Sunday, January 23, 2011

இரண்டு கோப்பை மது!




இந்த நொடியினை

முழுமையாய் 

உணர்ந்து வாழ்வதென்பது 

என்னளவில் எப்போதுமே

சாத்தியமாவதில்லை!

எப்போதாவது

அந்தக்கணங்களில்

எனது இருப்பை உணர்ந்து 

கொள்ள முடிகிறது  

இரண்டுகோப்பை மதுவில்!



காலம்

இறந்தகால வலிகளின்

நினைவுகளோடும்

எதிர்கால ஏக்கங்களின்

கனவுகளோடும்


கவனிக்கப்படாமலே 

கடந்து செல்கிறது 

நிகழ்காலம்!




30 comments:

  1. இரண்டு கவிதைகளும் அருமை! முதல் கவிதை பொய்யாக இருக்க எனது வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  2. ஐயையோ வட போச்சே! ம்.... பரவாய் இல்லை அடுத்த வாட்டி ட்ரை பண்ணுகிறேன்!

    ReplyDelete
  3. கவிதையில பின்னீட்டீங்க போங்க...

    ReplyDelete
  4. சரக்கு பற்றிய கவிதை நன்று...

    ReplyDelete
  5. ஏன் ஜி, யாரு உங்க கையில மது கிளாஸ் தூக்க வைச்சது?

    ReplyDelete
  6. எப்போதாவதுதானே கிண்ணம் தூக்கிறீங்க???? எதிர்கால ஏக்கத்தையும் விளக்கமாக சொல்லலாமே!!
    கவிதை நல்லாயிருக்கிறது. கெண்டினியு....

    ReplyDelete
  7. //கவனிக்கப்படாமலே

    கடந்து செல்கிறது

    நிகழ்காலம்!//

    அருமை...அருமை...!

    ReplyDelete
  8. இரண்டாவது மிக அருமை.

    ReplyDelete
  9. கலக்குறிங்க ஜீ.....

    ReplyDelete
  10. தம்பி உங்களுக்கு கவிதை பிரமாதமாக வருகிறது ... நிறைய எழுதுங்கள்...

    இரண்டு கவிதைகளுக்கும் என் பாராட்டுக்கள் ...

    ReplyDelete
  11. இரண்டு கோப்பை மதுவில்....
    கவனிக்கப்படாமலேயே செல்கிறது நிகழ்காலம்...
    இரண்டு கவிதைகளின் ஈற்றடியை சேர்த்தால் கூட
    ஒரு நல்ல செய்தி கிடைக்கிறது.
    ..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. //எப்போதாவது

    அந்தக்கணங்களில்

    எனது இருப்பை உணர்ந்து

    கொள்ள முடிகிறது

    இரண்டுகோப்பை மதுவில்!//

    ம்ம்ம்ம் நமக்கு சரக்கு பழக்கமில்லையே ஜி..

    ReplyDelete
  13. இரண்டு கோப்பைகளுக்கிடையே கடந்து போகிறதோ காலம் ?

    ReplyDelete
  14. ஓஷோவின் நூல் படித்த உணர்வு..

    ReplyDelete
  15. காலம் - எதார்த்தம்!

    ReplyDelete
  16. பிரபா ஒயின்ஷாப் திறப்புவிழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்:
    http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_24.html

    ReplyDelete
  17. //இரண்டு கவிதைகளும் அருமை! முதல் கவிதை பொய்யாக இருக்க எனது வாழ்த்துக்கள்!!//

    ராஜீவ் சொன்னதையே நானும் நினைச்சேன்...உனக்கு கவிதை...கதை...விமர்சனம்னு எல்லாமே நல்லா professional தரமா வருது ஜீ..கீப் இட் அப்...

    ReplyDelete
  18. ஜி .இரண்டு கவிதையும் சூப்பர் . அதுவும் இரண்டாவுது கவிதையில் 'கடந்து செல்கிறது நிகழ்காலம் ' வரி அருமையோ அருமை

    ReplyDelete
  19. அருமையான கவி வரிகள் நண்பா அருமையான கவி வரிகள் நண்பா

    ReplyDelete
  20. அருமை.. தொடர்ந்து கவிதை எழுதுங்கள் ஜீ....

    ReplyDelete
  21. இரண்டு கவிதைகளுமே அற்புதமான கருவோட இருக்கு ஜீ !

    ReplyDelete
  22. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க....

    இதுக்கு முன்னாடி பத்திரிக்கையில் எழுதிய அனுபவம் உண்டா?

    ReplyDelete
  23. //கவனிக்கப்படாமலே

    கடந்து செல்கிறது

    நிகழ்காலம்!//

    super

    ReplyDelete
  24. ரெண்டு கவிதையும் நல்லா இருக்கு.. முதல் கவிதையில்...

    உங்கள் இருப்பை உணர...
    மதுக் கோப்பை எடுக்காமல் இருக்கு வாழ்த்துக்கள்..! :-))

    ரெண்டாவது காலம் கவிதை...

    வலியின் நினைவு..
    ஏக்கத்தின் கனவு..
    கடந்து செல்லுது நிகழ்வு..

    சூப்பர்.. ரொம்ப நல்லா இருக்குங்க..

    ReplyDelete
  25. வருகை தாருங்கள்...!
    வாசித்துப் பாருங்கள்...!
    பங்கு பெறுங்கள்...!!

    என்றும் உங்களுக்காக
    "நந்தலாலா இணைய இதழ்"

    ReplyDelete
  26. மிக அருமையாக இருக்கிறது கவிதைகள்.

    ரசித்தேன் !

    ReplyDelete
  27. kavithai enna villa endu kekura namalaye kaalachuputeengale Jee. second is my favourite.

    ReplyDelete