Wednesday, December 1, 2010

குவாட்டர் வித் சீனு!

வணக்கம்! இன்றைய குவாட்டர் வித் சீனு நிகழ்ச்சில நம்மை சந்திக்க வந்திருக்கிற பிரபலம்....குடிகர் 'கட்டிங்' குமார்.

நடிப்பவர்களை நடிகர் என்கிறோம் அப்பிடின்னா குடிக்கிறவன் குடிகன்தானே?


வணக்கம் 'கட்டிங்' குமார்!
வணக்கங்க!

இந்த நிகழ்சிக்கு வந்தது..,
ரொம்ப ஹாப்பியா இருக்கு! (ஆ குஜாலா கீதுங்க!)

இந்த 'கட்டிங்'கிற டைட்டில் எப்பிடி?
அது (குடி) மக்களா எனக்குக் குடுத்த பட்டம்...முதன்முதலா அப்பிடி அழைச்சது ப்ரொடியூசர் 'கொக்டெய்ல்' மோகன். அவருக்கு ரொம்ப 'கடன்' பட்டிருக்கேன்.

இந்தத்துறைக்கு நீங்க வந்தது, திட்டமிட்டா இல்லை ஆக்ஸிடென்ட்டா?
(இல்லைங்க வந்தப்புறம்தான் நிறைய ஆக்ஸிடென்ட் ஆகியிருக்கு..வந்தது இன்சிடென்ட் தான்!)
ஆக்சுவலா, சின்ன வயசுல ஸ்கூல் படிக்கும்போதே எதையாவது சாதிக்கணும்னு ஒரே ஆர்வம்

குறிப்பா எப்பிடி இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தீங்க?
நாம தேர்ந்தெடுக்கிற விஷயம் நாட்டுக்கு பயன்படணும்னு உறுதியா இருந்தேன். இந்ததுறைலதான் அரசுக்கு நிறைய வருமானம் வருதுன்னு. 

(அட நீங்க வேற! பியர் குடிச்சா குண்டாகிடலாம்னு எவனோ ஒரு நாதாரி சொன்னத நம்பி, குடிகாரனானதுதான் கண்டமிச்சம்!)

உங்கள் முதல் அனுபவத்தைப் பற்றி சொல்லுங்க?
முதன்முதலா பார் முன்னாடி நின்னப்போ, ரொம்ப நெர்வர்ஸ்ஸா  ...யூ நோ ரொம்ப...என்னமோ எல்லாரும் என்னையே பாக்கிறமாதிரி ஒரு மனப் 'பிராந்தி', ஸோ எச்சைட்டிங்.. அதே நேரத்தில ஒரு த்ரில்லா, சாதிக்கணும்னு ஒரு வேகம்.

உங்க குடும்பத்தில யாராவது இந்த பீல்டுல?
இல்லைங்க நான்தான் முதல் தலைமுறை குடிகன்

வீட்ல எல்லாரும் எப்பிடி பீல் பண்ணாங்க?
எப்பவுமே எங்க வீட்ல என்னோட விருப்பத்துக்கு குறுக்க நிக்க மாட்டாங்க (தலை முழுகிட்டாங்க!)
அப்புறம் ரொம்ப என்கரேஜ் பண்ணினாங்க (வெளில போடா நாயே..!)

உங்களை மிகவும் கவர்ந்த பிரபலம்?
நெப்போலியன்...ஏன்னா அவன் 'களத்தில'  இறங்கும் மட்டும்தான் நாம பேசுவோம். அவன் இறங்கிட்டான்னா...அப்புறம் அவன்தான் எல்லாத்தையும் முடிவு பண்ணுவான்!

நீங்க எந்த நெப்போலியனப பற்றி?
நம்ம நெப்போலியன்தான்!
.....??

காதல் பற்றி என்ன நினைக்கிறீங்க?
அது ஒரு தனி போதை ஒவ்வொரு நிலைலயும் ஒவ்வொரு மாதிரி...

காதல சொல்லுமட்டும் அவஸ்தை..அது பாத்திங்கன்னா..
புல்லா சரக்கடிச்சிட்டு அப்புறம் ரெண்டு ஆம்லெட்ட முழுங்கினா வாந்தி, வர்ற மாதிரியும் இருக்கும் ஆனா வராது..ஒரு விதமான குழப்பமா..!

சொல்லிட்டம்னா, புல் மப்பில தலைவலியோட இருந்திட்டு... வாந்தி எடுத்த உடனே இருக்கும் பாருங்க அப்பிடி ஒரு ரிலீப்!

காதல் மட்டும் ஒக்கே ஆயிடுச்சுன்னு வைங்க....
அது ஒரு தனி சுகம்...ஜின் அடிச்சிட்டு பீச்சுல நடந்து போற மாதிரி...!

இனி உங்க நண்பர்கள் உங்களைப் பற்றி என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்...!

விநியோகஸ்தர் 'வோட்கா' வேணு - நானும் குமாரும் அந்தக் காலத்தில இருந்தே ஒரே கிளாஸ்ல சரக்கடிக்கிற அளவு நண்பர்கள், படிப்படியா முன்னேறி, இந்த நிலைக்கு வந்தோம். அவர் மேலும் சாதிக்கணும் ..!

ஆமாமா நாங்க ரெண்டுபேரும் எப்பிடின்னா..சுருக்கமா சொன்னா..வோட்காவும் ஒரேஞ் ஜூசும் மாதிரி!

