Tuesday, March 29, 2011

Malena

ஒரு பெண்ணால் ஆண்துணையின்றி தனித்து வாழ்வதென்பது எப்போதுமே பெரும் சவாலாகவே இருக்குமா? அதிலும் மிக அழகான ஒரு பெண் விதவையாகவும் இருந்துவிட்டால் என்னென்ன சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும்? இதற்கு நாடு, காலம், மொழி என்ற வேறுபாடுகள் கிடையாதா? 


இரண்டாம் உலகப்போர் நடைபெறும் காலப்பகுதி. இத்தாலியின் சிசிலி நகரப்பகுதியின் ஒரு காலைவேளை.மேலே விமானங்கள் பறந்துசெல்கின்றன. போர் பற்றிய செய்திகள் வீதிவழியாகச் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் ரெனாட்டோவுக்கு தந்தையிடமிருந்துஒரு புதிய சைக்கிள் கிடைக்கிறது. மிகுந்த மகிழ்ச்சியுடன், வேகமாக ஓட்டிச் செல்கிறான். ஒரு கட்டைச் சுவரில் பள்ளிச்சீருடையில் அவனைவிட வயது கூடிய மாணவர்கள் சிலர் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களிடம் ரெனாட்டோ தனது சைக்கிளைக் காட்டி, தானும் இப்போது பெரியவனாகிவிட்டேன். உங்களுடன் சேர்த்துக் கொள்ளுங்கள் எனக்கூற, அவர்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.

சற்றுத் தொலைவிலுள்ள வீட்டைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் ஒருவன் விசிலடித்து சிக்னல் கொடுக்கிறான். எல்லோரும் அவசரமாக ஓடிவந்து உட்கார்ந்து கொள்ள, கூடவே ரெனாட்டோவும் அவர்களுடன்! அமைதியாக, மிகுந்த எதிர்பார்ப்புடன் அப்படி யாருடைய வருகைக்காகக் காத்திருகிறார்கள்?


மெலீனா! - ஊரின் மிக அழகான பெண். அந்தப்பகுதி ஆண்கள் அனைவராலும் வயது வேறுபாடின்றி ரசிக்கப்படும், பெண்களனைவரும் பொறாமைப்படும் பேரழகி. அவள் யாரையும் கவனிப்பதில்லை. அவள் கணவன் ஒரு ராணுவ வீரன். உலகப்போரில் பங்குகொண்டிருப்பவன். 

அவள் கடந்து சென்றதும் சிறுவர்கள் மீண்டும் தமது சைக்கிள்களில் விரைவாக ஓடிச்சென்று இன்னொரு வீதியில் அவளுக்காகக் காத்திருக்கிறார்கள். அவள் போகும் வழியெங்கும் ஒருகணம் ஆண்கள் ஸ்தம்பித்து நிற்க, பெண்களின் பொறாமைப்பார்வைகளும் கிசுகிசுப்புகளும் தொடர  சலனமின்றி, எதையும் கவனிக்காமல் செல்கிறாள்.


பருவ வயதுகளின் ஆரம்பத்திலுள்ள ரெனாட்டோவைப் பெரிதும் ஈர்க்கிறாள் மெலீனா. அவளின் நடத்தையைப் பற்றிய ஊரவர்களின் வதந்திகளை ரெனாட்டோவும் கேட்கிறான். தனது கனவுக்கன்னியைப் பற்றிய தவறான பேச்சுக்கள் அவனுக்கு எரிச்சலூட்டுகின்றன. இரவுவேளைகளில் அவளது வீட்டினை மறைந்திருந்து கண்காணிக்கும் அவனுக்கு அவளைப்பற்றிய வதந்திகள் பொய்யானவையென்றும், அவள் தன கணவனைமட்டுமே காதலிக்கிறாள், அவன் நினைவகாவே இருக்கிறாள் என்பதும் புரிகிறது. அதன்பின் யாரும் மேலீனாவைத் தவறாகப் பேசுவது கேட்டால் ஆத்திரம் கொள்கிறான். 

இந்நிலையில் மெலீனாவின் கணவன் இறந்துவிட்டதான செய்தி, அவள் மீதான ஒரு பொய்யான ஜோடிப்பு வழக்கு, அவளது செலவுகளுக்குப் பணம் தந்துகொண்டிருந்த ஆசிரியரான அவளது தந்தையின் இறப்பு எனத்தொடரும் நிகழ்வுகளால் அவளது வாழ்க்கை என்னவாகிறது? என்பதை ரெனாட்டோவின் பார்வையில் சொல்கிறது படம். 


எப்போதுமே என்னால் மெலீனாவை மறக்க முடியாது என ரெனாட்டோ கூறுவதோடு படம் நிறைவடைகிறது.

படம் முழுவது சிறுவன் ரெனாட்டோ தன்னை ஒரு வளர்ந்த மனிதனாக காட்டிக்கொள்ள முயற்சிக்கும் பிரயத்தனங்கள் சுவாரஸ்யமானவை.

