Friday, January 7, 2011

மன்மதன் அம்பு!


நாலு நாளைக்கு முன், பார்த்தி 'மன்மதன் அம்பு' பார்க்க அழைத்தான். நான் பல பதிவுகளை படித்திருந்ததால் மறுக்க, அவன் எனது புத்தாண்டு தீர்மானங்கள் பதிவைப்படித்து விட்டிருந்தான். இதையெல்லாம் என்ஜாய் பண்ணாட்டி, அப்புறம் எப்பிடி மாற்றம் வரும்னு செண்டிமெண்ட்டா பிளாக்மெயில் பண்ண நான், பார்த்தி, இன்னொரு நண்பன் கிளம்பிட்டோம்!

ஏண்டா இந்தத் தியேட்டர்? நான் கேட்க, எங்க ஏரியால இங்க மட்டும் தான் ஓடுது. (என்ன கொடுமை தலைவா?)
2.30 ஷோவுக்கு 2.25 க்கு சாவகாசமா போறமே 'சீட்' பிரச்சினையாய் இருக்குமோ? 
அடுத்த கவலையுடன் உள்ளே போக....அரங்கு நிறைந்த காலி இருக்கைகள்! 
படம் தொடங்கும்போது ஒரு தரம் திரும்பிப் பார்த்து, 'முப்பது பேர் இருப்பாங்கல்ல?'

பொதுவாக எனக்குப் பிடித்த படங்கள் பலவற்றை (கமல் படங்கள் உட்பட) நான் தியேட்டரில் பார்த்தது குறைவு (அதில் ஒரு சந்தோஷம் இருந்தாலும்). 
எல்லாமே DVD யில் தான். அதற்காக பல நாட்கள் காத்திருந்திருக்கிறேன். எனக்குத் தனிமையில், இரைச்சலில்லாமல் பார்ப்பதுதான் அதிகம் பிடிக்கும்!

நல்ல வேளை! தியேட்டர்ல எந்தக் கூச்சல் இரைச்சலும் இல்ல......ஆனா கொடுமைய பாருங்க! எல்லா இரைச்சலும் படத்துக்குள்ளதான்!

அதிகப்படியான இங்க்லீஷ் வசனங்கள், தெளிவில்லாத தமிழ் வசனங்கள் அப்டீன்னு பலபேர் சொன்னாங்க....ஆனா சில வசனங்கள் தமிழா, இங்க்லீஷான்னே புரியல!..ஒரு வேளை தியேட்டர் தான் அப்செட்டோ?

கதை - எவ்ளோ பெரிய கப்பல்! சூப்பர்! (நன்றி உதயநிதி!)
லைவ் சவுண்ட் - ஆமா, எதுக்கு சவுண்டை மட்டும் யதார்த்தாமா வச்சு?

நமக்கு வாய்த்திருக்கும் மாதவன் மிகுந்த திறமைசாலி ஆனால், நல்ல படங்கள்தான் வாய்ப்பதில்லை. கலக்கலான, சிம்பிளான நடிப்பு! 

சில இடங்களில் சாதாரண டிஜிட்டல் கமெராவில் எடுத்தது போல காட்சிகள், குறிப்பா த்ரிஷா-சங்கீதா. மேக்கப் போடலையா? போட்டால் சங்கீதா த்ரிஷாவைவிட அழகாக இருக்கக் கூடுமோ? என்ற ஆழ்ந்த சிந்தனை தோன்றியது (ரொம்ப முக்கியம்!)
ஆனாலும் ஒளிப்பதிவு பளிச்சிடும் இடங்கள் சங்கீதாவின் பரு முகத்தில்! த்ரிஷாவின் டாட்டூ....!

ஒரு நல்ல படம் பார்த்துக்கொண்டிருப்பவர்களின் கவனத்தை வேறெதிலும் திரும்ப விடாது அப்படியே ஈர்த்துக்......ரெண்டு சீட் தள்ளி ஒரு ஜோடி, கூட்டம் வராதுன்னு நம்ம்ம்பி... வந்திருப்பாங்களோ, நாம வந்து இருந்து தொலைச்சிட்டோம்!

ஒரு பாட்டுக்கு கமல் ஆடுவாரே ஒரு ஆட்டம்! செம்ம கலக்கல் தலைவா!
(முன்சீட்டில் ஒரு குழந்தை பயந்து போய் அழத் தொடங்கிவிட்டது!)
என்னா டான்ஸ்! எனக்குப் புல்லரிச்சுப் போச்சு! ( எனக்கு மட்டும்தானா? சுற்றுமுற்றும் பார்த்ததில் ஒருவர் தீவிரமாக சொறிந்து கொண்டிருந்தார்...ரைட்டு!)