தயாரிப்பாளர் 'கொக்டெய்ல்' மோகன்- குமார் தம்பிக்கு எப்பவுமே ஒரு அடங்காத, தணியாத 'தாகம்' இருக்கு, அதுதான் அவரை இவ்வளவு பிரபலப் படுத்தி இருக்கு. அவரோட தாகத்துக்கு 'தண்ணீர் ' ஊத்திறதில நான் பெருமைப்படறேன்!

'வோட்கா' வேணு -அதில பாருங்க அவர்கிட்ட எப்பவுமே பிடிச்சது முடியாதுங்கிற வார்த்தைய அவர் எப்பவுமே சொன்னதில்ல.

எவ்வளவுதான் சரக்கடிச்சு மட்டையானாலும், இன்னொரு கட்டிங்? ன்னு கேட்டா, குடிச்சிட்டு வாந்தி எடுப்பாரே தவிர, முடியாதுன்னு மறுத்ததில்ல,
அந்த தன்னம்பிக்கை ரொம்ப பெரிய விஷயம்!

'ஹி ஹி...'

'கொக்டெய்ல்' மோகன் - அவர் தனக்குன்னு எதையுமே வச்சுக் கொண்டதில்ல! சமயத்தில தன்னோட மொபைல், வோட்ச் கூட நம்ம பசங்களுக்கு அன்பளிப்பா குடுத்திட்டுப் போயிடுவார்

(அடப்பாவி அதெல்லாம் அங்கேயா தொலைச்சேன்?)

அவர் முதன்முறையா அறிமுகமாகும்போதே 'ஸ்பொட்'ல கவனிச்சேன் ஒரே டேக்லயே முதல் 'ஷாட்' ஒக்கே ஆகிடுச்சு அப்பவே தெரியும் பெரிய அளவில ஒரு 'ரவுண்டு' வருவாருன்னு.

சொல்லுங்க குமார் உங்க நெக்ஸ்ட் ப்ராஜெக்ட்?
தீபாவளி ப்ராஜெக்ட் சிறப்புப் பார்வை இன்னும் வீட்ல போயிட்டிருக்கிறதால இன்னும் முடிவு பண்......

(ஆகா இப்போ நம்ம ரமேஷோட பார்ட்டி இருக்கில்ல?...எப்பிடி மறந்தேன்?)

எனக்கு ஒரு முக்கியமான அப்பாய்ன்ட்மென்ட் இருப்பதால் நிகழ்ச்சியை இத்துடன் நிறை..

இருங்க அதெல்லாம் நான்தான்....
எங்க போறீங்க?

பாட்டில்ல கையெழுத்தாவது போட். ...
கமேராமேன் புடிங்க அந்தாளை...!19 comments:

 1. பேட்டி எடுத்தது நீங்கதானா?:-)

  ReplyDelete
 2. //காதல சொல்லுமட்டும் அவஸ்தை..அது பாத்திங்கன்னா..
  புல்லா சரக்கடிச்சிட்டு அப்புறம் ரெண்டு ஆம்லெட்ட முழுங்கினா வாந்தி, வர்ற மாதிரியும் இருக்கும் ஆனா வராது..ஒரு விதமான குழப்பமா..!//

  ஹா ஹா

  ReplyDelete
 3. //எஸ்.கே said...
  பேட்டி எடுத்தது நீங்கதானா?//
  :-)

  @Chitra
  :-)

  @அன்பரசன்
  :-)

  ReplyDelete
 4. உண்மையை சொல்லுங்க உங்களை பேட்டி எடுத்தவர் யார்? நீங்க பீல்டுக்கு வந்து எத்தனை நாள் ஆச்சு?

  ReplyDelete
 5. //நாகராஜசோழன் MA said...
  உண்மையை சொல்லுங்க உங்களை பேட்டி எடுத்தவர் யார்? நீங்க பீல்டுக்கு வந்து எத்தனை நாள் ஆச்சு?//

  ஹா ஹா வாங்க தலைவரே!

  ReplyDelete
 6. எப்டி எல்லாம் யோசிகராங்கப்பா

  ReplyDelete
 7. கலக்கல்ஸ்.. ஜீ..ஒரு குவாட்டர் சொல்லுங்களேன்....
  .

  ReplyDelete
 8. /////(அடப்பாவி அதெல்லாம் அங்கேயா தொலைச்சேன்?)///

  அதிலென்ன சந்தேகம் அருமை.. சகோதரா...

  ReplyDelete
 9. @Arun Prasath
  வாங்க!

  @Jana
  //ஜீ..ஒரு குவாட்டர் சொல்லுங்களேன்//
  சொல்லிட்டாப் போச்சு!

  @ம.தி.சுதா
  //அதிலென்ன சந்தேகம் அருமை.. சகோதரா//
  ஆகா! கூடவே இருந்திருபான்களோ?

  ReplyDelete
 10. //Blogger எஸ்.கே said...

  பேட்டி எடுத்தது நீங்கதானா?:-)

  பேட்டி எடுத்தது அவரு இல்லீங்க பேட்டி கொடுத்தது அவரு...

  ReplyDelete
 11. நீங்க பாலகுமாரன் நாவல் படிக்கறவறா.. அப்ப நம்மாலு எனக்கும் பாலகுமாரன் (பழைய) நாவல்லாம் புடிக்கும்...

  ReplyDelete
 12. @பிரியமுடன் ரமேஷ்
  அதேதான் பழைய பாலகுமாரன்!

  ReplyDelete
 13. செம கலக்கலா இருக்கு...:))

  ReplyDelete

Followers

Blog Archive

Powered by Blogger.

Archives

Follow by Email

Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |