Monday, December 13, 2010

ஒரு கமல் ரசிகனாக..


கமலை எனக்கு எப்போதிலிருந்து பிடிக்கத் தொடங்கியது? நான் முதன்முதல் பார்த்த கமல் படம் எது? அநேகமானோரைப் போல் எனக்கும் சின்னஞ்சிறு வயதில் ரஜினியைத்தான் பிடித்தது. பிறகு விவரம் (!?) தெரிந்ததும்...(அப்போ ரஜினியைப் பிடித்தவர்களுக்கு இன்னும் விவரம் தெரியலையா என்று கேட்கக் கூடாது! நான் என்னைப்பற்றி சொன்னேன் )

எனக்குத் தெரிந்து நான் முதன்முதலாக முழுதாக ரசித்த கமல் படம் 'ஒரு கைதியின் டைரி'. அந்தப் படத்தில் ஒரு வில்லனிடம் கமல் பேசும் 'கேட்கிற நிலைமைல நீ இல்ல. ஆனா சொல்ற நிலைமைல நான் இருக்கேனே!' என்ற வசனம் மிகவும் பிடித்துக் கொண்டது.

ராஜபார்வை படத்தில் கமல் கண் தெரியாதவர் எனத் தெரியவரும் அறிமுகக் காட்சி சின்ன வயதில் என்னைக் கவர்ந்து கொண்டது.

கமலின் படங்களில் நாயகன், மகாநதி, குணா, இந்தியன் என்னை மிகவும் கவர்ந்தவை. நாயகனும், இந்தியனும்தான் என்னால் திரும்பத் திரும்பப் பார்க்க முடிந்தவை. ( அன்பே சிவம்? அதற்குத் தனிப் பதிவே போடலாம் )

டீன் ஏஜில் ஒரு தீவிர கமல் ரசிகனாகிப் போனேன். இந்தியன் வந்ததிலிருந்து அவர்தான் தலைவர்! அப்போது கமல் ரசிகன் என்றாலே நண்பர்கள் ஒரு மாதிரித்தான் பார்ப்பார்கள்.
ஏதாவது வித்தியாசமாக(?!) கருத்துக் கூறப் போனால், நீ கமலோட ஆள்தானே?' என்று ஏடாகூடமாக கேட்பார்கள்.

அதிலே இன்னோர் அர்த்தமும் இருக்கும். இப்பிடித்தான் எதையாவது உளறுவான் கண்டுக்காதிங்க! ஏனெனில் அப்படித்தானே திரையுலகிலும் கமல் பேச்சுக்கு கிடைக்கும் மரியாதை. எவ்வளவோ நல்ல விஷயங்களை கமல் செய்து செயற்படுத்தியும், அறிமுகப்படுத்தியும் எத்தனை பேர் அவற்றைப் பின்பற்றுகிறார்கள்? அவர்களும் 'கமல் இப்படித்தான் எதையாவது சொல்லிட்டிருப்பார். நாம நம்ம வழிலயே போவோம்' 

தமிழ் சினிமாவில் மிகை நடிப்பில்லாமல் இயல்பான நல்ல நடிப்பை முதன்முதலாகத் தந்தவர் கமல் என்றே நான் நினைக்கிறேன். அதற்குமுன் (நாகேஷ் இருந்தும்கூட) சிவாஜியைத்தான் நடிப்பில் சிறந்தவரென்று(?!) (ஏன் இப்போதும்கூட) நம்புகிறார்கள் பலர்.

எல்லாரும் பழைய படங்களையே திரும்பத் திரும்ப copy பண்ணிட்டிருக்க, சிலர் ஹாலிவுட்ல இருந்து 'சுடும்'போது அது புதிய விஷயமாகப் பேசப்படும். அதையே கமல் செய்து விட்டால் போதும் ஒரு பெரிய கூட்டமே துப்பறியக் கிளம்பி எங்கேயிருந்து கமல் 'சுட்டார்' என்று புள்ளி விபரமெல்லாம் வெளியிடும்.

அதில முக்கியமான விஷயம், மற்றவர்கள் 'சுடும்'போது அப்படியே அப்பட்டமாகத் தெரியும். ஆனால் கமல் அப்பட்டமாகச் 'சுட்டாலும்' உடனே தெரியாது. அதற்கும் ஒரு திறமை வேண்டும். அதைவிடத் திறமை வேண்டும் கமல் சுட்டதைக் கண்டுபிடிக்க! அது அந்தக் காலத்தில், இப்போது அப்படி அல்ல!


