Friday, May 20, 2011

முரளி இந்தியாவிடம் ஏதும் பெற்றுக் கொண்டாரா?


'முரளி இந்தியாவிடம் ஏதும் பெற்றுக் கொண்டாரா?'
'ஆம்..! அவரின் மனைவியை!'
'ஹா ஹா ஹா! நான் அதைக் கேட்கலை..!'

உலகக் கோப்பையை இந்திய அணி வென்றபின்பு திடீரென்று ஒரு பெரும்பான்மையின (சிங்கள) மாமா அலுவலகத்தில் இப்படிக் கேட்டதும் எனக்கு ஆச்சரியம், அதிர்ச்சி, கோபம் எல்லாம் கலந்து கட்டிய ஒரு உணர்வு! 
பயங்கரக் கடுப்பாகித்தான் அப்படிச் சொன்னேன்!

இலங்கை அணிக்காகத் தன்னை அர்ப்பணித்து ஒரு தமிழனாக வெளிப்படுத்திக் கொள்ளாமல் வாழ்ந்து வந்த ஒருவரை அவரின் நேர்மையைச் சந்தேகிப்பது சகிக்கமுடியாமல் இருந்தது.

சில வருடங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியை நடாத்தி வந்தார் (தூர்தர்ஷன்?)! ஒருமுறை அதில் கலந்து கொண்ட முரளி ஆங்கிலத்திலேயே உரையாட, தமிழில் பேசுமாறு ஸ்ரீகாந்த் கேட்க, தனக்கு தமிழ் பேசி பழக்கமில்லை, பேச வராது அப்பிடி இப்பிடின்னு என்னென்னமோ கூறி....கடைசியில் கெஞ்சிக் கேட்டு தமிழில் ஓரிரு வசனம் பேச வைத்தார் ஸ்ரீகாந்த்! (பார்க்கப் பயங்கரக் கடுப்பாயிருந்தது!) 

உள்ளே கொந்தளித்துப் போய் இறுகிய குரலில் சொன்னேன் 'அப்படி ஒரு அவசியம் முரளிக்கு இல்லை. ஒரு தமிழனா இருப்பதால் தான் சந்தேகப் படுகிறீர்களா?' அதுக்கு அப்புறம்தான் எல்லா இலங்கை அணி வீரர்கள் மீதும் சந்தேகம் இருப்பதைச் சொன்னார். இருந்தாலும் முதலில் தமிழன்தானா? எத்தனை பேர் இப்பிடி யோசிக்கிறான்களோ?

************

Hats off வெற்றிமாறன்!




ஒரு அருமையான படத்திற்கு நான் மிகவும் ரசித்துப் பார்த்து உருப்படியா எழுதிய ஒரே தமிழ்ப்படம்! என்ன ஒன்று படத்தில் காதல் என்ற ஒன்று இல்லாவிட்டால் இன்னும் நன்றாய் இருந்திருக்கும்!  ஆனா அப்படியிருந்தா பாடல்கள் இருந்திருக்காதே நடன இயக்குனருக்கும் விருது! மறக்க முடியுமா தனுஷின் ஆட்டம்! தனுஷுக்கு மிகவும் பொருத்தமான விருதுதான்! சிறந்த இயகுனர், சிறந்த திரைக்கதை - hats off வெற்றிமாறன்!

************


பிரகதீஸ்வரர்தான் காப்பாற்றணும்!

பொன்னியின் செல்வன் படம் நிறுத்தப்பட்டதாகச் சொல்கிறார்கள்! இப்போதைக்கு எனக்கு மிக்க மகிழ்ச்சியான செய்தி இதுதான். பொன்னியின் செல்வன் வாசித்தவர்களுக்குப் புரியும்! யாரையும் அந்தப் பாத்திரங்களில் பொருத்திப்பார்க்க முடியாது!

மணிரத்னம் பொன்னியின் செல்வனில் 'கை' வைக்கிறார் என்றதுமே பெரும் மன உழைச்சலாயிருந்தது! என்னென்ன கொடுமையெல்லாம் பார்க்கணுமோன்னு! ஏற்கெனவே செல்வராகவன் சோழப்பேரரசைச் சின்னா பின்னமாக்கியிருந்தார். அதைவிடக் கொடுமை ஆயிரத்தில் ஒருவனைப் பார்த்துவிட்டு அதை நம்பி தமிழன் வரலாறு பேசும் பயபுள்ளக இம்சை!

