Monday, February 14, 2011

The Notebook


ஒரு வயது முதிர்ந்த தம்பதி. அந்தக் கணவன் தன் மனைவிக்கு ஒரு Notebook இலுள்ள கதையை வாசித்துக் காட்டுகிறார். அது Noah, Allie என்ற இளம் காதலர்கள் பற்றிய கதை! 

1940 ஆம் ஆண்டு. தனது சம்மர் விடுமுறையைக் கழிக்க பெற்றோருடன் தெற்குக் கரோலினாவிலுள்ள Seabrook கிற்கு வருகிறாள் இளம் பெண் அலி. அங்கு ஒரு கார்னிவெல் கொண்டாட்டத்தில் நோவாவைச் சந்திக்க, படிப்படியாக அது காதலாக மாற, இருவருக்கும் இனிமையான விடுமுறையாகக் கழிகிறது. நோவா ஒரு மரம் வெட்டும் ஆலையில் வேலை செய்கிறான். ஒரு கைவிடப்பட்ட பழைய வீட்டிற்கு அவளை அழைத்துச் செல்லும் நோவா, அவளுக்காக அந்த வீட்டை வாங்கித் திரும்பக்கட்டித் தருவேன் என உறுதியளிக்கிறான்.


அலி- நோவாவின் காதல் அலி யின் பெற்றோருக்குத் தெரியவர, நோவா தங்கள் குடும்பத்திற்கு ஏற்றவன் இல்லை எனவும், அவனை விட்டு விலகிவிடுமாறும் கூற, இதைக்தெரிந்து கொண்ட நோவா அவளை வீட்டு விலகிச் செல்கிறான். அவனுக்கும் அலிக்கும் இடையிலான ஒரு வாக்குவாதத்திற்குப் பின் இருவரும் உறவை முறித்துக் கொள்கிறார்கள்.

விடுமுறை முடிந்து அலி குடும்பம் ஊரைவிட்டுச் சென்றதும், அவளுக்கு ஒரு நாளைக்கொரு கடிதம் வீதம் எழுதுகிறான் நோவா. அவளிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. அவன் கடிதம் எழுதுவதை அவள் அறிந்திருக்கவில்லை. அவளின் தாயாரால் மறைக்கப்படுவதால். சரியாக ஒரு வருடம் கடிதமெழுதி, பதிலில்லாததால், நிரந்தரமாகப் பிரிவதாக அடுத்த கடிதமும் எழுதுகிறான். 366 கடிதங்கள். பதில் இல்லை. நோவா தனது கிராமத்தை விட்டு அட்லாண்டா செல்கிறான்.


ஒருநாள் வேலைத்தளத்தில், பேர்ல்ஹார்பர் செய்தியைக்கேட்கும் நோவா இராணுவத்தில் சேர்ந்து உலகப்போரில் பங்குகொள்கிறான். அதேநேரத்தில் காலேஜில் படிக்கும் அலி, மருத்துவத்தாதியாக வோலண்டியராக சேர்ந்து காயமுற்ற இராணுவவீரர்களை பராமரிக்க, அங்கே Lon ஐச் சந்திக்கிறாள். Lon இன் இராணுவத் தரம், குடும்ப நிலை எல்லாம் தங்களுக்கு ஏற்றதாக இருக்க, அலியின் பெற்றோரால் இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்படுகிறது.


இதேவேளை ஊர்திரும்பிய நோவா தன் தந்தையின் உதவியுடன் அந்தப் பழைய வீட்டை வாங்கி திருத்தி புதிதாக்கிவிடுகிறான். அவனுக்கு அலிக்கு திருமணம் நிச்சயிக்கப் பட்டது தெரிந்திருந்தது. இருந்தும் அவள் திரும்பி வருவாள் என நம்புகிறான். வீட்டை விலைக்கு கேட்டுவரும் ஒருவருக்கும் விற்கவில்லை. அவளுக்காகக் காத்திருக்கிறான். தற்செயலாக பத்திரிகையில் அந்த வீட்டைப் பார்க்கும் அலி, நோவாவைத் தேடி வருகிறாள். பின்பு என்னவாகிறது... என்பது மீதிக்கதை.


அந்த வயது முதிர்ந்த பெண் தான் அலி. அவளால் தன்னை, தனது குடும்பத்தாரை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அவளது நினைவைக் கொண்டுவரவே ஒவ்வொருநாளும் அந்த புத்தகத்தை வாசிக்கிறார் நோவா. நோவா தூங்கியதும் அலி ஒவ்வொரு முறையும் அதில் எழுதி வைக்கிறாள் 'Read this to me, and I'll comeback to you'.  

2004 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த ஹாலிவுட் படம், Nicholas Sparks எழுதிய Notebook நாவலை அடிப்படையாகக் கொண்டது. 
   
The Notebook | வானம் தாண்டிய சிறகுகள்..

20 comments:

சி.பி.செந்தில்குமார் said...

போடு முத வெட்டை

சி.பி.செந்தில்குமார் said...

படத்துல சீன் இல்லைன்னாலும் நீங்களாவது குளு குளு ஸ்டில் போட்டீங்களே

விக்கி உலகம் said...

நல்லாத்தான் சொல்லி இருக்கீங்க

sakthistudycentre-கருன் said...

கவனிப்புத்தன்மை அபாரம் அதை எழுத்தில் கச்சிதமாக கொண்டு வந்ததற்கு பாராட்டுக்கள் ...

ம.தி.சுதா said...

கலக்குறிங்களே ஜீ... தமிழில் ஒர ஹொலிவுட் களஞ்சியம் கண்டேனனே...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..

ஆனந்தி.. said...

ஜீ..இந்த படத்தின் பாதிப்பில் ஒரு தமிழ் படம் வந்திருக்குன்னு நினைக்கிறேன்...பாண்டியராஜன் பையன் தான் ஹீரோ..கார்த்திகா நாயகி...படம் பேரு தெரியல..சட்டுன்னு இந்த கதை படிச்சுட்டு அந்த தமிழ் படம் தான் நினைவில்..அட பாவிங்களா ..இதையும் சுட்டுடானுங்களா:))

சமுத்ரா said...

good one Jee

MANO நாஞ்சில் மனோ said...

படங்களை பாத்து ஒரே கிளுகிளுப்பா இருக்கே மக்கா.....

தோழி பிரஷா said...

உங்க திறமைக்கு நாமெல்லாம். ரொம்ப தூரம்... கலக்குங்கள்.

நா.மணிவண்ணன் said...

ஜி சூப்பர் விமர்சனம் , ஆனந்தி சகோ கூறி இருப்பது போல் இதோ போல் தமிழ் படம் வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்

நமது இயக்குனர்கள் காபி மன்னர்கள்

ஆதவா said...

காதலர்தினத்துக்கு சரியான படத்தை போட்டிருக்கீங்க.. ஜீ.
கலக்கல்...
காதலர்தின வாழ்த்துக்கள்.

கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் சரிசெய்யவும்!!

தமிழரசி said...

காதலர்தினத்துக்கு சரியான படத்தை போட்டிருக்கீங்க.. ஜீ

காதலர்தின வாழ்த்துக்கள்.

பார்வையாளன் said...

இது போல அவ்வப்போது எழுதுங்கள் . நன்றாக இருக்கிறது

Jana said...

ஆனந்தி சொன்னது சரியாகத்தான் இருக்கு. எனக்கும் வாசிக்கும்பொது அதே பொறி தட்டுகின்றது. நல்ல பார்வை ஜீ.

கார்த்தி said...

என்னெண்டு உங்களுக்கு மட்டும் பார்த்த படங்களின் கதைகளை நீண்ட நாளின் பின்னும் மறக்காம ஞாபகப்படுதத முடிகிறது. எனக்கு தமிழ் படங்களே மறந்து விடுகிறது!

மாத்தி யோசி said...

happy lovers day wishes to uma.this is a nice post.thank you so much.

கனாக்காதலன் said...

படத்திற்குப படம் உங்களின் அவதானிப்பு ஆச்சர்யமளிக்கிறது. அருமை ஜி.

செங்கோவி said...

காதலர் தின ஸ்பெஷல் படமா?..ம்ம்..ஸ்டில்ஸ் சூப்பர்..இந்தப் ப்டத்தை விட 50 First dates சூப்பர் இல்லையா!

Anonymous said...

Lofty bye, considerate soul mate :)

Anonymous said...

Obedient bye, genial soul mate :)