மிகத் தேர்ந்த முன்னணி கலைஞர்கள், Oscar சாதனையாளர்களான ஏ.ஆர்.ரஹ்மான், ரசூல் பூக்குட்டி, இந்தியாவின் மிக முக்கிய ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான சந்தோஷ் சிவன் இவர்களின் துணையோடு மணிரத்னம் வழங்கியுள்ள மிகுந்த எதிர்பார்ப்போடு வந்த படம்.
மிகச் சிறப்பான ஒளிப்பதிவு, இயற்கை எழில் மிக்க சூழல் நிச்சயமாக ஹோலிவூட் படங்களுக்கு எவ்விதத்திலும் குறையாத காட்சியமைப்பு, நடிகர்கள், டெக்னீஷியன்கள், ரிஸ்க் எடுத்து, உயிரைக்கொடுத்து, உழைத்திருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது.
இனி, எனது அனுபவம்.
நான் முதலில் பார்ப்பதாக இருக்கவில்லை. பார்த்தபின்? அந்த இனிய அனுபவத்தை வார்த்தைகளால் விவரிப்பது கடினம்.
முதலில் படம் சரியில்லை எனப் படத்தின் குறைகளை மட்டும் பட்டியல் இடுபவர்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். (நல்ல விஷயங்களைப் பாருங்கய்யா...முடியலயா? நான் சொல்றேன்)
ஒரு தமிழனின் வளர்ச்சி பொறுக்காமல் செய்யும் சதி முயற்சிகள் தான் இவை என ஆணித்தரமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கதை, திரைக்கதை நிச்சயமாக Hollywood க்கு சவால் விடும். இனி உலக சினிமாவில் தமிழுக்கென்று ஒரு தனியிடம் ஒதுக்கப் படும் என்றே எனக்குத் தோன்றுகிறது.
ஆனா, படத்தில் எல்லோரும் கத்துகிறார்கள் ஒருவேளை அருவிச்சத்தம் காரணமோ? அப்படியானால் ரசூல் பூக்குட்டி? அவரை வைத்துக் கொண்டே இப்படி ரியாலிட்டி போகாமல் கத்திக் கத்திப் படமாக்கியதில் இயக்குனரின் 'நேர்மை' தெரிகிறது.
இருந்தாலும் எல்லாரும் கழுத்து நரம்பு புடைக்க கத்திக் கத்திப் பேசும்போது (குறிப்பாக ஐஸ்), மனசுக்கு கஷ்டமா இருக்கு.
சுஹாசினி மணிரத்னம் தான் வசனமாம். இப்படி ஒரு கவித்துவமான, இலக்கியச் செறிவுமிக்க வசனங்களை நான் இதுவரை கேட்டதில்லை.
தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஒரு நல்ல வசனகர்த்தா கிடைத்து விட்டார்.
வீரய்யாவாக வரும் விக்ரம் வீரப்பனை மாதிரியே இருக்கிறார்.அவர் பேசும் கவிதை வரிகள், அப்பப்பா... டன்டன்டன்டன்டனக்கா...டுப்டுப்டுப்டுப்டுப்....பட்பட்பட்பட்பட்....கொக்
கொக்கொக்கொக்....பக்பக்பக்பக்பக்பக்....இது சாம்பிள் தான். இன்னும் நிறைய.
நான்கூட முதலில் ஏதோ கெட்டவார்த்தைன்னு தான் நினைச்சேன். அத்தனையும் பைந்தமிழ் (முடியலடா ராமாஆஆஆ....!)
சில காட்சிகளில் பிதாமகன் போலவும் தெரிகிறார். அவரும் ஐசும் இக்கட்டான சூழ்நிலையில் பாரதியார் கவிதைகளை மாறி மாறி பேசுவது நல்ல கொமடி.
எல்லாரும் அழுக்காக தெரியும் காட்சிகளிலும் ஐஸ் மட்டும் அழகாக... என்ன வயசு போனது தெரியுது. ஐஸுக்கு படத்தில் எவ்வளவு இனிமையான குரல். (அந்தக் குரலில் ஒரு பாடல் பாடியிருந்தா சூப்பரா இருந்திருக்கும் ஏதோ நாங்க கொடுத்து வைத்தது அவ்வளவுதான்).
பிரிதிவிராஜ், வரும்போதெல்லாம் மனுஷன் காட்டுக் கத்தல் தான். ஏன்? கேட்கவா முடியும்? கேட்டா 'எல்லாரும் கத்துறாங்க அதான் நானும்.....' அப்படித்தானே சொல்லுவாரு? அவர் தன்னை முரட்டுத் தனமான போலிசாக காண்பிக்க முடிந்தளவு முயற்சி செய்ய, எங்களுக்குத் தான் சிரிப்பு சிரிப்பா வருது.
ரஞ்சிதாவுக்கு இவ்வளவு ரசிகர்களா? சிறிசுகள் முதல் பெரிசுகள் வரை ஆர்வமாக பார்ப்பதை காண முடிந்தது (எல்லாம் நித்தியின் மகிமை)
பாவம் கார்த்திக் - இவ்வளவு வருடம் கழித்து நடிக்க வந்தா திரும்பவும் அதே பழைய குரங்கு காரெக்டர் தானா? (இருந்தாலும் நீங்க ரொம்ப மோசம் மணி)
கார்த்திக் தான் குரங்கு ன்னு சொன்னா நாங்க நம்ப மாட்டமா? (ஏற்கனவே பல பழைய படங்களில் அவர் அப்படித்.....சரி விடுங்க)
வயசான காலத்தில் அங்கும் இங்கும் தாவி, குதித்து இசகு பிசகாக அடிபட்டு விட்டால்? பேசாமல் அவருக்கு ஒரு வால் வைத்து விட்டிருந்தால் போதாதா? (ஹோலிவூட் காரன்லாம் நோஸ்ல பிங்கர் அ வச்சிருப்பானே?)
வீரய்யாவின் தங்கையை போலிஸ் பிடிக்கும்போது அவளைக் காப்பாற்றாமல் தப்பியோடினான் என்று மாப்பிள்ளைக்கு கையை வெட்டும் வீரய்யா, கற்பழித்த போலிசுக்கு வெறுமனே தலையை மொட்டையடித்து விட்டு விடுகிறான்.
எப்பூடி.....? (இப்படி ஒரு ஹோலிவூட் காரனால் சிந்திக்க முடியுமா? ஏன் எந்த உலக சினிமாவிலாவது இப்படி ஒரு காட்சியை பார்த்திருக்கிறீர்களா?)
முதன்முறையாக ஒரு தமிழன் உட்கார்ந்து யோசிச்சிருக்கான்யா.... நாம எல்லாரும் பெருமைப்பட வேணாமா?
இப்பவாவது நம்புறிங்களா, இது ஒரு 'வித்தியாசமான' படம் என்று?
இறுதியாக ஒன்றை மட்டும் கூறிக் கொள்கிறேன். யார் என்ன கூறினாலும், எவ்வளவு பொய்ப் பிரசாரங்கள் செய்தாலும் ராவணன் மணிரத்னத்துக்கு மட்டுமல்ல, தமிழ் சினிமாவுக்கே ஒரு 'லைட் போஸ்ட்'. (எவ்வளவு நாளைக்குத் தான் 'மைல்கல்?')
| Tweet |
|





ஹும்.. மணிரத்னத்துக்கே படம் எடுக்கறது எப்படின்னு சொல்லிக்கொடுக்கற அளவுக்கு வளர்ந்துட்டீங்க.. வாழ்த்துக்கள்
ReplyDelete