Friday, December 31, 2010

ஒரு புதிய விடியலை நோக்கி...


வழக்கம் போல பத்தோடு பதினொன்றாக இல்லாமல் ஒரு புதிய தசாப்தத்திற்குள் நுழைகிறோம்! 

கடந்த பத்தாண்டுகளில் கடந்துவந்த அனுபவங்கள், கற்றுக்கொண்ட பாடங்கள், பெற்றுக்கொண்ட பல்புகள்(?!) ஏராளம்!


ஒவ்வொரு புத்தாண்டிலும் தீர்மானங்கள் சிலவற்றை எடுத்து அடுத்த பத்து நாட்களிலேயே மறந்து விடுவது வாடிக்கை! சில திரும்ப ஞாபகம் வரும்போது எங்கேயோ கேட்டமாதிரி இருக்கும்! அதுதான் இந்த முறை என் டிஜிட்டல் டைரியில் (அதாங்க பிலாக்கில்) குறித்து வைக்கிறேன்.

Positive ஆக think பண்ணுவது - வாழ்க்கையில் நெகடிவ் ஆன சம்பவங்களே தொடர்வதால், அப்படியே யோசிக்கப்பழகிட்டேன் (இதைக் கண்டிப்பா மாத்திறேன்)

முடிந்தவரை கலகலப்பாக இருப்பது - பார்த்தவுடன் நான் ஒரு Friendly யான ஆசாமியாகத் தோன்றுவதில்லை என்பது எனது நண்பர்கள் கூறும் குற்றச்சாட்டு. (அதாவது நெருக்கிப் பழகும்வரை புரியாதாம் அனால் புதிதாகப் பழகுவது கடினம் - எனக்கே குழப்பமா இருக்கு)

நிறைய வாசிக்க வேண்டும் - கடந்த மூன்று வருடங்களாக வாசிப்புப் பழக்கம் வெகுவாகக் குறைந்து விட்டது...சரி செய்வேன்!

எல்லோரிடமும் இனிமையாகக் கதைக்க ட்ரை பண்ணுவது - நான் பணிபுரியும் அலுவலகங்களில் எல்லாம் சொல்லிவைத்தது போல் பெண்கள் One-way, உம்மாண்டி என ரகசியப் பெயர்களால் அழைப்பது வழமை (இதை மாற்றுவது கஷ்டம்தான்)

சோம்பேறித்தனத்தை விட்டொழிப்பது - ஒரு பதிவு போடுவற்குள் படும்பாடு இருக்கிறதே...நிறைய 'உலகசினிமா' இதனால் எழுதப்படாமல்!


அப்புறம் Bachelor life அ முடிஞ்சவரை நல்லா enjoy பண்ணனும் (இது ரொம்ப முக்கியம்...நண்பர்களுக்கும் சொல்லணும்!)


தொடரும் குழப்பம் - கடவுளை நம்புறதா? வேணாமா?
கடந்த நான்கு வருடங்களாக இது குழப்பமாவே இருக்கு! அதற்குமுன் பத்து ஆண்டுகள் நாத்திகனாகவே இருந்தேன்.
(ஆத்திகனாகவோ, நாத்திகனாகவோ இருப்பதில் எந்தக் குழப்பமும் இல்லை. இடையில் இருப்பதுதான் கொடுமை!)

சின்ன குழப்பம் - நான் பதிவுலகில் இருப்பதே என் ஓரிரு நண்பர்கள் தவிர நிறையப்பேருக்குத் தெரியாது...சொல்லலாமா வேணாமா?

இந்த வருடத்தில் பல கலவையான அனுபவங்கள் வலிகள், ஏமாற்றங்கள், நம்பிக்கைத் துரோகங்கள் எனப் பல வழமை போலவே மோசமானவை!

சில இனிமையானவை! அதில் முக்கியமானது நான் பதிவுலகுக்கு வந்தது! (நிச்சயமா எனக்கு இனிமை மற்றவங்களுக்கு?! )

நிறைய நண்பர்கள்...இங்கேயும்...கடல் கடந்தும்...முகம் தெரியாமல்...உணர்வுகளால் நெருக்கமாக...நான் தனியாக இல்லை எனக்கூறுவது போல....!
இனிய பதிவுலக நண்பர்கள் சிலரை நேரில் சந்தித்தேன்!
பலரை இன்னும் பதிவுகளிலேயே!
என்றாவது சந்திப்போம் நண்பர்களே!

புதுவருட வாழ்த்துக்கள் நண்பர்களே! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்!!
விடியும் புத்தாண்டு நம் எல்லோருக்கும் நல்லதாக அமையட்டும்!

26 comments:

  1. உங்கள் அறிமுகம் கிடைக்க செய்த இந்த ஆண்டு எனக்கு முக்கியமான ஆண்டு ஆகி விட்டது. ஹேப்பி நியூ இயர்

    ReplyDelete
  2. இன்றும் நாளையும் யார் எந்த பதிவு போட்டாலும் அதற்க்கான பின்னூட்டம் மட்டும் டெம்ப்ளேட் பின்னூட்டம்தான். அது
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. புத்தாண்டு வாழ்த்துக்கள்.நண்பா

    ReplyDelete
  5. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. இந்த ஆண்டு எடுத்த சபதம் நெறைவேற்ற வாழ்த்துக்கள்

    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..... இவ்வாண்டு சிறந்ததாக அமைய வாழ்த்துக்கள்......

    ReplyDelete
  8. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. //நெருக்கிப் பழகும்வரை புரியாதாம் அனால் புதிதாகப் பழகுவது கடினம்//..நீங்களுமா..இதெல்லாம் பிறவிக் குணம்போல..இருக்கட்டும் பாஸ்..நல்லா எழுதறவங்க நல்லா பேசமாட்டாங்களாம்..எங்க பாட்டியோட ஹஸ்பண்ட் சொன்னாரு! வருகின்ற புத்தாண்டு எல்லா நலங்களையும் கொண்டுவர கந்தன் அருள்செய்யட்டும்.

    ReplyDelete
  10. // தொடரும் குழப்பம் - கடவுளை நம்புறதா? வேணாமா?

    அன்பே சிவம் பார்த்த பின்புமா? நம்பினவருக்கு கடவுள் இருக்கிறான். நம்பாதவனுக்கு எல்லாரும் கடவுள்தான்.

    // பெண்கள் One-way, உம்மாண்டி என ரகசியப் பெயர்களால் அழைப்பது வழமை (இதை மாற்றுவது கஷ்டம்தான்)

    பெண்கள் சொல்வதற்காக எதையும் மாற்றாதீர்கள். அவர்களில் சிலர் போக்கிரிகள்!

    புதுவருட வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!
    என்றும் அன்புடன்
    கா.வீரா
    www.kavithaipoonka.blogspot.com

    ReplyDelete
  12. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  14. உங்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்!!
    விடியும் புத்தாண்டு நம் எல்லோருக்கும் நல்லதாக அமையட்டும்

    ReplyDelete
  17. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  18. பழையதை மறப்போம்
    புதியதை நினைப்போம்

    கோவங்களை துரோப்போம்
    சந்தோசங்களை பகிர்வோம்

    எதிரியை மன்னிப்போம்
    நண்பனை நேசிப்போம்

    சொன்னதை செய்வோம்
    செய்வதை சொல்வோம்

    தீயதை விட்தெரிவோம்
    நல்லதை தொடர்வோம்

    2010 இற்கு விடை கொடுப்போம்
    2011 இணை வரவேற்போம் ...


    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
    wish u happy new year to all

    ReplyDelete
  19. //கடந்த பத்தாண்டுகளில் கடந்துவந்த அனுபவங்கள், கற்றுக்கொண்ட பாடங்கள், பெற்றுக்கொண்ட பல்புகள்(?!) ஏராளம்!

    ஆமாங்க ஜீ நானும்..

    Positive ஆக think பண்ணுவது - வாழ்க்கையில் நெகடிவ் ஆன சம்பவங்களே தொடர்வதால், அப்படியே யோசிக்கப்பழகிட்டேன் (இதைக் கண்டிப்பா மாத்திறேன்)

    நானும் பழகனும்..


    சோம்பேறித்தனத்தை விட்டொழிப்பது

    பாருங்க என் சோம்பேறிதனம் இதை கட் காபி பேஸ்ட் பண்ணி போடும் அளவு..

    சின்ன குழப்பம் - நான் பதிவுலகில் இருப்பதே என் ஓரிரு நண்பர்கள் தவிர நிறையப்பேருக்குத் தெரியாது...சொல்லலாமா வேணாமா?

    சொல்லுங்க கண்டிப்பா..இங்கு பெரும்பாலும் நல்ல நண்பர்களே.. ஹிஹிஹி நான் உட்பட (ஹப்பாடா சொல்லிட்டேன்)

    இந்த வருடத்தில் பல கலவையான அனுபவங்கள் வலிகள், ஏமாற்றங்கள், நம்பிக்கைத் துரோகங்கள் எனப் பல வழமை போலவே மோசமானவை!

    எனக்கும் கிட்டியது நினைக்கும் போதே நடுங்கும் அளவு..

    சில இனிமையானவை! அதில் முக்கியமானது நான் பதிவுலகுக்கு வந்தது! (நிச்சயமா எனக்கு இனிமை மற்றவங்களுக்கு?! )

    இது பெரும்பாலாருக்கு சந்தோஷமான களம் தான் ஜீ..

    என் கருத்துக்களும் பெரும்பான்மையா ஒத்துப்போனதால் நிறைய வரிகளில் ஒன்றிப் போனேன்..உண்மையை சொன்னால் என்னை மாதிரியே இன்னொருவருக்கும் நடந்திருக்குன்னு நினைக்கும் போது தான் இது சகஜம் போல வாழ்க்கையில் என நினைக்க தோனுது..சரி இன்னைக்கு சந்தோஷமா இருக்கலாம்...

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா..

    ReplyDelete
  20. ஜீ அவர்களுக்கு
    ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இவ்வருடம் தங்களுக்கு பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்!

    ReplyDelete
  22. இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
    இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
    மகிழ்வான முத்தாண்டாய்
    மனங்களின் ஒத்தாண்டாய்
    வளங்களின் சத்தாண்டாய்
    வாய்மையில் சுத்தாண்டாய் மொத்தத்தில்
    வெத்தாண்டாய் இல்லாமல்
    வெற்றிக்கு வித்தாண்டாய்
    விளங்கட்டும் புத்தாண்டு.

    ReplyDelete
  23. புத்தாண்டு நல் வாழ்த்துகள்..
    அதெல்லாம் ஒண்ணும் குழப்பிக்க வேணாம்.. எப்பவும் போலவே இருப்போம்..

    ReplyDelete
  24. உங்களுக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete