Wednesday, December 22, 2010

ஒரு இனிமையான சந்திப்பு!


'மொக்கையான பதிவுகளை எழுதாமல் சமுதாயத்துக்கு பயனுள்ள பதிவுகளை எழுத வேண்டும்' என்ற ஒரு கருத்தை ஒரு சிலர் சொல்ல,
'பிலாக் என்பது ஒரு டிஜிட்டல் டைரி போன்றது. அதில் இதைத்தான் எழுத வேண்டும் என்று யாரும் கூற முடியாது. அவரவர் இஷ்டப்பட்டதை எழுதலாம். சுவாரஸ்யமாக இருக்கும் பட்சத்தில் அது வரவேற்கப் படும்' என்று மறுத்துரைத்தார் பதிவர் அஷோக்பரன் (அவரது கருத்துகள் எல்லாமே அருமை!) - கொழும்பில் நடைபெற்ற இலங்கைப் பதிவர் சந்திப்பில்!

முற்றிலும் உண்மை! அப்படித்தான் நானும் ஆரம்பத்தில் வைத்திருந்தேன் (blogspot .com அப்படிச் சொன்னதால்!). திரட்டிகள் பற்றித் தெரியாமலும், பின்னூட்டம் எதுவும் யாருக்கும் போடாமலும்! அதனால் நான் மட்டுமே இரு மாதங்களாக பாத்துட்டிருந்தேன்!
பதிவுலகுக்கு வந்து ஆறுமாதங்களில் ஒரு சில இலங்கைப் பதிவர்களைமட்டுமே பரிச்சயம். பதிவுகளினூடாக மட்டும்!

சில நாட்களுக்கு முன் பதிவர் ஜனா யாழ்ப்பாணத்திலிருந்து தொடர்பு கொண்டார். தனது தொலைபேசி இலக்கத்தின் முன் இலங்கைக்கான 'கோட்' நம்பரும் அனுப்பி இருந்தார். பேசும்போதுதான் விஷயம் விளங்கிச்சு! என்னை இந்தியப் பதிவர் என்று நினைத்தாராம். என்னைத் தெரிந்த சிலரும் அப்படியே நினைப்பதாக சொன்னார்!

பதிவர் சந்திப்புக்கு முதல்நாள் ஜனா, கூல்போய் கிருத்திகன் ஆகியோருடன் (இருவரும் ஏற்கனவே தெரிந்தவர்கள் போன்ற உணர்வு!) வெள்ளவத்தை பீச்சில் உரையாடும்போது, ஜனா, தான் முதலில் இந்தியாவிலிருக்கும்போதே பதிவெழுத ஆரம்பித்ததாகவும், கேபிள், மணிஜி, அடலேறு ஆகியோருடனான நட்பு குறித்தும், சென்னை 'மெரீனா பீச்' பதிவர் சந்திப்பு பற்றியும், இன்னும் பலவும் பகிர்ந்து கொண்டோம். இடையில் நம்ம 'சுடுசோறு' மதிசுதாவுடனும் அலைபேசியில் கதைத்தோம்!

மறுநாள் சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு ஜனா அழைக்க, முதலில் எனக்கு கலந்து கொள்ளும் எந்த ஐடியாவும் இருக்கவில்லை! (யாரையும் தெரியாது, தவிர நமக்கு கூட்டம்னாலே அலர்ஜி. அதைவிட கூச்சம் வேறு பேச்சே வராது!) சரி போய் வேடிக்கை பார்க்கலாம்னு....

ஜனா, கூல், நான் போகும்போது லோஷன் வெளியில் நின்றார். நான்தான் புதுசு, அவருக்கு அறிமுகப்படுத்த கைகுலுக்கி, உள்ளே போய் எல்லாரும் தங்கள் வலைப் பூக்களை அறிமுகப்படுத்தி, கலந்துரையாடலின் போதே மேற்சொன்ன மொக்கை பற்றிய பேச்சு!

இங்கு மொக்கை பற்றி சற்று ஆராயலாம்!
மொக்கைக்கென்று இன்று சரியான வரைவிலக்கணங்கள் ஏதும் கிடையாது. எதிர்காலத்தில் மொக்கை இலக்கியம் என்பது ஒரு மாபெரும் இயக்கமாகவே வளரும் என்பது திண்ணம்!


பொதுவாக, நகைச்சுவையாக ஏதாவது எழுதினால் மொக்கை என்று தான் லேபிள் போடுவார்கள். ஏனெனில் எங்களுக்கு நகைச்சுவையாகத் தென்படுவது, வாசிப்பவருக்கு அழுகையை வரவழைக்கலாம்! அதிலும் தமிழர்களின் நகைச்சுவை உணர்வு புரிந்து கொள்ள முடியாதது. 


சிலர் தாங்களே ஜோக்கடித்து தாங்களே சத்தமாகச் சிரித்துக் கொள்வர்! 
சிலர் வடிவேலு காமெடியையே சீரியஸாக 'உர்ர்' ரென்று தான் பார்ப்பார்கள்! 
ஆகவே நகைச்சுவைக்கு மொக்கை என லேபிள் இடுவது ஒரு நேர்மையான முறை!


சிலபேர் சீரியஸ் ஆனபதிவுகள் இடுவார்கள்! இரவிரவாக யோசித்து, தலையைப் பிய்த்து படு சீரியஸாக எழுதுவார்கள்! ஆனா கொடுமையைப் பாருங்க..... வாசிப்பவனுக்கு அது மரண மொக்கையாக இருக்கும்!

ஆக, ஒரு பதிவு மொக்கையா, சீரியஸா எனத் தீர்மானிப்பது வாசகனே!
யப்பா! மொக்கையைப் பற்றி சொல்ல ஆரம்பித்தாலே....!

கலந்துரையாடலை ஒருங்கமைத்துக் கொண்டு இருந்த அண்ணன்தான் நிரூஜாவாம்! (நானும் ஒரு சூப்பர் பிகரா இருக்குமோன்னு...விடுறா விடுறா சூனா.. பானா...!)

அனுதினன், ஆதிரை, சுபாங்கன், கன்கொன், மருதமூரான், புல்லட், மன்னார் அமுதன்  போன்றவர்களை (ஞாபகத்தில் இருக்கிறார்கள்) அறிந்தேன். இடைவேளையில் அறிமுகமான 'அகசியம்' வரோ, 'கௌபோய்' மது ஆகியோர் எங்கோ, பார்த்து பழகியவர் போலத் தோன்றினர். (சிலரைப்பார்க்கும்போது அப்படித்தான்)

பதிவர்களுக்கான 'அமைப்பு' ஒன்றை உருவாக்குவது குறித்து ஆராயப்பட்டு பின்னர், அதனால் ஏற்படும் சிக்கல்கள் காரணமாக கைவிடப்பட்டது!

'அமைப்பு' என்ற ஒன்றை உருவாக்கினால், கொஞ்ச நாளில் அதற்கு எதிரான 'அமைப்பு!'....பிறகு வெளியிலிருந்து ஆதரவு தரும் 'அமைப்பு!' அப்புறம் நாங்கள் தமிழர்கள் இல்லையா? அதனால் இன்னொரு முக்கியமான 'அமைப்பு' உருவாகும்!...அது..அமைப்புக்குள் கூட இருந்தே குழிபறிக்கும் 'அமைப்பு!' இது நான் சொல்லல..., வரலாறு! வரலாறு!

கடந்தகாலத்தை நினைவூட்டும் எனது 'இதயம் ஒரு கோவில்' பதிவைப் பற்றி ஜனா சிலாகித்துச் சொல்ல ஒருவர் அவசரமாக, எனக்கும் சினிமாப் பாடல் வரிகள் உள்ள வலைப்பூக்களைப் பிடிக்கும் என்றார் நான் பாடல் வரிகளைத் தான் எழுதுகிறேன் என்று நினைத்துக்கொண்டார் போலும்! இரண்டு மூன்று முறை திரும்பச் சொன்னார் (கொஞ்சம் நக்கலாக)! 

நாங்கள் எழுதும்போது எதைச் சொல்ல, உணர வைக்க நினைக்கிறோமோ, அதை வாசிப்பவரால் சரியாக புரிந்து கொள்ள, உணர முடிந்தால் அது அந்த எழுத்தின் நோக்கம் நிறைவேறிவிட்டது, இல்லையா?

நம்மவர்களிடம் ஒரு பழக்கம் ஒருவர் எதையாவது சொல்ல வரும்போது, அதை முழுதாகப் புரிந்து கொள்ளாமல், ஒரு குறிப்பிட்ட சொல்லைப் பிடித்துக்கொண்டு எதிர்க்கருத்துத் தெரிவிப்பது!

இப்படிக்கலவையான அனுபவங்கள்!

எல்லாத்துக்கும் ஹைலைட்டா ஒரு மூத்த பதிவர் (யாரென்று தெரியவில்லை),
திடீரென்று எழுந்து மிகுந்த உற்சாகத்தோடு, ஒரு கையை தலைக்கு மேலே உயர்த்தி, ரயிலில் செல்லும் நண்பருக்கு 'டாட்டா' காட்டும் பாவனையில் கையை ஆட்டி, முகத்தில் ஒரு மந்தகாசம் படர,  'பதிவுலகின் பொற்காலம் எப்பவோ முடிந்து விட்டது' என்றார். 
சொல்லிவிட்டு, உடனேயே அதைவிட மகிழ்ச்சியுடன் அமர்ந்து கொண்டார்!

நான் ஆடிப்போயிட்டேன்! ச்சே! அப்போ நான் எழுத ஆரம்பித்தது என்ன காலத்தில்?
ஆமா...பொற்காலம் எப்போ ஆரம்பித்து, எப்போ முடிந்தது? அது எப்படி இருந்தது?

பதிவு என்பதே ஒரு டிஜிட்டல் டைரி போலிருக்கும்போது, அதில் பொற்காலம் என்பது நான் எழுதும் காலப்பகுதியா? நான் எழுதுவதை நிறுத்திவிட்டால் அந்தப் பொற்காலம் முடிந்துவிட்டதா? குழம்பி விட்டேன்! அவரது பேச்சை யாரும் ஆட்சேபிக்கவும் இல்லை! இது வேறு புதுக் குழப்பமாக இருந்தது! 

அதுவும், இந்த முறை பல புதிய பதிவர்கள் எழுத வந்த சூழலில், நாட்டின் பல பாகங்களிலிருந்து (யாழ், மன்னார், மட்டக்களப்பு)  சில நூறுமைல் தாண்டி வந்து கலந்து கொண்ட பதிவர் சந்திப்பில் , ஒரு மூத்தபதிவர் இவ்வாறு கூறியதை அவ்வளவு சாதாரணமாக பதிவுலகின் சிறுவனான என்னால் புறந்தள்ள முடியவில்லை! 

இந்த விஷயம் என்னைச் சற்று பயமுறுத்தி விட்டதால் மட்டுமே இதைச் சொன்னேன்! மற்றபடி பதிவர் சந்திப்பு மிக நன்றாய் இருந்தது! நிறையப்பதிவர்களின் மற்றும் புதிய வலைப்பூக்களின் அறிமுகம்.

பி.கு.- இந்தப் பதிவுக்கு எதுக்கு சுப்பிரமணிய சுவாமி படம்? ஏதோ இப்போதெல்லாம் அடிக்கடி என் நினைவுக்கு வருகிறார்! அதான் அவரைக் கௌரவிக்க! ஹி ஹி..!

29 comments:

  1. அவர் சொன்னது ஓரளவு உண்மைதான் நண்பரே..

    ReplyDelete
  2. அருமை அருமை வாழ்த்துக்கள்.. பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டதால் நீங்கள் கொடுத்து வைத்தவர்...

    ReplyDelete
  3. //சிலர் வடிவேலு காமெடியையே சீரியஸாக 'உர்ர்' ரென்று தான் பார்ப்பார்கள்! //

    ஹா ஹா..

    ReplyDelete
  4. அளவான அலட்டலில்லாத சந்திப்பை பற்றிய பதிவு!

    ReplyDelete
  5. //நாங்கள் எழுதும்போது எதைச் சொல்ல, உணர வைக்க நினைக்கிறோமோ, அதை வாசிப்பவரால் சரியாக புரிந்து கொள்ள, உணர முடிந்தால் அது அந்த எழுத்தின் நோக்கம் நிறைவேறிவிட்டது, இல்லையா?//

    டபிள் எஸ் ஜீ..:)) உங்கள் பகிர்வு சுவாரஸ்யம் ...