படத்தில் வரும் இலங்கைத் தமிழர் தெனாலி கமலைப் போலவே வாயைப் பிளந்து பிளந்து, லூசுத்தனமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்! ஆமா, இலங்கைத் தமிழர் என்றால் அப்படியா? 

அமெரிக்கா,மத்திய கிழக்கு தவிர்ந்த உலக நாடுகளில் பெரும்பான்மையான தமிழ் சினிமா வியாபாரம், நட்சத்திரக் கலை நிகழ்ச்சிகள் இலங்கைத் தமிழரைக் குறிவைத்தே! அதனால்தான் சினிமாப் பைத்தியங்களாகக் காட்டுகின்றனரோ?

நீலவானம் பாடலுக்கு தலைவர் நீ...ள....மா...க...இழுக்க, எனக்கு வாய் வலிச்சிடுச்சு! 
அந்தப் பாடலுக்கான உழைப்பு, திட்டமிடல் அபாரம்! அருமையான காட்சியமைப்பு!

கமல் சில காட்சிகளில் நெகிழ வைத்தாலும், கஷ்டப்பட்டு நடிக்கும் கமலை, எந்தக் கஷ்டமுமில்லாமல் சிம்பிளாக மாதவனும், சங்கீதாவும் 'ஓவர்டேக்' பண்ணுகிறார்கள்!

படத்தின் இறுதிக்காட்சியில் மாதவன், சங்கீதா 'டைட்டானிக்' படத்தில் வரும் பிரபல காட்சி போல கையை விரித்துக் கொண்டு நிற்பார்கள்!
இதுதான் மிக முக்கியமான சீன்! இது ஒரு குறியீடு! (இது கே.எஸ். ரவிக்குமாருக்கே தெரியாது!) - பெரிய கப்பல்ல வச்சு படமெடுத்தால் மட்டும் அது 'டைட்டானிக்' ஆகாது! கதை, காட்சியமைப்புத்தான் முக்கியம்!

எனக்கு என்னவோ படம் பார்த்தது சந்தோஷமாகத்தான் இருந்தது! பார்த்திக்கு எப்படியோ? (அவன்தானே 'டிக்கெட்' எடுத்தான்!)

காத்திருப்போம் 'தலைவன் இருக்கிறான்'க்காக!
நாங்கள் உதயநிதி கடைசி நேரத்தில், படத்தைக் கைமாத்திட்டு 'கிரேட் எஸ்கேப்பான' மாதிரி இல்லை, இறுதிவரை கூடவே வருவோம் தலைவா! 

இந்தப் பாடலைப் பாருங்கள். இது 'நீல வானத்துக்கு' ஒரு சின்ன இன்ஸ்பிரேஷனாக மட்டுமே இருந்திருக்கும்! இது ஒரு சிம்பிளான பாடல், நீலவானத்தோடு ஒப்பிடுகையில்! 

 


28 comments:

  1. தமிழ்மணம் வேலை செய்யவில்லையா ஊட்டு போட முடியவில்லை ..........

    ReplyDelete
  2. வடைய குடுங்கப்பா ...............

    ReplyDelete
  3. //நாங்கள் உதயநிதி கடைசி நேரத்தில், படத்தைக் கைமாத்திட்டு 'கிரேட் எஸ்கேப்பான' மாதிரி இல்லை, இறுதிவரை கூடவே வருவோம் தலைவா!//...ஹா...ஹா..செமக் காமெடி பாஸ்.

    ReplyDelete
  4. அம்பு பல பேருக்கு செம்பு

    ReplyDelete
  5. //எனக்கு மட்டும்தானா? சுற்றுமுற்றும் பார்த்ததில் ஒருவர் தீவிரமாக சொறிந்து கொண்டிருந்தார்...ரைட்டு!//

    ஹா...ஹா...ஹா...!
    எல்லாம் சேர்ந்து தலைவர் படத்த இந்த கொத்து கொத்துரீங்கலே பாஸ்...!

    ReplyDelete
  6. #தியேட்டர்ல எந்தக் கூச்சல் இரைச்சலும் இல்ல......ஆனா கொடுமைய பாருங்க! எல்லா இரைச்சலும் படத்துக்குள்ளதான்!#


    ஹா ஹா ஹா.....எப்படிங்க இப்படிலாம்...

    ReplyDelete
  7. இந்தப் பாடலைப் பாருங்கள். இது 'நீல வானத்துக்கு' ஒரு சின்ன இன்ஸ்பிரேஷனாக மட்டுமே இருந்திருக்கும்! இது ஒரு சிம்பிளான பாடல், நீலவானத்தோடு ஒப்பிடுகையில்!


    .....மாப்பு ...... வச்சுட்டியே ஆப்பு!

    ReplyDelete
  8. நாங்களும் படம் பார்க்க போட்டு ஏன் போனம் என்ற சலிப்போடு திரும்பினம்...
    ஜீ நீங்கள் எழுதி இருக்கும் விதம் சுவாரிசியமாக இருக்கு வாசிக்க..

    ReplyDelete
  9. //அஞ்சா சிங்கம் said...
    வடைய குடுங்கப்பா ...//
    புடிங்க!

    //செங்கோவி said...
    ...ஹா...ஹா..செமக் காமெடி பாஸ்//
    என்னையா சொல்றீங்க? :-)

    //Speed Master said...
    அம்பு பல பேருக்கு செம்பு//
    :-)

    //Sathish Kumar said...
    ஹா...ஹா...ஹா...!
    எல்லாம் சேர்ந்து தலைவர் படத்த இந்த கொத்து கொத்துரீங்கலே பாஸ்...!//
    எங்களுக்கு மட்டும் என்ன ஆசையா? :-)

    //ஹா ஹா ஹா.....எப்படிங்க இப்படிலாம்...//
    அதாங்க எனக்கும் தெரியல!! :-)

    ReplyDelete
  10. //Chitra said...
    இந்தப் பாடலைப் பாருங்கள். இது 'நீல வானத்துக்கு' ஒரு சின்ன இன்ஸ்பிரேஷனாக மட்டுமே இருந்திருக்கும்! இது ஒரு சிம்பிளான பாடல், நீலவானத்தோடு ஒப்பிடுகையில்!

    .....மாப்பு ...... வச்சுட்டியே ஆப்பு!//
    அய்யய்யோ அப்பிடியெல்லாம் இல்லீங்கோ! சும்மா! :-)

    //தோழி பிரஷா said...
    நாங்களும் படம் பார்க்க போட்டு ஏன் போனம் என்ற சலிப்போடு திரும்பினம்...
    ஜீ நீங்கள் எழுதி இருக்கும் விதம் சுவாரிசியமாக இருக்கு வாசிக்க..//
    அப்பிடியெல்லாம் மனசைத் தளர விடக்கூடாது! தைரியமா இருக்கணும்! :-)

    ReplyDelete
  11. தியட்டரில ஒரு அப்செட்டும் இல்லை. லைவ் சவுண்ட் ரெக்கோடிங்காம் அதான் சத்தம் ஒழுங்காக கேட்கவில்லை. எல்லா தியட்டரிலும் அப்செட்டதான்.

    ஏன் கப்பலை எடுத்து வீணே காசைக்கொட்டினார்கள்... இன்னும் புரியவில்லை எனக்கு!

    எனக்கும் படத்தில் வரும் இலங்கைத் தமிழர் கடும் கடுப்பைக்கிழப்பியது!

    // நீலவானம் பாடலுக்கு தலைவர் நீ...ள....மா...க...இழுக்க, எனக்கு வாய் வலிச்சிடுச்சு!

    நான் இந்தப்பாடலையும் காட்சியமைப்பையும் ரசித்தேன்.

    ReplyDelete
  12. \\\\நல்ல வேளை! தியேட்டர்ல எந்தக் கூச்சல் இரைச்சலும் இல்ல......ஆனா கொடுமைய பாருங்க! எல்லா இரைச்சலும் படத்துக்குள்ளதான்!///

    தாக்கிப்புட்டீங்க போங்க.
    விமர்சனம் நல்லாருக்கு படத்தைவிட.

    ReplyDelete
  13. ஜீ...வணக்கம்.நீங்கள் என் தேசத்துக் காற்றா.மிகவும் சந்தோஷம்.

    கமலை நடிகராக எனக்கு நிறையவே பிடிக்கும்.ஆனால் ஒரு தமிழனாக....நான் இன்னும் படம் பார்க்கவில்லை.ஆனால் ஒரு விமர்சனம் பார்த்தேன்.
    எப்போதும்போல ஈழத்தமிழரைக் கொஞ்சம் கிள்ளிப் பார்த்திருக்கிறாராமே !

    ReplyDelete
  14. // மேக்கப் போடலையா? போட்டால் சங்கீதா த்ரிஷாவைவிட அழகாக இருக்கக் கூடுமோ? //

    அதெல்லாம் வாய்ப்பே இல்லை... த்ரிஷா அழகுக்கு ஈடாகுமா...?

    ReplyDelete
  15. // ஒரு பாட்டுக்கு கமல் ஆடுவாரே ஒரு ஆட்டம்! செம்ம கலக்கல் தலைவா! //

    இது பாராட்டா நக்கலா என்று புரியவில்லை...

    ReplyDelete
  16. இவ்வளவு அருமையான படம் எடுக்க இவரால மட்டும்தான் முடியும்.

    நான் சொல்றத நீ கேட்டே ஆகணும்னு நெனச்சா ................நடக்காது

    மக்கள் ரசனைங்கறது இன்னும் விளங்காம இருக்கறது இந்த மாதிரி பெரியா ஆளுக்கு பெரிய பலவீனம்..............

    ReplyDelete
  17. நல்லவேளை விமர்சனம் னு பயந்துட்டே படிக்க ஆரம்பிச்சேன்...நீங்க அவதிப்பட்டது பற்றிய சுயவிளக்கம் தான் புரிஞ்சுட்டேன்:))....கடைசியில் அந்த நீல வானம் inspiration சாங் கேட்டேன்..."பத்த வச்சுட்டியே பரட்ட.." :)))

    ReplyDelete
  18. போனாப்போகுதுன்னு... பாட்டுக்கு கமல் ஆடுவதை குறிப்பிடுகின்றீர்களா????
    அதில் கூத்துக்குரிய சில மூமன்டுகளை கமல் கையாண்டிருக்கின்றார்.
    என்னைப்பொறுத்தவரையில் எனக்கு படம் பிடித்திருக்கின்றது.

    ReplyDelete
  19. sifydotcom

    Chennai Box Office - Dec 31 to Jan 2

    Manmadhan Ambu is doing very well in the Chennai multiplexes and has netted nearly Rs 2 crore in 10 days, and is the number one. The Kamal Haasan film seems to have reached its target audience, at least in Chennai city.
    so i am confused,which is true yours or sify's.

    ReplyDelete
  20. நீங்கதான் கடைசியா கிளிச்சதுன்னு நினைக்கிறேன் அம்ப :-)

    ReplyDelete
  21. ஜீ அப்ப பொண்டிங்கின் சொம்பு பார்க்கலியா...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    என் ஈழக் கனவிற்கு விளக்கம் தாருங்கள்..

    ReplyDelete
  22. //நல்ல வேளை! தியேட்டர்ல எந்தக் கூச்சல் இரைச்சலும் இல்ல......ஆனா கொடுமைய பாருங்க! எல்லா இரைச்சலும் படத்துக்குள்ளதான்!///

    ......ஹா ஹா ஹா.. இது செம கமெண்ட் :-))

    ///நீலவானம் பாடலுக்கு தலைவர் நீ...ள....மா...க...இழுக்க, எனக்கு வாய் வலிச்சிடுச்சு!///

    .........நல்ல வேளை..உங்களுக்கு வலிச்சதோட போச்சு.. சிலபேருக்கு இழுத்துக்கிச்சாம்... :-)

    நல்ல விமர்சனம்... நானும் இந்த படம் பார்த்தேன்.. முதல் பாதி.. ஓகே.. ரெண்டாம் பாதி.. மண்ட காஞ்சிருச்சு...:-))

    ReplyDelete
  23. லேட்டா படம் பார்த்தாலும் லேட்டஸ்ட்டா விமர்சனம் பண்ணிருக்கீங்க....சூப்பர்

    ReplyDelete
  24. நல்ல பகிர்வு ஜி . படத்தோட செகண்ட் ஆப் ல கடைசி வயிறு வலிக்க சிரிக்கலாம்னு சொன்னாங்க .ஆனா எனக்கென்னமோ சிரிப்பே வரல .

    ReplyDelete
  25. கலக்கல் விமர்சனம்தான். ஆனா எனக்கு தமிழ் படம் பாக்கவே கிடைக்காதே.

    ReplyDelete
  26. நல்ல விமர்சனம் பண்ணியிருக்கீங்க.. இதுக்கு மேல ஓட்டமுடியாது..

    ReplyDelete
  27. சுவையான விமர்சனம். நன்றி

    ReplyDelete
  28. //அரங்கு நிறைந்த காலி இருக்கைகள்!//

    செம.. ரசித்தேன் உங்கள் சொல் வீச்சை.. சுஜாதா ரொம்ப பிடிக்குமோ..

    //நமக்கு வாய்த்திருக்கும் மாதவன் மிகுந்த திறமைசாலி ஆனால், நல்ல படங்கள்தான் வாய்ப்பதில்லை. கலக்கலான, சிம்பிளான நடிப்பு! ///

    சூப்பர்..

    அந்த வீடியோ பார்த்தேன்..
    படம்தான் காப்பி.. அந்த பாட்டு கான்செப்ட் சூப்பர்னு நினைச்சேன்.. கடைசில அதுவும் காபியா.. விளங்கிடும்...

    ReplyDelete