வெறும் மசாலாக் காதல் படங்களிலேயே பல காலமாக நடித்துக் கொண்டிருந்த கமல் நல்ல முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கியதுமே, பெரும்பாலான பெண்களுக்கு கமலைப் பிடிக்காமல் போய்விட்டது!

அநேகமாக இப்போது எங்கள் நண்பர்கள் அனைவருமே கமல் ரசிகர்களே! அதில் அனைவர்க்கும் பிடிக்காத மோசமான படம் என்று நாங்கள் கருதுவது 'வாழ்வே மாயம்'. ஆனால் கமலைப் பிடிக்காத பல பெண்களுக்குப் பிடித்த படமும் அதுவே!

பெண்கள் விஷயத்திலும் 'வித்தியாசமான' முயற்சிகளை அவர் மேற்கொண்டதும் பெண்கள் பலருக்கு கமலைப் பிடிக்காமல் போக ஒரு முக்கிய காரணம்.

நடிப்பு வேறு, சொந்த வாழ்க்கை வேறு என்று எமது தமிழ்ச் சமுதாயத்தில் பிரித்துப் பார்ப்பதில்லை. நடிகன் என்பவன் சமுதாயத்திற்கே வழிகாட்ட வேண்டும் என்று எதிர்பார்க்க, அவர்களும் ( ஒழுங்கா நடிக்கவே....வராது ) உடனே நாற்காலிக் கனவு காண ஆரம்பித்து விடுகிறார்கள் ( இந்த நடிப்பைவிட அது கஷ்டம்னு தெரியாமல் ).

இதுல என்ன கொடுமைன்னா..பெண்கள் விஷயத்தில் தலைவர் வாங்கிக் கட்டிக்கொண்ட கெட்ட பெயர், ரசிகர்களான எங்களையும் விடாது தொடர்ந்தது. அந்த நிலையைக் கமல் ரசிக நண்பர்கள் பலரும் சந்தித்திருப்பார்கள்.

கமல் கெட்டவன், மோசமானவன். அப்போ கமல் ரசிகனும் அப்படித்தானே? அதுவும் கமல் சரிகாவைப் பிரிந்ததும் இன்னும் நிலைமை மோசமாக, கமல் ரசிகனென்று வெளில தெரிந்தாலே கேவலமான 'லுக்' ஒன்று விடுவார்கள். ஆனா யாருகிட்ட?
( விடுறா..விடுறா... சூனா.. பானா.. போ போ போயிட்டேயிரு...! ) இது கூட ஒரு பெருமையாதான் இருந்திச்சு! ( பார்ரா! )

ஆனாலும், யாரென்றே தெரியாத ஒரு பெண், கமல் ரசிகனென்று தெரிந்து என்னைப் பார்த்த பார்வை இருக்கே.....இன்னும் முடியல! மறக்க!!

கிஸ்கி 1 - தீவிர கமல் ரசிகனாக ஆறு வருடங்களுக்கு முன் நான் இருந்த அப்போதைய மன நிலையை பிரதிபலித்து எழுதிய பதிவு இது.

கிஸ்கி 2 - அப்போது எனக்கு உலக சினிமா பரிச்சயமே இல்லை (தமிழ் , ஹாலிவுட் மட்டும்தான்) அப்போது கமல் 'உலகநாயகன்' என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இருக்கவில்லை!

கிஸ்கி 3 - இப்போதும் கமலை எனக்குப் பிடிக்கும்!

32 comments:

 1. அருமை... கமல் நல்ல நடிகன்..திறமைசாலி.. (ஆனால் எனக்கு அவரை சுத்தமா பிடிக்காது)

  ReplyDelete
 2. "தமிழ் சினிமா ஒரு கோவில் என்றால் கமலே அதில் தெய்வம்" இதுதான் என் நிலையும். நான் ஆரம்பத்தில் இருந்தே கமல் ரசிகன்தான்.

  ReplyDelete
 3. //ஏதாவது வித்தியாசமாக(?!) கருத்துக் கூறப் போனால், நீ கமலோட ஆள்தானே?' என்று ஏடாகூடமாக கேட்பார்கள்.//
  :)

  ம்ம் கமல் ஏராளமான திறமைகளை கொண்டுள்ளார் .

  ReplyDelete
 4. எனக்கும் ஒரு நடிகனா கமலை பிடிக்கும், ஆனால் அவரை பிடிக்காது!

  ReplyDelete
 5. //பிரஷா said...
  அருமை... கமல் நல்ல நடிகன்..திறமைசாலி.. (ஆனால் எனக்கு அவரை சுத்தமா பிடிக்காது)//
  நன்றி! :-)

  //Jana said...
  "தமிழ் சினிமா ஒரு கோவில் என்றால் கமலே அதில் தெய்வம்" இதுதான் என் நிலையும். நான் ஆரம்பத்தில் இருந்தே கமல் ரசிகன்தான்//
  வாங்க ஜனா அண்ணா! நன்றி! :-)

  //nis said...
  ம்ம் கமல் ஏராளமான திறமைகளை கொண்டுள்ளார்//
  நன்றி! :-)

  //Chitra said...
  Absent Sir! :-)//
  ஹா ஹா :-)

  //வைகை said...
  எனக்கும் ஒரு நடிகனா கமலை பிடிக்கும், ஆனால் அவரை பிடிக்காது!//
  நன்றி! :-)

  ReplyDelete
 6. //கிஸ்கி 3 - இப்போதும் கமலை எனக்குப் பிடிக்கும்!//

  எப்போதும்.

  ReplyDelete
 7. இன்றும் கமல் படம் என்றால் எனக்குப் பிடிக்கும். கட்டாயம் பார்க்கச் சொல்லும்.
  அதேபோல சிவாஜியின் நடிப்பு இப்பொழுது மிகை நடிப்பு என்று சொல்லப்பட்டாலும், இந்தக் காலகட்டத்தில் அவரது படங்கள் வித்தியாசமானவைதான்.

  ReplyDelete
 8. வைகை said...

  எனக்கும் ஒரு நடிகனா கமலை பிடிக்கும், ஆனால் அவரை பிடிக்காது!


  //

  மாமே ஒரு குவாட்டர் சொல்லேன்...

  ReplyDelete
 9. அன்பரசன் said...
  //கிஸ்கி 3 - இப்போதும் கமலை எனக்குப் பிடிக்கும்!//
  எப்போதும்.
  நன்றி! :-)

  //Dr.எம்.கே.முருகானந்தன் said...
  இன்றும் கமல் படம் என்றால் எனக்குப் பிடிக்கும். கட்டாயம் பார்க்கச் சொல்லும்//
  நன்றி! :-)

  //வெறும்பய said...
  வைகை said...
  எனக்கும் ஒரு நடிகனா கமலை பிடிக்கும், ஆனால் அவரை பிடிக்காது!
  //
  மாமே ஒரு குவாட்டர் சொல்லேன்..//
  ha ha ha :-)

  ReplyDelete
 10. சரியா சொன்னீங்க.

  எனக்கும் முன்பிருந்த கமலை தான் பிடிகும். வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்ததும் பல ரசிகைகளை இழந்துட்டாரோன்னு தோணுது. தேவர் மகன் சான்ஸே இல்ல. !!!!!!

  ReplyDelete
 11. //ஏதாவது வித்தியாசமாக(?!) கருத்துக் கூறப் போனால், நீ கமலோட ஆள்தானே?' என்று ஏடாகூடமாக கேட்பார்கள்.//

  ஹ ஹ...intellectual guy னு நினைச்சுக்கோங்க ஜீ...

  ReplyDelete
 12. கமல் ஒரு லெஜன்ட்.

  ReplyDelete
 13. /வெறும் மசாலாக் காதல் படங்களிலேயே பல காலமாக நடித்துக் கொண்டிருந்த கமல் நல்ல முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கியதுமே, பெரும்பாலான பெண்களுக்கு கமலைப் பிடிக்காமல் போய்விட்டது!//

  அது தெரில...என் பார்வையில் எப்படினால்...எனக்கு சகலகலா வல்லவன் டைப் கமல் சுத்தமா பிடிக்காது...எனக்கு ரொம்ப அபிமான பட வச்ச படம்..."அன்பே சிவம்"...ஓய்..ஜீ..ஏன் அந்த படம் பற்றி சொல்லலை...??? :(

  ReplyDelete
 14. //ஆமினா said...
  தேவர் மகன் சான்ஸே இல்ல. !!!!//
  உண்மை! :-)

  //ரஹீம் கஸாலி said...
  கமல் ஒரு லெஜன்ட்//
  :-) நன்றி!


  //ஆனந்தி.. said...
  ஹ ஹ...intellectual guy னு நினைச்சுக்கோங்க ஜீ..//
  நினைச்சுக்கவா? கலாய்க்கிறீங்களோ!! :-)
  //எனக்கு ரொம்ப அபிமான பட வச்ச படம்..."அன்பே சிவம்"...ஓய்..ஜீ..ஏன் அந்த படம் பற்றி சொல்லலை...??? :(//
  அதான் தனிப் பதிவுன்னு சொல்லிட்டேனே!! :-)

  ReplyDelete
 15. கமல் ஒரு அற்புதமான நடிகர்....

  ReplyDelete
 16. நல்ல பகிர்வு நன்றி

  ReplyDelete
 17. "அப்போ ரஜினியைப் பிடித்தவர்களுக்கு இன்னும் விவரம் தெரியலையா என்று கேட்கக் கூடாது! நான் என்னைப்பற்றி சொன்னேன்"

  இது படி பாத்தா விவரம் தெரியாதவங்கதான் அதிகம் அண்ணா................

  ஒரு ரஜினி வெறியனாக இருந்தும் கூட எனக்கும் கமலை மிகவும் பிடிக்கும் ஆனால் சில கமல் ரசிகர்கள் (நீங்கள் இல்லை) கூறும் விமர்சனங்களை பார்க்கும்போது கமலை விட அவரது ரசிகர்கள் மீதுதான் வெறுப்பு

  ரஜினி கமல் எவ்வளவு ஒற்றுமையான நண்பர்கள் ஆனால் ரசிகர்கள் ஏன் அப்படியில்லை வாருங்கள் நாமாவது அவர்கள் போல இருப்போம்.


  ஆனாலும் அண்மையில் நான் கமலை வெறுத்த விடயம் ஒன்று உள்ளது அதனை இந்த தளத்தில் சென்று பாருங்கள்

  http://vizhiyepesu.blogspot.com/2010/12/blog-post_08.html


  இதன் காரணம் உங்களுக்கு தெரியாமல் இருக்காது

  ReplyDelete
 18. நானும் தீவிர கமல் ரசிகன் தான் ....................

  ReplyDelete
 19. தமிழ் வலைப்பூக்கள் உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

  இவன்
  http://tamilblogs.corank.com/

  ReplyDelete
 20. //அதற்குமுன் (நாகேஷ் இருந்தும்கூட) சிவாஜியைத்தான் நடிப்பில் சிறந்தவரென்று(?!) (ஏன் இப்போதும்கூட) நம்புகிறார்கள் பலர்.
  //
  அப்படி நம்புபவர்களில் உங்கள் தலைவர் கமலும் ஒருவர் .

  அவரிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாமே ?

  (நானும் கமல் ரசிகன் தான்)

  ReplyDelete
 21. சினிமாவே வேண்டாம்

  ReplyDelete
 22. Arun Prasath said...
  கமல் ஒரு அற்புதமான நடிகர்..
  :-) நன்றி!

  அரசன் said...
  நல்ல பகிர்வு நன்றி
  :-) நன்றி!

  ஐயையோ நான் தமிழன் said..
  ரஜினி கமல் எவ்வளவு ஒற்றுமையான நண்பர்கள் ஆனால் ரசிகர்கள் ஏன் அப்படியில்லை வாருங்கள் நாமாவது அவர்கள் போல இருப்போம்
  :-) நன்றி!

  tamil blogs said...
  எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்…
  :-) okkk நன்றி!

  ஜோ/Joe said...
  அப்படி நம்புபவர்களில் உங்கள் தலைவர் கமலும் ஒருவர் .
  அவரிடமே கேட்டு தெரிந்து
  கொள்ளலாமே ?
  :-) நன்றி!

  THOPPITHOPPI said...
  சினிமாவே வேண்டாம்
  :-) நன்றி!

  ReplyDelete
 23. மேலே உள்ள போட்டோவில் இருப்பது யாரு? அதுதான் நீங்கள் கூறும் கமலா? சிங்கள நடிகரா? நான் சிங்களப்படம் பார்ப்பது இல்லை. எனவே எனது கருத்து எதுவும் இல்லை.

  ReplyDelete
 24. கமலை யாருக்குத்தான் பிடிக்காது. பகிர்வுக்கு நன்றி

  @Jana said...
  தமிழ் சினிமா ஒரு கோவில் என்றால் கமலே அதில் தெய்வம்//

  அண்ணர், உந்த வசனத்தை அடிக்கடி யூஸ் பண்ணுறீங்கள்... வேணாம்....

  ReplyDelete
 25. @ராவணன்
  :-)

  //KANA VARO said...
  கமலை யாருக்குத்தான் பிடிக்காது. பகிர்வுக்கு நன்றி//
  :-) நன்றி!

  ReplyDelete
 26. நடிப்யே அறிந்து சுவைத்து அனுபவித்து நடிக்க கூடிய
  நல்ல நடிகர் நான் அவர் ரசிகன் என்பதில் எனக்கு பெருமைபடுறேன்

  ReplyDelete
 27. ஒரு ரசிகனாக சரியாகக் கணித்து வடித்துள்ளீர்கள்...

  (நான் நடிகரின் ரசிகனல்ல அவர்கள் நடிப்பின் ரசிகன்...)

  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  பொது அறிவுக் கவிதைகள் - 4

  ReplyDelete
 28. கமலை நல்ல நடிகர் என ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் மிகை நடிப்பில்லாதவர் என்றெல்லாம் சொல்ல இயலாது.

  ஜெமினி போல இயல்பான நடிகர்கள் புதிய கிராமப் பட்ங்களில் இப்போ வாராங்க.

  ReplyDelete
 29. //கமல் கெட்டவன், மோசமானவன். அப்போ கமல் ரசிகனும் அப்படித்தானே? அதுவும் கமல் சரிகாவைப் பிரிந்ததும் இன்னும் நிலைமை மோசமாக, கமல் ரசிகனென்று வெளில தெரிந்தாலே கேவலமான 'லுக்' ஒன்று விடுவார்கள். ஆனா யாருகிட்ட?//
  நானும் அனுபவப்பட்டுள்ளேன் .....
  கமல் திறமையான நடிகர்தான் .... நடிப்பை தவிர்த்து பார்த்தாலே அவரிடம் எராளமான திறமைகள் உள்ளன... அனால் ஒழுக்கத்தில் அவராகவே தன்னை தாழ்த்திக்கொள்கிறார் !
  இருந்தாலும் நீங்கள் சொல்வது சரிதான், கலைஞர்களின் 'கலையை ' மட்டும் ரசித்து அவர்களின் சொந்த வாழ்கையை பற்றி ஆராய்சி செய்யாமல் இருப்பதே நல்லது ...
  எனக்கு பிடித்த கமல் படங்களில் அன்பே சிவம். மூன்றாம் பிறை பேசும் படம் நாயகன் என ஒரு பட்டியலே உள்ளது!

  ReplyDelete
 30. ஜீ! உங்களுக்காகவே இது.......
  கிஷ்கி: உலக நாயகனுக்கு பாராட்டு விழா அவரோட ஆஸ்தான TV ஆன விஜயில் நடந்த போது ஒரு சம்பவம்...
  நடிகை மீனா:....என்ன சொல்ரது!....ம்......(கஷ்டப்பட்டு யோசிச்சு..) கமல் ஒரு "Encyclopedia".
  என்றார்.
  உடனேயே குறுக்கிட்ட கமல்: அதற்க்கு "அகராதி" என்று அழகான தமிழ் பெயர் கூட உண்டு மீனா அவர்களே... என்று தன் தமிழ் பற்றையும் "புலமையையும்" உடனடியாகவே "Expose"(!), சாரி(? - மன்னிக்கவும் என்டதை தான் தமிழ்ல சொல்றன்)...."வெளிப்படுத்தினார்".
  பி.கு:Encyclopedia - கலைக்களஞ்சியம்(இதுக்கு இப்பிடியா பெயர் வச்சிருக்காங்க...ஏம்பா சொல்லவே இல்ல!)

  ReplyDelete
 31. எனக்கு இப்பவும் கமலைப் பிடிக்கும். உங்கள மாதிரியேதான் எனக்கு முதல்ல ரொம்ப பிடிச்ச நடிகர் விஜய்தான். பிறகுதான் தீவிர கமல் ரசிகனாக மாறிப்போனேன்.

  அன்பே சிவம் ஒரு 15 தடவை பார்த்திருப்பேன். இப்பொழுதும் அடிக்கடி :))

  ReplyDelete

Followers

Blog Archive

Powered by Blogger.

Archives

Follow by Email

Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |