Sunday, August 15, 2010

தல, தலைவர், வாத்தியார்


வாழ்வின் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு செயல்களிலும் ஏதோ ஒரு வகையில் தன்னை நினைவூட்டுகிறார். எனக்கு மட்டுமல்ல எத்தனையோ பேருக்கு.

ஒரு எழுத்தாளனால் ஒவ்வொரு வாசகர்களிலும் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா?

எங்களுக்கெல்லாம் 'தல' , 'தலைவர்', எல்லாமே அவர்தான்.

அவர்தான் 'வாத்தியார்'.
அவர் சொல்லிக் கொடுத்ததைப் போல் யாருமே எதையும் சொன்னதில்லை, சொல்லவும் முடியாது.

        எனக்கு பதின்மூன்று வயதில் அறிமுகமானார். ஒரு கணேஷ்-வசந்த் கதை மூலம். வீட்டில் ஏற்கனவே தெரிந்திருந்ததால், அவர் பெண்ணா என்ற குழப்பம் இருக்கவில்லை. நிறையப் பேருக்கு அப்படி ஒரு குழப்பம் வேறு.

(நிறைய பேர் சுஜாதா என்றாலே, சினிமா அம்மா சுஜாதா, பாடகி சுஜாதா என்று....ஒருத்தன் அந்நியன் வந்தபோது பாடகி சுஜாதாவா  வசனம் எழுதினது? ன்னு கேட்டு என்னைக் கலவரப் படுத்தினான். ம்ம்ம் நம்ம தமிழரின் வாசிப்புப் பழக்கம் அப்படி....
அதிலும் நம்ம பெரும்பான்மையான பெண்கள் வாசிப்பது, ரமணி சந்திரன் என்பவர் படைக்கும் மாபெரும் 'இலக்கியக் காவியங்களை').

சுஜாதா இலக்கியவாதியா இல்லையா என்ற குழப்பம் வேறு பலருக்கு.

        ஒரு உண்மையான இலக்கியவாதியாக  தான் வாழுகின்ற சூழ்நிலையை, சமகாலத்து நிகழ்வுகளை தனது எழுத்துக்களில் பிரதிபலித்தார், ஏனைய உலக இலக்கியங்களை, கருத்துக்களை அறிமுகம் செய்து வைத்தார். இந்தப் பணியை அவரைப் போல் யாரும் செம்மையாகச் செய்ததில்லை.

தன்னுடைய பொழுது போக்கு கதைகளான கணேஷ்-வசந்த் கதைகளினூடாக கூட சில்வியா பிளாத், நீட்ஷே போன்றவர்களை எங்களுக்கு அறிமுகம் செய்தார்.

'கணையாழியின் கடைசிப் பக்கங்கள்' அவர் தொடாத விஷயங்களே இல்லை. முப்பது வருஷம் கழித்து வந்த 'கற்றதும் பெற்றதும்' தொடரிலும் மீண்டும் அதே உற்சாகம், துள்ளல், இளமை.

திரைப்படத் துறையில் அவரின் பங்களிப்புகள் ஏராளம்.

அனாலும் 'சினிமா அவரைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை' நடிகர் கமல்ஹாசன்.
அந்நியன் விமர்சனத்தில், 'multiple personality disorder (உபயம்- சுஜாதா) என்று விகடன் எழுதியது.

குறிப்பாக இயக்குனர் ஷங்கரின் படங்களில் அவரின் 'டச்' படத்தின் வசனங்களில் தெரியும்.
இந்தியன் - 'புத்திக்கு தெரியுது, மனசுக்கு தெரியல'
முதல்வன் - முதல்வரின் நேர்காணல் வசனங்கள், அந்தப் பிரபலமான இறுதி வசனம் ' that was a great interview  '
அந்நியன் - 'அஞ்சு பைசா திருடினா தப்பா?' வசனங்கள்.

இலக்கியங்கள் காலங்களைக் கடந்தவை. ஆனால், தமிழ் இலக்கியவாதிகள் என்று தங்களைக் கூறிக்கொள்பவர்களின் எழுத்துக்கள் ஒரு கால வரையறைக்குட்பட்டவை. முப்பது வருடத்துக்கு முன் எழுதிய எழுத்து இபொழுது சூழ்நிலைக்கு பொருந்தாது, ஒரு வயது போன தன்மை தெரியும். வாசிக்க சோர்வு தட்டும். 

ஆனால் சுஜாதா முப்பது வருஷத்துக்கு முன் எழுதியது இப்பொழும் புதிதாகவே தோன்றுகிறது. இன்னும் முப்பது வருஷம் கழிந்தபின் வரும் இளைஞனுக்கும் புதிதாகவே இருக்கும்.

அவர் காலங்களைக் கடந்தவர், இறுதிவரை இளைஞனாகவே இருந்தார், அவர் எழுத்துக்களும் என்றும் இளமையானவை.

இறுதி நாட்களில் கூட 'கற்றதும் பெற்றதும்' தொடரில் எழுதினார் 'நான் வழமையாகச் செல்லும் பூங்காவில் ஒரு எழுபது வயதுத் தாத்தாவைப் பார்ப்பேன்'. அதுதான் சுஜாதா! 

6 comments:

  1. எனக்கும் அவர்தான்..தல, தலைவர், வாத்தியார்

    நீங்கள் சொல்லிருப்பவை அனைத்தும் சுஜாதா படித்தவர்கள் யாராலையும் மறுக்க முடியாதவை. தலைவரைப்பற்றி நினைவு கூர்ந்ததிற்கு நன்றி..

    ReplyDelete
  2. நன்றி Vijay! உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்! :)

    ReplyDelete
  3. thalaiva....keesitappa....neenga katchi thuranga! naan vaaraen kodi thookka!

    ReplyDelete
  4. நன்றி ®theep!

    ReplyDelete
  5. சுஜாதாவிடம் இரண்டு மணிநேரம் உரையாடியது என் வாழ்வின் மிகச்சிறந்த தருணம்.
    நீங்களும் சுஜாதாவின் தீவிர ரசிகர் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

    ReplyDelete