹி அது ஹாலிவூட் செம்பு மக்கா

    ReplyDelete
  22. வாங்க நண்பா...ரொம்ப அனுபவ பட்டுவிட்டீர்களோ?அப்புறம் ஏழாவது ஒட்டு நாம குத்தினது..

    ReplyDelete
  23. பாதிப்பு கொஞ்சம் அதிகம்தான் போல!

    ReplyDelete
  24. இந்த மாதிரி ஆணாதிக்கப் பதிவுக்குக் கமெண்ட் போடலாமான்னு தெரியலையே..

    ReplyDelete
  25. //ஏழு மணித்தியாலம் அந்தப் பெண்ணுக்கு முன்னாலிருந்து பயணம் செய்வதே இவ்வளவு கஷ்டமா இருக்குதுன்னா அதை கல்யாணம் செய்பவன் கதி?// ஹா..ஹா..தம்பி கல்யாணம் பண்ணும்போது, இதே பொண்ணு வந்திடாம..

    ReplyDelete
  26. //பெண்கள் துயர்துடைக்க(?!) எங்கடா சான்ஸ் கிடைக்கும்னு அலைஞ்சிட்டு! இது தாய்க்குலத்தைக் காப்பாற்றும் கூட்டமா அல்லது 'கவர்' செய்ய முயலும் கூட்டமா என்பது ஆராயப்பட வேண்டியதொன்று! // நான் ஒன்னும் சொல்லலைப்பா!

    ReplyDelete
  27. //இதில் ஒட்டு மொத்தமாக எல்லாப் பெண்களையும் குறை கூறவில்லை!// இதுக்குப் பேரு தான் முன்னெச்சரிக்கை டிஸ்கி!!

    ReplyDelete
  28. மிகவும் நியாயமான, ஒத்துக்கொள்ளக்கூடிய பதிவு. செளகர்யமாக சாய்ந்து தூங்கிச்செல்லத்தான், அவ்வளவு பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிச்செல்கிறோம். இதை அனைவருமே உணர்ந்து பிறருக்குத்தொல்லை ஏதும் கொடுக்காமல், நம்மைப்போலவே பிறருக்கும் உள்ள உரிமையையும் உணர்ந்து, ஒருவரையொருவர் அனுசரித்துத்தான் நடந்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  29. ஜீ...இதில் ஆண் பெண் பேதமில்லை.மனிதமுள்ள மனிதர்கள் அவ்வளவுதான் !

    ReplyDelete
  30. ஏன் கைல்யாணம் கட்டுறதுக்கெல்லாம் போய் யோசிக்குறீங்க?
    அப்பிடியான ஆக்களுக்கு வீட்டோட மாப்பிளைதான் தேவைப்படம். ஹிஹிஹி

    ReplyDelete
  31. அருமையான் கட்டுரை ஜீ, அனைத்தும் உண்மை!

    ReplyDelete
  32. train le ponge boss. every woman acts like our home woman-kumar

    ReplyDelete
  33. யதார்த்தமான கட்டுரை, வாழ்த்துக்கள் ஜீ!

    ReplyDelete
  34. >>இதுக்கென்றே ஒரு கூட்டம் இருக்கே! பெண்கள் துயர்துடைக்க(?!) எங்கடா சான்ஸ் கிடைக்கும்னு அலைஞ்சிட்டு! இது தாய்க்குலத்தைக் காப்பாற்றும் கூட்டமா அல்லது 'கவர்' செய்ய முயலும் கூட்டமா என்பது ஆராயப்பட வேண்டியதொன்று!

    hi hi ஹி ஹி ஹி

    ReplyDelete
  35. தமிழ் பெண்கள் என்றில்லை ஆண்களும் அப்படித்தான். இளைய சமுதாயத்தினரின் செயல்பாடுகள்தான் இப்படி செல்கின்றன.

    ReplyDelete
  36. பெண்கள் மட்டுமில்லை.. எல்லா வயதினரும். ஆண்கள், பெண்களும். அனுசரித்துப் போகாதவர்கள்..இருக்கிறார்கள்..

    ReplyDelete
  37. i agreed Mr கக்கு - மாணிக்கம் comments..

    thats mine also.

    ReplyDelete
  38. உங்கள் வேதனைகள் புரியுது ஜீ... இன்னும் தமிழ் பெண்களுடன் நீங்க டீப்பா பழகேல்லை என்பதும் புரியுது. அப்படி இருந்தால் தான் அவங்க தமிழ் பெண்கள் ஜீ... நீங்க சுட்டிக்காட்யதெல்லாம்...

    ReplyDelete
  39. பல நாட்களாக நெஞ்சுக்குள் புகைந்து கொண்டிருந்த விஷயம். போட்டு உடைத்து விட்டீர்கள். மாநகர பேருந்தில் நான் பஸ் ஸ்டாண்டில் இருந்து கிளம்புகையில் அடிக்கடி காணும் காட்சி. காலியான பஸ் வந்து நின்றதும், பல பெண்கள் அடித்து பிடித்துக்கொண்டு ஏறி நேராக ஆண்கள் இருக்கையில்தான் அமர்வார்கள். பெண்கள் இருக்கை காலியாக இருப்பினும். இதுபோக பல உதாரணங்களை என்னால் நேரடியாக காட்ட இயலும். இது குறித்து எப்பேற்பட்ட விவாதத்திற்கும் நான் தயார். நல்ல பதிவு ஜீ!!

    ReplyDelete
  40. எங்களுக்கும் அனுபவங்கள் இருக்குங்க்ணா,ஆனா சொல்லமாட்டம்ல.

    ReplyDelete
  41. இந் நேரத்தில் உங்களுடன் ஒன்றைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நானும் ஒரு பெண் தான். colombo இல் இருந்து பயணத்தை மேற்கொண்டேன். அப்போது என் முன்னால் ஒரு இளைஞன் பின்னால் ஒரு வயது வந்தவர். முன்னாள் இருந்தவர maximum ஆக seat i சாய்த்து விட்டிருந்தார். பின்னால் இருந்தவரோ seat i சாய்க்க விடவில்லை. இரவில் துக்கமிலாமல் தவித்த தவிப்போ சொல்ல முடியாது. தனியே பெண்களை குற்றம் சுமத்த வேண்டாம்.

    ReplyDelete
  42. \\\சரி! அதைக்கூட விட்டு விடுங்கள்! இவ்வளவு அநியாயம் பண்ணிட்டு, கடைசியில் இறங்கிப்போகும்போது ஏதோ நாமதான் என்னமோ 'ஈவ் டீசிங்' பண்ணினமாதிரி கண்ணகி கசின் ரேஞ்சில ஒரு 'லுக்கு' விடுவாங்க பாருங்க! அதாங்க பெரிய கொடுமை!\\\

    நீங்க அப்படியே ஒரு கோவலன் ரேஞ்சுக்கு ஒரு லுக்கு விட்டு ட்ரை பண்ணிருக்கலாம்ல

    ReplyDelete