Tuesday, February 1, 2011

தமிழக மீனவர்களுடன் ராகுல்...



ஏழைகளின் குறைகளைத் தெரிந்து கொள்ள, துன்பத்தை அறிய, எளிமையைப் பறை சாற்ற இப்படி என்னென்னமோ காரணத்துக்காக ஏழைகளின் குடிசையில் ஒருநாள் வாழ்க்கை என்ற அரசியல் 'ஸ்டண்ட்' களை அடித்துவந்த  ராகுல் ஒருமுறை தமிழக மீனவர்களுடன் ஓரிரவு மீன்பிடிக்கப் போகலாமே! (தப்பி வந்தா, தேர்தல் சமயத்தில உதவும்தானே!) 

******************************

என்னைத்தூக்கிக் கடலில் போடுங்கள் கடலில் போடுங்கள் என்று ரொம்பக் கெஞ்சுகிறாரே தமிழினத் தலைவர்,  பாவம் கடலில் எல்லாம் போடவேணாம். அப்படியே குண்டுக்கட்டாகக் கட்டித் தூக்கிக்கொண்டு ஒரு கடற்பயணம் செல்லலாம்! (குடும்பத்தையே அழைத்துச் சென்றால்?)

ஆனால் தலைவரை அழைத்தாலே வரக்கூடும்! ஈழத்தமிழருக்காக மூன்றுமணி நேரம் உண்ணாவிரதம் இருந்து உண்ணாவிரதத்துக்கே 'ஒரு தனி வரைவிலக்கணம்' கொடுத்தவர் தன் சொந்த மண்ணுக்காக இதுகூடச் செய்யமாட்டாரா?



காய்கறி விற்கும் இராணுவம் - கொழும்பு


கொழும்பில் சிலபல பகுதிகளில் இராணுவத்தினர் காய்கறி விற்கிறார்கள்! 
சர்வதேசத்தில் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெயரை மாற்றி தாம் மக்களின் நண்பர்கள், நலன்விரும்பிகள், சேவகர்கள் (சிங்கள மக்களுக்கு எப்போதும் அப்படித்தானே!) என்று வெளியுலகிற்கு 'ஸ்டண்ட்?'


ஆனால் ஒன்று! வெளியில் சந்தையில் வாங்கும் காய்கறிகளை விட நல்ல தரமாகவும், புதிதாகவும், அதேநேரம் பாதிவிலைக்கும் கிடைக்கிறதாம். நீண்ட வரிசையில் கூட்டம் சும்மா அள்ளுது!

******************************

சிலநாட்களாக காலையில் ஏழு மணியளவில் 'ஹெலிகாப்டர்' ஒன்று சுற்றிக் கொண்டிருக்கிறது! யாரோ பழகிறார்களோ(?!) என்று நினைத்தேன். அப்புறம்தான் தெரிஞ்சுது போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நடவடிக்கையாக 'டிராபிக் போலீஸ்' சுத்துறாங்களாம்! பார்ரா!! (நல்ல காரியத்துக்கு யூஸ் பண்ணினா சரிதான்!)  


  

23 comments:

  1. ராகுல் ஒருமுறை தமிழக மீனவர்களுடன் ஓரிரவு மீன்பிடிக்கப் போகலாமே!// இது நல்ல ஐடியாவா இருக்கே...
    அப்பதான் அதன் வலி தெரியும்..

    ReplyDelete
  2. முதல்வர் இப்போ தொகுதி பங்கீட்டில் மிகவும் பிசியாக உள்ளார் ..
    அவரது உடன் பிறப்புகள் யாரேனும் வரக்கூடுமா என்று எதிர் பார்கிறேன் ...

    ReplyDelete
  3. ராகுலின் நடிப்புக்கு நிறைய விருதுகள் வழங்கி கவுரவ படுத்துமாறு கேட்டுகொள்கிறேன்

    ReplyDelete
  4. என்னங்க ஜீ இதையெல்லாம் படிச்சி நம்ம தலைவர்கள் திருந்திட்டா அப்புறம் நம்ம பாடு திண்டாட்டம் தான் போங்க..

    ReplyDelete
  5. 'ஒரு தனி வரைவிலக்கணம்' கொடுத்தவர் தன் சொந்த மண்ணுக்காக இதுகூடச் செய்யமாட்டாரா?///

    ,முதல்வர்கள் மீட்டிங்கில் " தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிறது என்று பேருவகையுடன் கூறிகொள்கிறேன் இந்த சபையில் " என்று கூறி யுள்ளார்

    அவரு செய்யாமல் வேறு யாரு செய்யமுடியும்

    ReplyDelete
  6. //சிலநாட்களாக காலையில் ஏழு மணியளவில் 'ஹெலிகாப்டர்' ஒன்று சுற்றிக் கொண்டிருக்கிறது! யாரோ பழகிறார்களோ(?!) என்று நினைத்தேன். அப்புறம்தான் தெரிஞ்சுது போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நடவடிக்கையாக 'டிராபிக் போலீஸ்' சுத்துறாங்களாம்! பார்ரா!! (நல்ல காரியத்துக்கு யூஸ் பண்ணினா சரிதான்!)