இயக்குனர் டொர்னாடோ குசாபேயின் படங்களின் வழக்கமான நகைச் சுவையுணர்வு படம் முழுவதும்!
- ரெனாட்டோவும், அவனது தந்தையும் பேசிக்கொள்ளும் காட்சிகள்.  

மெலீனாவாக மோனிகா பெலூசி! (Monica Bellucci) - இதுக்கு மேலே சொல்ல என்ன இருக்கு? 

இயக்கம் - Giuseppe Tornatore 
மொழி - Italian



டிஸ்கி: ஈரானிய சினிமா தவிர்ந்த ஏனைய உலக சினிமாக்களை அலுவலகங்களில், குடுபத்தினரோடு பார்ப்பதைத் தவிர்த்து, தனியாகவே பார்ப்பது நல்லது! அப்புறம் ஏதாவது கிக்கிலிபெக்கிலி (நன்றி: சூப்பர்ஸ்டார், படிக்காதவன்) ஆயிடும் அவ்வளவுதான்!

31 comments:

  1. // ஈரானிய சினிமா தவிர்ந்த ஏனைய உலக சினிமாக்களை அலுவலகங்களில், குடுபத்தினரோடு பார்ப்பதைத் தவிர்த்து, தனியாகவே பார்ப்பது நல்லது! அப்புறம் ஏதாவது கிக்கிலிபெக்கிலி (நன்றி: சூப்பர்ஸ்டார், படிக்காதவன்) ஆயிடும் அவ்வளவுதான்!

    சரியா சொன்னிங்க

    ReplyDelete
  2. மாப்ள சினிமா சீன்மா நல்லா இருந்துது நன்றி!

    ReplyDelete
  3. //Speed Master said..
    சரியா சொன்னிங்க//
    ஏதோ நம்மால முடிஞ்சது..:-)

    //Nagasubramanian said...
    will watch.....//
    நன்றி! பாருங்க!

    //விக்கி உலகம் said...
    மாப்ள சினிமா சீன்மா நல்லா இருந்துது நன்றி!//
    வாங்க பாஸ்! நன்றி! :-)

    ReplyDelete
  4. நால்லாதான் சொல்லியிருக்கீங்க..

    ReplyDelete
  5. கண்டிப்பாக படம் பார்க்க வேண்டும்...

    ReplyDelete
  6. நல்லா சொல்லி இருக்கீங்க.

    ReplyDelete
  7. இந்தப் படத்தை ஒரு மாதத்துக்கு முன்னர்தான் பார்த்தேன்..
    நல்ல விமர்சனம்.

    ReplyDelete
  8. விமர்சனம் சூப்பரா இருக்கே....

    ReplyDelete
  9. பார்க்கும் ஆவலை தூண்டிவிட்டீர்கள்

    ReplyDelete
  10. விமரிசனம் நல்லா இருக்கு. படம் பாக்கலாம்னு தோணுது.

    ReplyDelete
  11. அழகான பெண் அழகான விமர்சனம்

    ReplyDelete
  12. அய்யய்யோ..இதுவும் என் விமர்சன லிஸ்ட்ல உள்ள படம்..அது எப்படிங்க எப்பவும் ரெண்டு பேரும் ஒன்னு போல யோசிக்கோம்?...அருமையான படம் ஜீ. சீன் கொஞ்சம் ஓவர் தான்..இருந்தாலும் நல்ல படம்!

    ReplyDelete
  13. Climaxil malenavukku mottai adikkum kaatchi sirappu.

    Matthapadi ithu oru naalanthara padam.
    Vakkiratthin uccham thanthaye maganai vibasara viduthikku azhaitthu povathu.

    Nadakkum podhu Pinpakkathaiye kanpipathu,jannalai etti parpathu ena neelum.
    arimukapatuthum alavu ithu oru nalla cinema alla.

    Thavaraka kooriyirunthal manniththukkollavum jee.

    ReplyDelete
  14. @# கவிதை வீதி # சௌந்தர்
    @“நிலவின்” ஜனகன்
    @komu
    @இளங்கோ
    @MANO நாஞ்சில் மனோ
    @பார்வையாளன்
    @Lakshmi
    @ஆர்.கே.சதீஷ்குமார்
    @Chitra

    நன்றி!நன்றி!

    @ஐத்ருஸ்
    நீங்கள் சொல்வதும் சரியே! இப்படி எங்காவது நடக்குமா என நானும் யோசித்தேன்.ஒருவேளை அவங்க ஊர்ல? சில ஏரியாவை அதனாலேயே கூறவில்லை. நன்றி உங்கள் கருத்துக்கு!

    @செங்கோவி
    ஓ! நீங்க இரண்டு மூன்றுதரம் மெலீனா பற்றிப் பின்னூட்டங்களில் கூறியிருந்ததால் நானும் ஒரு ஆர்வத்தில....அதனாலென்ன நீங்க விரிவா எழுதுங்கண்ணே..மோனிக்கா பற்றியும்! :-)

    ReplyDelete
  15. நல்ல படம் சில வாரங்களுக்கு முன்னர் பார்த்திருந்தேன்.
    விடலைப் பருவ உணர்வுகளையும் காட்டுகிறது.
    தனித்து வாழும் அவளைப் பற்றி வாய் கூசாது பேசும் ஆண்களும், அவளை அவமானப்படுத்தும் பெண்களும்... மறக்க முடியவில்லை.
    இன்னும் நிறைய நீங்கள் எழுதியிருக்கலாம் என எனக்குப் படுகிறது

    ReplyDelete
  16. @ரஹீம் கஸாலி
    வாங்க!

    //Dr.எம்.கே.முருகானந்தன் said.
    தனித்து வாழும் அவளைப் பற்றி வாய் கூசாது பேசும் ஆண்களும், அவளை அவமானப்படுத்தும் பெண்களும்... மறக்க முடியவில்லை.//
    எனக்கும் ஏனைய காட்சிகளை விட அவைதான் மிகவும் பாதித்தவை!

    ReplyDelete
  17. >>டிஸ்கி: ஈரானிய சினிமா தவிர்ந்த ஏனைய உலக சினிமாக்களை அலுவலகங்களில், குடுபத்தினரோடு பார்ப்பதைத் தவிர்த்து, தனியாகவே பார்ப்பது நல்லது! அப்புறம் ஏதாவது கிக்கிலிபெக்கிலி (நன்றி: சூப்பர்ஸ்டார், படிக்காதவன்) ஆயிடும் அவ்வளவுதான்!

    hi hi ஹி ஹி

    ReplyDelete
  18. Nice review. i have seen this movie one yr back. was good with gud screen play. the lady will not speak much through out the movie, but her expressions were good.

    ReplyDelete
  19. //நானும் ஒரு ஆர்வத்தில....அதனாலென்ன நீங்க விரிவா எழுதுங்கண்ணே..மோனிக்கா பற்றியும்! :-)// இது வழக்கமா நமக்குள்ள நடக்குறது தானே ஜீ..சோம்பேறித் தனத்தால தான் எழுத்லை..பார்ப்போம்...மோனிக்கா பத்தி எழுதணுமா..ஸ்டில்லு போதும்.எல்லாம் விளங்கிடும்!

    ReplyDelete
  20. விமர்சனம் நல்லா இருக்கு....

    ReplyDelete
  21. சூப்பர் விமர்சனம் பாஸ்...! இந்தப் படத்தைப் பற்றி முன்னாடியே கேள்விப்பட்டிருக்கேன், ஆனா பார்க்கத்தான் முடியல...!

    ReplyDelete
  22. // ஈரானிய சினிமா தவிர்ந்த ஏனைய உலக சினிமாக்களை அலுவலகங்களில், குடுபத்தினரோடு பார்ப்பதைத் தவிர்த்து, தனியாகவே பார்ப்பது நல்லது!//

    சந்தேகம் இல்லை. ஆர்ப்பாட்டமில்லாத, அதிக பின்னணி இசை இல்லாத படங்கள்.

    ReplyDelete
  23. ஹாய் ஜீ...எப்படி இருக்க? இப்போ உடம்பு சரியாய்ட்டா தம்பி? பார்த்து நாளாச்சு ஜீ....

    /ஈரானிய சினிமா தவிர்ந்த ஏனைய உலக சினிமாக்களை அலுவலகங்களில், குடுபத்தினரோடு பார்ப்பதைத் தவிர்த்து, தனியாகவே பார்ப்பது நல்லது! அப்புறம் ஏதாவது கிக்கிலிபெக்கிலி (நன்றி: சூப்பர்ஸ்டார், படிக்காதவன்) ஆயிடும் அவ்வளவுதான்! //

    ஹேய்..இந்த லிஸ்ட் டில் தமிழ் படங்களையும் சேர்த்து கொள்ளவும்...:))

    ReplyDelete
  24. //மெலீனாவாக மோனிகா பெலூசி! //
    ரொம்ப நன்னா புரிஞ்சுடுத்து அம்பி...:))) ஹ ஹ....

    ReplyDelete
  25. ஜீ..உனக்கு இன்டிளில் வோட்டு போடவே முடியலை...ஏதோ தகராறு பண்ணுது...என்னனு பாரேன்...

    ReplyDelete
  26. கடைசிவரை கதைக்காமல் இருக்கும் அந்த சிறுவன் இறுதியல் மார்கெட் சீன் அற்புதம்.. நெஞ்சைத் தொட்ட படம்.. சிறந்த விமர்சனம்..

    ReplyDelete
  27. naan yerkkanave paathutten.. nice movie and please don't see with family..

    ReplyDelete