Sunday, January 23, 2011

இரண்டு கோப்பை மது!




இந்த நொடியினை


முழுமையாய் 

உணர்ந்து வாழ்வதென்பது 

என்னளவில் எப்போதுமே

சாத்தியமாவதில்லை!

எப்போதாவது

அந்தக்கணங்களில்

எனது இருப்பை உணர்ந்து 

கொள்ள முடிகிறது  

இரண்டுகோப்பை மதுவில்!



காலம்

இறந்தகால வலிகளின்

நினைவுகளோடும்

எதிர்கால ஏக்கங்களின்

கனவுகளோடும்


கவனிக்கப்படாமலே 

கடந்து செல்கிறது 

நிகழ்காலம்!




31 Comments:

கனாக்காதலன் said...

Very nice ! Keep writing more..

மாத்தி யோசி said...

வட?

மாத்தி யோசி said...

இரண்டு கவிதைகளும் அருமை! முதல் கவிதை பொய்யாக இருக்க எனது வாழ்த்துக்கள்!!

மாத்தி யோசி said...

ஐயையோ வட போச்சே! ம்.... பரவாய் இல்லை அடுத்த வாட்டி ட்ரை பண்ணுகிறேன்!

“நிலவின்” ஜனகன் said...

கவிதையில பின்னீட்டீங்க போங்க...

Philosophy Prabhakaran said...

சரக்கு பற்றிய கவிதை நன்று...

KANA VARO said...

ஏன் ஜி, யாரு உங்க கையில மது கிளாஸ் தூக்க வைச்சது?

கார்த்தி said...

எப்போதாவதுதானே கிண்ணம் தூக்கிறீங்க???? எதிர்கால ஏக்கத்தையும் விளக்கமாக சொல்லலாமே!!
கவிதை நல்லாயிருக்கிறது. கெண்டினியு....

Sathish Kumar said...

//கவனிக்கப்படாமலே

கடந்து செல்கிறது

நிகழ்காலம்!//

அருமை...அருமை...!

பலே பிரபு said...

இரண்டாவது மிக அருமை.

Jana said...

கலக்குறிங்க ஜீ.....

கே.ஆர்.பி.செந்தில் said...

தம்பி உங்களுக்கு கவிதை பிரமாதமாக வருகிறது ... நிறைய எழுதுங்கள்...

இரண்டு கவிதைகளுக்கும் என் பாராட்டுக்கள் ...

Ramani said...

இரண்டு கோப்பை மதுவில்....
கவனிக்கப்படாமலேயே செல்கிறது நிகழ்காலம்...
இரண்டு கவிதைகளின் ஈற்றடியை சேர்த்தால் கூட
ஒரு நல்ல செய்தி கிடைக்கிறது.
..வாழ்த்துக்கள்

தமிழரசி said...

//எப்போதாவது

அந்தக்கணங்களில்

எனது இருப்பை உணர்ந்து

கொள்ள முடிகிறது

இரண்டுகோப்பை மதுவில்!//

ம்ம்ம்ம் நமக்கு சரக்கு பழக்கமில்லையே ஜி..

சிவகுமாரன் said...

இரண்டு கோப்பைகளுக்கிடையே கடந்து போகிறதோ காலம் ?

செங்கோவி said...

ஓஷோவின் நூல் படித்த உணர்வு..

Chitra said...

காலம் - எதார்த்தம்!

Philosophy Prabhakaran said...

பிரபா ஒயின்ஷாப் திறப்புவிழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்:
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_24.html

ஆனந்தி.. said...

//இரண்டு கவிதைகளும் அருமை! முதல் கவிதை பொய்யாக இருக்க எனது வாழ்த்துக்கள்!!//

ராஜீவ் சொன்னதையே நானும் நினைச்சேன்...உனக்கு கவிதை...கதை...விமர்சனம்னு எல்லாமே நல்லா professional தரமா வருது ஜீ..கீப் இட் அப்...

வெறும்பய said...

இரண்டும் அருமை..

நா.மணிவண்ணன் said...

ஜி .இரண்டு கவிதையும் சூப்பர் . அதுவும் இரண்டாவுது கவிதையில் 'கடந்து செல்கிறது நிகழ்காலம் ' வரி அருமையோ அருமை

FARHAN said...

அருமையான கவி வரிகள் நண்பா அருமையான கவி வரிகள் நண்பா

தோழி பிரஷா said...

அருமை.. தொடர்ந்து கவிதை எழுதுங்கள் ஜீ....

ஹேமா said...

இரண்டு கவிதைகளுமே அற்புதமான கருவோட இருக்கு ஜீ !

ஆமினா said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க....

இதுக்கு முன்னாடி பத்திரிக்கையில் எழுதிய அனுபவம் உண்டா?

roshaniee said...

//கவனிக்கப்படாமலே

கடந்து செல்கிறது

நிகழ்காலம்!//

super

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ரெண்டு கவிதையும் நல்லா இருக்கு.. முதல் கவிதையில்...

உங்கள் இருப்பை உணர...
மதுக் கோப்பை எடுக்காமல் இருக்கு வாழ்த்துக்கள்..! :-))

ரெண்டாவது காலம் கவிதை...

வலியின் நினைவு..
ஏக்கத்தின் கனவு..
கடந்து செல்லுது நிகழ்வு..

சூப்பர்.. ரொம்ப நல்லா இருக்குங்க..

"நந்தலாலா இணைய இதழ்" said...

வருகை தாருங்கள்...!
வாசித்துப் பாருங்கள்...!
பங்கு பெறுங்கள்...!!

என்றும் உங்களுக்காக
"நந்தலாலா இணைய இதழ்"

ரஹீம் கஸாலி said...

present sir

Kousalya said...

மிக அருமையாக இருக்கிறது கவிதைகள்.

ரசித்தேன் !

®theep said...

kavithai enna villa endu kekura namalaye kaalachuputeengale Jee. second is my favourite.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...