Saturday, March 5, 2011

வணக்கம் நண்பர்களே!


கடந்த சிலநாட்களாக இடமாற்றம் (திருகோணமலையில்), கடும் உடல்நலக்குறைவு காரணமாக பதிவுலகப் பக்கம் வரமுடியவில்லை.  இடையில் மின்னஞ்சலில் தொடர்புகொண்டு விசாரித்த ஏராளமான (3 பேர் ) அன்புள்ளங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, 

நாங்க எல்லாம் வேலை வெட்டி இல்லாம தான் பதிவெழுதவே வந்தவய்ங்க என்பதை மிக்க மகிழ்ச்சியுடனும், பெருமையுடனும் கூறிக்கொள்ளும் அதேவேளை, தற்போது மீண்டும் வேலை கிடைத்துவிட்டது என்பதை சற்றே மனவருத்தத்துடன் பகிர்ந்துகொள்கிறேன்.

அது ஒரு புதிதாக நிறுவப்பட்ட திட்டப் பணிமனை (Project Office) என்பதால் இன்னும் சரிவர இணையம் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படவில்லை.

நாம வேற அலுவலகத்தில் நுழைந்ததும் நுழையாததுமா ஆர்வக் கோளாறுத்தனமா இணையம் இருக்கான்னு அங்கே இருந்த சிங்கள அக்காவைக் (அலுவலக உதவியாளினி) கேட்க, அவ என்னை ஒருமாதிரியா ஏற இறங்கப் பார்த்து (வந்த உடனேயே எதைக் கேக்குது பாரு! வெளங்கிரும்! - நாம கண்டுக்கல விட்றா விட்றா இதெல்லாம் புதுசா நமக்கு?) மிக விரைவில் என்றார்.

அப்படியே வந்தாலும் ஆணி அதிகம் இருக்கும்போல தோன்றுவதால், சனி ஞாயிறுகளில் வீட்டிலிருந்தே (கொழும்பில்) நண்பர்களின் தளங்களுக்கு வர முடியும் என நினைக்கிறேன். அப்படியே முடிந்தால் நானும் அப்பப்ப ஏதாவது எழுதுவேன்! (அப்பாடா! ஒழிஞ்சாண்டா!)

அப்புறமென்ன நண்பர்களே! வார இறுதிகளில் சந்திக்கிறேன்!  

30 comments:

 1. அப்ப வாராம் வாரம் சனி ஞாயிறுதான் உன் இம்சை இருக்குமா..?

  ReplyDelete
 2. //# கவிதை வீதி # சௌந்தர் said...
  அப்ப வாராம் வாரம் சனி ஞாயிறுதான் உன் இம்சை இருக்குமா..?//

  தொடர்ந்து இருக்காது அப்பப்ப! :-)

  ReplyDelete
 3. ச்சே போச்சே போச்சே!

  ReplyDelete
 4. enna jee..tension pannitta...ok..r u ok now thambi??

  ReplyDelete
 5. உடல் நலனை கவனித்து கொள்ளுங்கள்

  ReplyDelete
 6. அந்த அக்கா மனசுல என்ன நினைச்சுதோ

  ReplyDelete
 7. //விக்கி உலகம் said...
  ச்சே போச்சே போச்சே//
  என்ன போச்சு? எல்லாம் இங்கேயே இருக்கு! :-)

  //ஆனந்தி.. said...
  enna jee..tension pannitta...ok..r u ok now thambi??//
  ம்ம் கொஞ்சம் ஒக்கே!

  //ஆர்.கே.சதீஷ்குமார் said...
  உடல் நலனை கவனித்து கொள்ளுங்கள்//
  நன்றி பாஸ்!
  //அந்த அக்கா மனசுல என்ன நினைச்சுதோ//
  விடுங்க பாஸ்!இதெல்லாம் சகஜம்ல! :-)

  ReplyDelete
 8. முதலில் வேலை கிடைத்தற்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. Get well soon! Take good care of your health. :-)

  ReplyDelete
 10. ஜீ..நானும் ஒரு வாரமா நினைச்சுக்கிட்டே தான் இருந்தேன்..திரும்பி வந்து தகவல் சொன்னதுக்கு நன்றி..உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளவும்..சீக்கிரம் இணைய இணைப்பு கிடைக்க வாழ்த்துகள்!...இனிமே நான் யாரு கூட ஹாலிவுட் படம் பத்தி டிஸ்கஷன் பண்ண..மோனிகா படம் வேற போட்ருக்கீங்க..’மெலீனா’ படத்தை அடிக்கடி பாருங்க..உடம்பு தேறிடும்!

  ReplyDelete
 11. வணக்கம் நண்பரே, இப்போது உடல்நலம் பரவாயில்லையா?

  வேலை கிடைத்ததற்கு வாழ்த்துக்கள் :)

  வேலையை முதலில் கவணியுங்கள் நேரம் கிடைக்குபோது பதிவுலகம் பக்கம் வாருங்கள்

  ReplyDelete
 12. வந்திட்டீங்களா, ரொம்ப நாளா ஆளைக் கானோம்.
  Get well soon! Take good care of your health. :-
  --அதனால கேட்டேன்.

  ReplyDelete
 13. முதலில் வேலைதான் முக்கியம், உடல்நிலையை கவனித்துக் கொள்ளுங்கள் நண்பா

  ReplyDelete
 14. திருமலை எப்படி உள்ளது ஜீ! வேலைகள் எல்லாம் பிடித்திருக்கா!
  aaaa.. Take care Boy

  ReplyDelete
 15. வாழ்த்துக்கள் .take care

  ReplyDelete
 16. //Speed Master said...
  Welcome back take care//

  //Chitra said...
  Get well soon! Take good care of your health. :-)//

  //செங்கோவி said...
  ஜீ..நானும் ஒரு வாரமா நினைச்சுக்கிட்டே தான் இருந்தேன்..திரும்பி வந்து தகவல் சொன்னதுக்கு நன்றி..உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளவும்//

  //மாணவன் said...
  வணக்கம் நண்பரே, இப்போது உடல்நலம் பரவாயில்லையா?//

  //வேடந்தாங்கல் - கருன் said...
  வந்திட்டீங்களா, ரொம்ப நாளா ஆளைக் கானோம்.
  Get well soon! Take good care of your health//

  //இரவு வானம் said...
  முதலில் வேலைதான் முக்கியம், உடல்நிலையை கவனித்துக் கொள்ளுங்கள் நண்பா//

  //shanmugavel said...
  வாழ்த்துக்கள் .take care//

  நன்றி! நண்பர்களே நன்றி!

  ReplyDelete
 17. //செங்கோவி said...
  மோனிகா படம் வேற போட்ருக்கீங்க..’மெலீனா’ படத்தை அடிக்கடி பாருங்க..உடம்பு தேறிடும்//
  ஆகா! இது புதுசா இருக்கே! :-)

  //Jana said...
  திருமலை எப்படி உள்ளது ஜீ! வேலைகள் எல்லாம் பிடித்திருக்கா!
  aaaa.. Take care Boy//
  வேலை ஒக்கே! ......நன்றி! :-)

  ReplyDelete
 18. வேலையிலும் கலக்குங்கள் !

  ReplyDelete
 19. உலகசினிமா பாருங்கள்...
  உயர்ந்தரசனை பெருங்கள்...
  Gigante-XXL காதல்[உருகுவே-2009]

  ReplyDelete
 20. அட ஜீ... நீங்களும் சரியா ?

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.

  ReplyDelete
 21. அப்பா ரொம்ப நிம்மதி!

  ReplyDelete
 22. வேலைகிடைத்ததற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 23. வேலை கிடைச்சதுக்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 24. >>
  நாம வேற அலுவலகத்தில் நுழைந்ததும் நுழையாததுமா ஆர்வக் கோளாறுத்தனமா இணையம் இருக்கான்னு அங்கே இருந்த சிங்கள அக்காவைக்  ஃபோட்டோ ப்ளீஸ்

  ReplyDelete
 25. வார இறுதிகளில் சந்திக்கிறேன்!

  வார இறுதி வந்து விட்டது...பதிவு வரவில்லையே

  ReplyDelete
 26. நலமா ஜீ?
  புதிய பணியில் சாதிக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 27. உடம்பு இப்போ சரியாகிடுச்சுங்களா........? புதிய பணியில் சேர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete

Followers

Powered by Blogger.

Follow by Email

Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |