Wednesday, April 20, 2011

ஏன் இந்தக் கொலைவெறி?


முதலில் என்னால் நம்பவே முடியல! யாராவது டாக்டரைப் பிடிக்காதவங்க எவனாவது விளையாடுறானுகளான்னுதான் நினைச்சேன்.

அப்புறம்தான் தெரிஞ்சுது ஷங்கர் தான்..!

ஏன்? எதுக்காக? ஏன் இந்தக் கொலைவெறி?

ஆரம்பத்தில் ராகுல் காந்தியைச் சந்தித்தது, காங்கிரசில் சேர முடிவெடுத்தபின்  பிரஸ்மீட்டில் ஒரு கேள்வி,

'ஏன் காங்கிரஸ் கட்சியைத் தேர்ந்தெடுத்தீர்கள்?'
'அந்தக் கட்சிதான் இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது' - டாக்டரின் பதில்! 

என்ன ஒரு தெளிவு! அறிவு! தூரநோக்கு!
நாங்கள் தெரிந்து கொண்டோம், கற்றுக் கொண்டோம்!

பிறகு அதிமுக ஆதரவு, அரசியலுக்கு வருவார், வரமாட்டார், பேசுவார், பேசமாட்டார்,ஆதரவு கொடுப்பார்,கொடுக்கமாட்டார்!அவர்தான் பேசச்சொன்னார் - எஸ்.ஏ.சி.யின் பில்டப்புகள்!

காவலன் பிரச்சினை காரணமாக திடீரென்று தோன்றிய பாசத்தில் மீனவர் பிரச்சினைக்கு குரல்கொடுக்க மீட்டிங் போட்டு, அதில் வேலாயுதம் படம்பற்றி பேசி தனது கன்னிப் பேச்சில் பலரின் பாராட்டுக்கள்!

அதில் உலக வரைபடத்திலிருந்து இலங்கையை ஒழித்து விடுவேனென்று அவர் சொன்னதை நினைச்சு இன்னும்கூட இங்கே நிறையப் பேர் பயந்து போயிருக்கானுங்க என்றால் பார்த்துக்கொள்ளுங்க!

அதால நிறையப் பேர் அவசரமா நாட்டைவிட்டு 'எஸ்'ஸாக பாஸ்போர்ட் எடுத்து வச்சிருக்கானுங்கன்னு சொன்னா உங்களுக்கு ஒருவேளை நம்பக் கஷ்டமாக இருக்கலாம்! வேணாம் நானும் உங்களை கஷ்டப்படுத்த விரும்பல!

இதில ஒருவிஷயம் சொல்லணும்.

பட்டாசுபாலு, பான்பராக் ரவி வரிசையில் இலங்கையைச் சேர்த்தது உலக அரசியல் அரங்கில் உன்னிப்பான கவனத்தைப் பெற்றது என்பதை இங்கே கண்டிப்பாக கூறியே ஆகவேண்டும்.

அதிலும் 'நான் அடிச்சா தாங்கமாட்டே' என்ற வரிகளை அவர் எடுத்தியம்பியதை உற்று நோக்கும்போது, இது ஓர் இறுதி எச்சரிக்கையாகவே தோன்றுகிறது! 

அமெரிக்கா, ஐ.நா என யார் பேச்சும் கேட்காமல் தன்னிச்சையாகச் செயற்பட்டு வரும் இலங்கை அரசாங்கம் டாக்டரின் இந்த எச்சரிக்கையை புறக்கணிக்கும் பட்சத்தில் விளைவுகள் விபரீதமாகும் என்றே அஞ்சப்படுகிறது! 

இது குறித்து பிரபல சீரியஸ் அரசியல்வாதி சுப்பிரமணிய சுவாமி ஏதும் கருத்து தெரிவித்தாரா என்பது பற்றித் தெரியவில்லை! 

டாக்டர் பற்றி புரட்சித்தமிழன் சத்தியராஜ் ( இவர் எந்த நாட்டில புரட்சி செய்தார்? யாராவது சொல்லுங்கப்பா!) கூறிய கருத்து படு சீரியசானது, சிந்திக்கத் தூண்டுவது! 

டாக்டர் ஹாலிவுட் படங்களில் நடிக்கவேண்டுமேன்பதே அது! - தமிழ்மக்கள் மீதுள்ள அபிமானத்தால் சொன்னாரா அல்லது அமெரிக்காவுக்கே சூனியம் வைக்கும் முயற்சியா என்பது அவருக்கே வெளிச்சம்!

இந்தப் பின்னணி ஏதும் அறியாமல்தான் ஷங்கர் இப்படியொரு முயற்சியை மேற்கொண்டாரா? 

அல்லது எல்லாம் தெரிந்தபின் டாக்டர் என்றதுமே

அவரின் நடிப்பு, கதைத்தேர்வு, அரசியல் தொடர்பான தீர்க்கமான முடிவெடுக்கும் திறன், எந்தவிஷயத்தைப் பற்றியும் தெளிவாக, சுயமாக யோசித்துப் பேசும் குணவியல்புகளின் கூறுகளாலான உணர்வுகளின் அடிப்படையில் மக்கள் மனதின் ஆழத்தில் கட்டமைக்கப்படிருக்கும் உருவகத்தின் காட்சிப்படிமங்களிளிருந்து பிரதிமைப் படுத்தப்பட்ட பிம்பமாக உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு பின் நவீனத்துவ முயற்சியா என்பது ஆராயப்பட வேண்டியதொன்று!  

20 comments:

  1. டாகுடரு தமிழ் படங்களுக்கு ஓய்வு கொடுத்தால் சரி...

    ReplyDelete
  2. யோவ் மாப்ள ஷங்கருக்கு தெரியாதா காமடி படத்துக்கு இவருதான் சரியா வருவாருங்கறது நீ ஒரு டியுப் லைட்டுயா!

    ReplyDelete
  3. @ # கவிதை வீதி # சௌந்தர்
    வாங்க!

    //விக்கி உலகம் said...
    யோவ் மாப்ள ஷங்கருக்கு தெரியாதா காமடி படத்துக்கு இவருதான் சரியா வருவாருங்கறது நீ ஒரு டியுப் லைட்டுயா!//
    அது நல்ல படம் மாம்ஸ்! அத வெச்சுக் காமெடியா பண்ணப் போறாங்க! வெளங்கிரும்!
    அது சரி காமெடி படமா இருந்தாலும், டாக்டர் ஹீரோதானே...#டவுட்டு!

    ReplyDelete
  4. ஆமாங்க ரொம்ப பயமுறுத்திட்டாரு டாக்டரு

    ReplyDelete
  5. டாக்டர் ஹாலிவுட் படங்களில் நடிக்கவேண்டுமேன்பதே அது! - தமிழ்மக்கள் மீதுள்ள அபிமானத்தால் சொன்னாரா அல்லது அமெரிக்காவுக்கே சூனியம் வைக்கும் முயற்சியா என்பது அவருக்கே வெளிச்சம்!

    .....நல்லா கிளப்புறாங்க பீதியை!

    ReplyDelete
  6. இறுதி வரிகள் கருத்துச்செறிவும்,இலக்கிய தகுதியும் கொண்டவை.நன்று.

    ReplyDelete
  7. ஐயோ பாவம் பத்தோடு பதினொன்னா பிழச்சி போகட்டும் விடுங்க...

    ReplyDelete
  8. // விக்கி உலகம் said...
    யோவ் மாப்ள ஷங்கருக்கு தெரியாதா காமடி படத்துக்கு இவருதான் சரியா வருவாருங்கறது நீ ஒரு டியுப் லைட்டுயா!///

    காமெடி படத்துக்கு இவனா யோவ் தக்காளி கல்லெடுத்து மண்டைய பேத்துபுடுவேன் பேத்து....

    அதுக்கு இவன் சரிப்படமாட்டான்ய்யா..

    ReplyDelete
  9. என் கமெண்ட்ஸ் எங்கே காணோம்...?

    ReplyDelete
  10. பாவம் விட்டிருங்க.
    இன்று உணவு உலகத்தில் --
    http://unavuulagam.blogspot.com/2011/04/blog-post_20.html#more
    பாக்கெட் குளிர்பானங்கள் பருகலாம் வாங்க!

    ReplyDelete
  11. ஓகே...ஓகே...தானை தலைவன் நண்பன் படம் எப்போ ரிலீஸ் ஜீ???:)))))

    ReplyDelete
  12. பாஸ் முடியல, விஜய் பத்தின நியூசுக்கு ஒரு பின்நவீனத்துவ பதிவா :-)

    ReplyDelete
  13. ஓகே..ஓகே.. விடுங்கப்பா

    ReplyDelete
  14. ஜீ, டாகுடரைப் பத்தி பெரிய ஆராய்ச்சி பண்ணி இருக்கீங்களே..இதுக்கே உங்களையும் டாகுடர் ஆக்கணும்!

    ReplyDelete
  15. ஐயோ ஜீ தாங்க முடியல!!! பாவம் வுட்ருங்க டாக்டரு அழுதிடுவாரு....
    //
    டாக்டர் ஹாலிவுட் படங்களில் நடிக்கவேண்டுமேன்பதே அது! - தமிழ்மக்கள் மீதுள்ள அபிமானத்தால் சொன்னாரா அல்லது அமெரிக்காவுக்கே சூனியம் வைக்கும் முயற்சியா என்பது அவருக்கே வெளிச்சம்!//
    கலக்கலான பதிவு!!!

    ReplyDelete
  16. // அதில் உலக வரைபடத்திலிருந்து இலங்கையை ஒழித்து விடுவேனென்று அவர் சொன்னதை

    ஒருவேளை நம்ம டாக்குடறு சிங்கள படங்களில் ஹீரோவா நடிக்க முடிவு பண்ணிட்டாரோ?

    ReplyDelete
  17. டாக்டருக்கு படித்த(!) ஒருவர் விரைவில் முதல்வராக வரப்போகும் நேரத்தில் இப்படி எழுதி இருப்பது சரியா..ஜீ.

    ReplyDelete
  18. நாளைய முதல்வர் வாழ்க.. ஹி ஹி

    ReplyDelete
  19. 2021-ல் டாகுடர் எங்கோ போய்விடுவார்..... அப்புறம் பாருங்க....!

    ReplyDelete
  20. appa erukura araciyal vathinga matm rmba yellam therichavangala nakkal adika alu venum athukku yenya antha ala vambukku ilukkuringa nadula kandavanellam katchi arampikkiran avangala vitrunga ungalukku than vijay mela y this kolaiveriyooooooooo

    ReplyDelete