மணி படமா எடுக்கிறார்ங்கிறதைவிட வெந்த சோழர் புண்ணில பாண்டிய வேலைப் பாய்ச்சின மாதிரி இருந்தது நம்ம டாக்டர் விஜய்தான் வந்தியத்தேவன் என்பது! மணிக்குக் கொஞ்சம்கூட மனச்சாட்சியே இல்லையா? ஏன் இந்தக் கொடூரமான காமெடி? 

நிறுத்தப்பட்டதாகச் சொன்னாலும் திரும்பவும் ஆரம்பிச்சிடுவாங்களோன்னு பயமா இருக்கு - பிரகதீஸ்வரர்தான் காப்பாற்றணும்!

***************

The Hangover II (2011)




The Hangover (2009) படத்தின் இரண்டாம் பாகம் மே 26 ரிலீசாம்! முதல் பாகம் செம்ம அட்டகாசம்! என் நண்பனுக்கு சொன்னேன். அவனுக்குப் பிடிக்கல. காமெடி என்பது வாய்விட்டுச் சிரிப்பது மட்டுமல்லவே  சிறு புன்முறுவலை வரவைப்பதும் கூட! தெனாலியா பஞ்சதந்திரமா சிறந்த நகைச்சுவை என்று கேட்டால் நான் பஞ்சதந்திரத்தைத்தான் சொல்வேன்! - ரசனைகள் பலவிதம்!

லாஸ் வேகாசில் இரவு ரூம் போட்டு தண்ணி அடிக்கிறார்கள்  நாலு நண்பர்கள்! விடிந்தால் ஒருவனைக்காணவில்லை.அவனுக்கு நாளை திருமணம் வேறு! நேற்றிரவு நடந்தது சுத்தமா யாருக்கும் நினைவில்லை - பிறகு என்னவாகிறது? - இதுதான் கதை! காமெடில பின்னியிருப்பார்கள்! 

சாம்பிளுக்கு ஒன்று - ஆலனின் தந்தை டோகிடம் தனது காரைத் தந்துவிட்டு சொல்கிறார்.
Don't let Alan to drive the car. because something wrong with him nowadays!  
இதைச் சொல்லும்போது ஆலன் சீரியஸாக தனது நாய்க்கு லிப் டு லிப் கிஸ் பண்ணிட்டிருப்பான்!

இரண்டாம் பாகம் எப்படியோ பார்க்க வேண்டும்!
  

23 comments:

  1. //The Hangover (2009)

    அட்டகாசமான படம்
    படம் முடிந்த பின் அந்த கேமராவில் எடுத்திருக்கும் போட்டாக்களை வைத்தே கதையில் என்ன நடந்தது என தெளிவாக புரியும் படி குழப்பாமல் கதை இருக்கும்

    2 பாகம் வரட்டும் பார்த்திடுவோம்

    ReplyDelete
  2. //நிறுத்தப்பட்டதாகச் சொன்னாலும் திரும்பவும் ஆரம்பிச்சிடுவாங்களோன்னு பயமா இருக்கு


    தமிழுக்கு இப்படி ஒரு சோதனையா

    ReplyDelete
  3. AnonymousMay 20, 2011

    ////வெந்த சோழர் புண்ணில பாண்டிய வேலைப் பாய்ச்சின மாதிரி இருந்தது நம்ம டாக்டர் விஜய்தான் வந்தியத்தேவன் என்பது! மணிக்குக் கொஞ்சம்கூட மனச்சாட்சியே இல்லையா? ஏன் இந்தக் கொடூரமான காமெடி? //// ஹஹாஹா இதிலும் உங்களுக்கு குசும்பு தான் போங்க ....

    ReplyDelete
  4. அசத்தல் பதிவு நண்பா..

    ReplyDelete
  5. மணி படமா எடுக்கிறார்ங்கிறதைவிட வெந்த சோழர் புண்ணில பாண்டிய வேலைப் பாய்ச்சின மாதிரி இருந்தது நம்ம டாக்டர் விஜய்தான் வந்தியத்தேவன் என்பது! மணிக்குக் கொஞ்சம்கூட மனச்சாட்சியே இல்லையா? ஏன் இந்தக் கொடூரமான காமெடி?


    ...tragedy!!!! :-(

    ReplyDelete
  6. Ponniyin Selvan start pannumpodhe sonnen konja nal pesittu appuram vitruvangannu nenaichen athe madiri nadanthuttu...

    Ponniyin selvanai lam Lord of the Rings pola 3 part ah eduththa than nalla irukkum...

    Sorry for English...,

    ReplyDelete
  7. பல கதை சொன்ன
    கலவையான கருத்து பதிவு
    பாராட்டுக்கள்

    ReplyDelete
  8. ஹிஹி விஜயை கேவலப்படுத்துகிறார் ஜி என்று நான் சண்டை பிடிக்க மாட்டேன்..
    நான் விஜய் ரசிகன் தான் ஆனால் நான் பொன்னியின் செல்வன் மூன்று தடவை வாசித்தவன் என்பதால்
    அந்தப்பாத்திரம் விஜய்க்கு பொருந்தாது என்று எனக்கு தெரியும்!!

    ReplyDelete
  9. வந்தேன், வாக்களித்தேன்.

    ReplyDelete
  10. என்னதான் இருந்தாலும் முரளி ஒரு சுயநல தமிழர். தமிழனிடம் தமிழில் கதைக்காம வேற எங்க கதைக்க போறார்???

    ReplyDelete
  11. பகிர்வுக்கு நன்றி... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. ஹேங் ஓவர் படத்த பத்தி கேள்விபட்டு இருக்கேன், ஆனா எங்க ஊர்ல எல்லாம் வராது பாஸ், சூப்பர் ஜீ

    ReplyDelete
  13. என் ப்ளாகில் நீங்கள் அலங்கரிக்கிறீர்கள் ஜீ...
    அத்துடன் நாளை ஒரு சிறிய அலுவல்..மறக்காமல் என் கடைக்கு வரவும்

    ReplyDelete
  14. மதுரைக்கு வந்த சோதனை....

    ReplyDelete
  15. விஜயை வச்சு பொன்னியின் செல்வன் எடுக்கவே வேணாம் !

    ReplyDelete
  16. பொன்னியின் செல்வன் தப்பிச்சதுல நமக்கும் சந்தோசம் தான் ஜீ..ஹேங் ஓவர் பார்ட் 2 வருதா..அடி தூள்.

    ReplyDelete
  17. பொன்னியின் செல்வன் தப்பித்ததில் எனக்கு மிக சந்தோஷம் ,விஜய் வந்திய தேவனாக பார்க்க வேண்டுமே என்று எனக்கு வயிற்றில் புளியை கரைத்தது ,நல்ல வேலை தப்பித்தது தமிழ் திரை உலகம்

    ReplyDelete
  18. சூப்பரப்பு...
    vijay is a good actor.his mind donot allow to act good films.
    http://zenguna.blogspot.com

    ReplyDelete
  19. ஹேஙோவருக்காக நானும் வெயிட்டிங்!!!!

    ReplyDelete
  20. hats off வெற்றிமாறன்
    நானும் அதே

    ReplyDelete
  21. இருந்தாலும் முதலில் தமிழன்தானா? //

    இதெல்லாம் அந்தக் காலம் தொட்டே சகஜம் சகோ. நம்ம தலையில் எழுதப்பட்ட விதி இது தானே.


    //Hats off வெற்றிமாறன்!//

    காலங் கடந்தும் நினைவில் நிற்கும் படம்.


    //நிறுத்தப்பட்டதாகச் சொன்னாலும் திரும்பவும் ஆரம்பிச்சிடுவாங்களோன்னு பயமா இருக்கு - பிரகதீஸ்வரர்தான் காப்பாற்றணும்!//

    அவ்....அட்வான்ஸா யோசிக்க்றீங்களோ.

    The Hangover (2009) //

    சகோ படம் பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறேன். இதன் முதற் பாகமும் பார்க்கவில்லை. பகிர்விற்கு நன்றிகள்.இப்பவே டவுன் லோட் பண்ண ஆரம்பித்தால் நாளை காலையில் படம் கிடைக்கும், பார்த்து முடிய சொல்லுறேன்.

    விளையாட்டு, சினிமா, வரலாற்று இலக்கியத்துடன் கலந்த படம் என கலந்து கட்டி கலக்கியிருக்கிறீர்கள். அருமை சகோ.

    தாமதமான வருகைக்கு...புரிந்து கொள்வீர்கள். ஆணி அதிகம் பாஸ்.

    ReplyDelete
  22. ஜீ...அவியல் மாதிரி கலந்து கட்டி கொடுத்திருக்கீங்க...முரளி பத்தி இப்போ என்ன தான் சொல்ல வரீங்க...:))) தமிழ் சினிமாவும்..காதலையும் பிரிக்க முடியாது பாஸ்...:))

    ReplyDelete
  23. AnonymousMay 26, 2011

    //பிரகதீஸ்வரர்தான் காப்பாற்றணும்!//

    என் மனதின் வரிகளை அப்படியே பதிந்துள்ளீர்களே. இதே வரிகளை நான் புலம்பிக்கொண்டே இருப்பேன்.

    ReplyDelete