    வாட் எந்த ஊர்ல??

    ReplyDelete
  7. மஹாத்தையா முருங்கா கிலோ ஏகக் கீயத? மகாத்தயாகே அழுத் வெட கொஹமத ? ஹி... ஹி... சிங்களம் கதைச்சு ரொம்ப நாளாச்சு!

    ReplyDelete
  8. அதான, ராகுல்ஜிய ஒருமுறை கடலுக்கு அனுப்பி அந்தாளோட ..... கழட்டனும், அப்பத்தான் புத்தி வரும் ...

    ReplyDelete
  9. ஏங்க காமெடி பண்றீங்க, ராகுலாவது வரதாவது, கலைஞ்சர் கடல்ல காலை வைக்கிறதுக்கே நடுங்கிறாராம். (அட, பயமில்லங்க. வயசாயிடுச்சில்ல)

    ReplyDelete
  10. தகவல்களுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  11. ராகுல் ஒருமுறை தமிழக மீனவர்களுடன் ஓரிரவு மீன்பிடிக்கப் போகலாமே! (தப்பி வந்தா, தேர்தல் சமயத்தில உதவும்தானே!)/////

    நல்ல ஐடியா! தலைவரிடம் சொல்லியனுப்புவோம்!

    ReplyDelete
  12. தமிழக மீனவர்களுடன் ராகுல்...


    நான் உண்மை என்று நினைத்துவிட்டேன்!

    ReplyDelete
  13. சரியான ஐடியா...தூள் கிளப்பிட்டீங்க..சிங்கள ராணுவத்தை வெளிப்படையாக விமர்சிக்கிறீர்களே..அங்கே அவ்வளவு சுதந்திரம் வந்துவிட்டதா..பார்த்துக்கோங்க பாஸ்!

    ReplyDelete
  14. // போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நடவடிக்கையாக 'டிராபிக் போலீஸ்' சுத்துறாங்களாம்! //

    நம்ம சென்னையிலா...

    ReplyDelete
  15. புத்திசாலித்தனமான டைட்டில், அறிவுபூர்வமான எழுத்து, அங்கத நடை

    ReplyDelete
  16. தமிழக மீனவர்களுடன் ராகுல்...


    நான் உண்மை என்று நினைத்துவிட்டேன்!

    //

    நானும் தான்

    ReplyDelete
  17. @sakthistudycentre-கருன்
    @அரசன்
    @தமிழரசி
    @கனாக்காதலன்
    @நா.மணிவண்ணன்
    @மாத்தி யோசி
    @இரவு வானம்
    @MANO நாஞ்சில் மனோ
    @ஆதவா
    @Chitra
    @வைகை
    @சி.பி.செந்தில்குமார்

    நன்றி!

    //Speed Master said...
    வாட் எந்த ஊர்ல?//
    //Philosophy Prabhakaran said
    நம்ம சென்னையிலா..//
    கொழும்பில்.

    //THOPPITHOPPI said..,
    //வெறும்பய said...
    நான் உண்மை என்று நினைத்துவிட்டேன்!//
    அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்கீங்களே? :-)

    //செங்கோவி said...
    ..பார்த்துக்கோங்க பாஸ்!//
    பீதியைக் கிளப்புறீங்களே பாஸ்! :-)

    ReplyDelete
  18. முதல் பத்திகள் செம நக்கல்ஸ்..ரெண்டாவது பத்திகள் ...என்ன ஜீ...நிருபன் பதிவில் அதிக விலைக்கு அங்கே காய்கறிகள் விக்கிறதா படிச்சேன்...இப்போ பரவா இல்லையா? மூணாவது பதிவில்..சில நிகழ்வுகளை தெரிந்து கொண்டேன்...

    ReplyDelete
  19. உங்களது பதிவுகள் நன்றாக உள்ளது

    ReplyDelete
  20. என்னைத்தூக்கிக் கடலில் போடுங்கள்...

    கடலையும் வித்து காசுபண்ணிக்காட்டிடுவாரு!!!

    ReplyDelete
  21. அநியாயமா ஒரு குடும்பத்த நீங்க கடலுக்கு கூட்டி போயி அப்புறம் அங்க இருக்க ஜீவனுங்க சாவுக்கு காரணமாயிராதிங்க இது ரொம்ப சீரியஸ் மேட்டர் சிரிக்காதிங்க ப்ளீஸ்!!

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...