    ReplyDelete
  6. பகிர்வுக்கு நன்றி.
    என்னைப்பொறுத்தவரை பதிவு என்பது ஒருவரின் கருத்துக்கள் நேரதிரே இருப்பவருடன் பகிர்வது போல இருக்க வேண்டும் என்பது அவா.

    நான் மேலிருப்பவரின் அவா இவாவாய்ப்பற்றி சொல்லலிங்கோ!

    ReplyDelete
  7. ஜீ.. சுப்ரமணியசுவாமி படத்தை பார்த்ததும் எனக்கும் மைக்கை தனக்குமட்டுமே சொந்தம் என்று நினைத்திருந்த அந்த பதிவரின்முகம் ஞாபகத்துக்கு வருகிறது... நல்ல தெரிவு..

    //'பதிவுலகின் பொற்காலம் எப்பவோ முடிந்து விட்டது'// அவர் வாசிக்கும் காலம் முடிந்திருக்கும் அல்லது வாசிக்கும் பதிவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கும்...

    //ஜனா, கூல்போய் கிருத்திகன் ஆகியோருடன் (இருவரும் ஏற்கனவே தெரிந்தவர்கள் போன்ற உணர்வு!)//
    நன்றி ஜீ..
    எனக்கும் அதே உணர்வு தான்.. ஜீங்கிறவர் நல்ல அனுபவ சாலின்னு எதிர்பார்த்ததுதான்..ஆனா ரித்திக்ரோஷன் மாதிரி இருப்பார்னு அன்னிக்குதான் தெரியும்.

    அமைப்பு பற்றி நீங்கள் சொன்ன வரலாறு நல்லாயிருக்கு...
    நன்றி
    -கிருத்திகன்.
    http://tamilpp.blogspot.com

    ReplyDelete
  8. சந்தித்தது மகிழ்ச்சி ஜி, பல பதிவர்களையும் உங்களுக்கு முன்னர் பழக்கம் இல்லாத காரணத்தினால், வெளிப்படையாக உங்கள் மனதில் தெறித்த விடயங்களை பகிர்ந்துள்ளீர்கள், நன்றி

    ReplyDelete
  9. பதிவர்கள் சந்திப்பு அனுபவங்களையும் உங்களது கேள்விகளையும் நகைச்சுவையுடனும் அல்லது மொக்கையுடனும் எழுதி உள்ளீர்கள்

    ReplyDelete
  10. இந்தப் பதிவுக்கு எதுக்கு சுப்பிரமணிய சுவாமி படம்? ஏதோ இப்போதெல்லாம் அடிக்கடி என் நினைவுக்கு வருகிறார்! அதான் அவரைக் கௌரவிக்க! ஹி ஹி..!//

    உண்மையா சொல்லுங்க தல.... ஏதும் போட்டோ கெடைக்காம தான இத போடீங்க

    ReplyDelete
  11. அருமையான விவரணப் பதிவு.....நன்றி......

    ReplyDelete
  12. பதிவர்களின் சந்திப்பு ... ம்ம்ம்ம் நல்ல எழுத்து நடை ...

    நிச்சயம் இன்னும் பொற்காலம் முடியவில்லை நண்பரே ...

    ReplyDelete
  13. heheee..super...

    உங்களை தொடர் பதிவிற்கு அழைத்து இருக்கிறேன்.....நேரம் இருந்தால் எழுதுங்கள்....

    ReplyDelete
  14. இந்தப் பதிவுக்கு எதுக்கு சுப்பிரமணிய சுவாமி படம்? ஏதோ இப்போதெல்லாம் அடிக்கடி என் நினைவுக்கு வருகிறார்! அதான் அவரைக் கௌரவிக்க! ஹி ஹி..! ////
    நாங்க கேட்க நினைச்ச கேள்வியை நீங்களே கேட்டுக்கிட்டீங்கன்னா எப்படி?

    ReplyDelete
  15. பகிர்வுக்கு நன்றி! சந்திப்புக்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete
  16. ஜீ ஏமாந்தவரில் நானும் ஒருவன்... பதிவர் சந்திப்பின் பின் ஒரு வித்தியாசமான பதிவை பார்க்கிறேன்... மொக்கை சம்பந்தமான தங்கள் பதிலை அன்றே கேட்டேன்...... நல்ல பதில்

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. கலக்கல்ஸ் ஜீ.. குறிப்பாக மொக்கை பதிவுகளை ஆராய்வதாக கூறி, சு.சுவாமியின் படத்தை போட்டிருக்கின்றீர்களே! கில்லாடிதான் நீங்கள். அவர் குறிப்பிட்டது ஆங்கிலப்பதிவுகளின் பொற்காலமாக இருக்கலாம். குறிப்பாக ஜோர்ஜ் புஸ் காலத்தில் அவரது அஜாரகங்களை பறை சாற்றி ஏராளமான ஆங்கில பதிவர்கள், துணிச்சலான பல விடயங்களை எழுதிவந்தார்கள். அவை பிரபலமான உலக பத்திரிகைகள் பலவற்றில், அவர்களின் அனுமதியுடன், அவர்களின் எழுத்தை கொளரவித்து பிரசுரம் செய்யவும் பட்டது. ஆனால் என்னைப்பொறுத்தவரை தமிழ் பதிவுகளின் பொற்காலம் இனிமேல்த்தான் வரவுள்ளது. வரும் என்பதே எனது நம்பிக்கை...

    ReplyDelete
  19. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


    -கவிஞர்.வைகறை
    &
    "நந்தலாலா" இணைய இதழ்,
    www.nanthalaalaa.blogspot.com

    ReplyDelete
  20. நிலைக்கண்ணாடி...!

    ReplyDelete
  21. நன்றாக பகிர்ந்தீர்கள்..

    அமைப்பு பற்றிய வரலாறு ..நல்லாவே இருக்கு..:)

    ReplyDelete
  22. அவங்க அவங்க ஆட்டம் முடிச்சதும் எல்லாமே சுவாரசியம் இல்லாத மாதிரி தான் பீல் பண்ணுவாங்க. அதுக்காக எல்லாமே முடிஞ்சுடுச்சுன்னு சொல்ல முடியாது இல்லையா??? நாம கூட சொல்லுவோம் “சின்ன வயசுல அனுபவிச்ச மாதிரி இப்ப முடியகையே”ன்னு. இதுவே 50 வயசுல “இளமை பருவம் மாதிரி வரலையே”ன்னு...!!

    இப்படியே தான் அவங்கவுங்க காலம் முடிஞ்சதும் அதுல ஈடுபாடு இல்லாம போர் அடிப்பதாக கற்பன பண்றாங்க!!!!!!

    ஓவரா பேசிட்டேனோ.....

    ReplyDelete
  23. நல்ல பதிவு நண்பரே..நாம் எழுதறவரைக்கும் நமக்குப் பொற்காலம்தான்(படிக்கறவங்களுக்கு எப்பட்யோ!)

    ReplyDelete
  24. பதிவர் சந்திப்பைப் பற்றி.. சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கீங்க..

    ReplyDelete
  25. பதிவர் சந்திப்பு பற்றிய நல்லதொரு அலசல் கொடுத்திருக்கிறிர்கள் .
    //நான் ஆடிப்போயிட்டேன்! ச்சே! அப்போ நான் எழுத ஆரம்பித்தது என்ன காலத்தில்?
    ஆமா...பொற்காலம் எப்போ ஆரம்பித்து, எப்போ முடிந்தது? அது எப்படி இருந்தது?//
    பொற்காலம் பற்றி யோசிக்காம தொடர்ந்து எழுதுங்க
    பதிவு அருமை

    ReplyDelete
  26. மொக்கை என்பதால் சு.சாமி படமா.( என்னது மொக்கை இல்லையா, தப்பா சொல்லிட்டேனா,.. சாரிங்க ) நானும் உங்களை தமிழ் நாட்டுக்காரர்னு தான் நினைச்சிருந்தேன். எழுத்தில இலங்கைத்தமிழ் வாடை அவ்வளவா அடிக்கலையே.

    அப்புறம் ....நான் எழுதுற இந்த காலம் தான் எனக்கு பொற்காலமுங்கோ .

    ReplyDelete
  27. அருமையான பதிவு

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...